தனுஷூக்கு சிவகார்த்திகேயன் துரோகம் செய்தாரா?.. பிரபலம் சொன்ன பகீர் தகவல்!
சென்னை: சிவகார்த்திகேயன் பராசக்தி படப்பிடிப்பில் பிசியாக இருக்கின்றார். மறுபக்கம் அவரது 24 ஆவது பட வேலைகளும் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கின்றது. சிவகார்த்திகேயன் தலையில் தலையிட்டு இயக்குநர்களை குழப்பி வருகிறார். அதுமட்டுமில்லாமல் தனுஷ் செய்வதை எல்லாம் செய்து தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். இதுகுறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி அளித்துள்ளார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது கேரியரில் கவனம் செலுத்தாமல் தனுஷ் என்ன எல்லாம் செய்கிறாரோ அதையே சிவகார்த்திகேயனும் செய்ய நினைக்கிறார். இது சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு பெரிய தடையாக அமைந்துள்ளது. அட்லீ, சிவகார்த்திகேயன் அட்லியின் மனைவி பிரியா, நகைச்சுவை நடிகர் சதீஷ் நான்கு பெருமையை சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே நல்ல நண்பர்களாக இருந்தனர். அதன் பிறகு தான், சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார். அப்போது தான் பாண்டியராஜ், இயக்கிய மெரீனா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் தான், டி இமானின் பரிந்துரையின் பெயரில் மனம்கொத்தி பறவை என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

சிவகார்த்திகேயன்: அப்போது, அட்லீக்கு ராஜா ராணி திரைப்படத்தை இயக்கவும் வாய்ப்பு கிடைத்தது. அட்லீயும் சிவகார்த்திகேயனும் நண்பர்கள் என்பதால் அந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கலாம் என நினைத்தார். ஆனால், தயாரிப்பு நிறுவனம் ஆர்யாவை நடிக்க வைக்க வேண்டும் என கூறியதால், அட்லீ வேறு வழியில்லாமல் ராஜா ராணி படத்தில் ஆர்யாவை நடிக்க வைத்தார்.
தனுஷ் வாய்ப்பு கொடுத்தார்: அதன்பின் தான் 'த்ரீ' திரைப்படத்தில் தனுஷின் நண்பராக காமெடி வேடத்தில் சிவகார்த்திகேயன் நடித்தார். படப்பிடிப்பில் அனைவரும் நெருங்கி பழகியதால், சிவக்கார்த்திகேயன், அனிருத், தனுஷ் மூவரும் நல்ல நண்பர்களாகி விட்டனர். அப்போது தான் சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து ஒரு படம் எடுக்கலாம் என தனுஷுக்கு யோசனை வந்துள்ளது. இதனால், பெரிய அளவில் செலவு செய்து எதிர்நீச்சல் என்ற திரைப்படத்தை எடுத்தார். அந்த திரைப்படத்தில் நயன்தாராவை ஒரே ஒரு பாட்டுக்கு நடனமாடவும் வைத்திருந்தார் தனுஷ். அந்த நேரத்தில் தனுஷ் மட்டும் சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து எதிர்நீச்சல் படத்தை எடுக்கவில்லை என்றால், சிவகார்த்திகேயன் பத்தில் ஒரு நடிகராக தான் இருந்திருப்பார்.
சிவகார்த்திகேயன் செய்த துரோகம்: அதன் பின், தனுஷ் சிவகார்த்திகேயன் வைத்து இரண்டாவதாக காக்கி சட்டை என்ற படத்தை தயாரித்தார். அந்த திரைப்படமும் நல்ல லாபத்தை கொடுத்ததால், மூன்றாவதாக ஒரு திரைப்படத்தை எடுப்பதற்காக சிவகார்த்திகேயனை அணுகிய போது, சிவகார்த்திகேயன் வேறு ஒரு படத்தில் கமிட்டாகி விட்டதாகவும், அந்த படத்தில் நல்ல சம்பளம் தருகிறார்கள் என சொல்லி இருக்கிறார். அது மட்டுமல்லாமல், உங்கள் படத்தில் நடிக்க சம்பளம் தருவீர்கள் என கேட்டதால் தனுஷ் அதிர்ச்சியடைந்து எதுவுமே சொல்லாமல் வெளியே வந்திருக்கிறார். இதனால், தனுஷ் சிவகார்த்திகேயனுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.
கதையில் தலையிடுகிறார்: அதே நேரம், அனிருத்தும் சிவகார்த்திகேயனும் நெருங்கிய நண்பர்களாகி விட அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களுக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். தனுஷ் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், டாக்டர், ரெமோ என அடுத்தடுத்து திரைப்படங்கள் வெற்றி பெற ஆரம்பித்துவிட்டதால், தான் ஒரு ஸ்டார் நடிகர் என எண்ணம் சிவகார்த்திகேயனுக்கு வர, தனுஷ் என்னையெல்லாம் செய்கிறாரோ அதையெல்லாம் வேண்டுமென்றே சிவகார்த்திகேயன் செய்ய ஆரம்பித்தார். தனுஷின் அலுவலகத்துக்கு எதிரே வேண்டுமென்றே சிவகார்த்திகேயனும் ஒரு அலுவலகத்தை போட்டு, அதை தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அது மட்டுமல்லாமல் தனுஷ் கார் வாங்கினால், அதே போல சிவகார்த்திகேயனும் வேண்டுமென்றே கார் வாங்கி அவருடன் போட்டி போட ஆரம்பித்து விட்டார். அதுமட்டுமில்லாமல் படத்தின் கதையில் சிவகார்த்திகேயன் அதிகம் தலையிடுகிறார். இதனால் தான் பிரின்ஸ், மாவீரன், ஹீரோ, படங்கள் தோல்வி அடைந்தது என்று பாலாஜி பிரபு அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











