Dayangaram: விஜே சித்துவின் 'டயங்கரம்' தேறுமா? தேறாதா?.. பிரபலம் சொல்வது என்ன?
சென்னை: யூடியூபில் விதவிதமான வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்து, தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார் விஜே சித்து. இவர் நடிகர், பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படத்தில் அவரின் நண்பராக நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து விஜே சித்து, இயக்குநர் அவதாரம் எடுத்து இருக்கிறார். டயங்கரம் என வித்தியாசமான தலைப்பு வைத்து இருக்கும் இப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்று படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், டயங்கரம் படம் வெற்றி பெறுவா... இல்லை தோல்வி அடையுமா என்று இணையத்தில் பெரும் விவாதமே நடந்து வரும் நிலையில், தயாரிப்பாளர் பாலாஜி பிரபு Gem Cinemas இதுகுறித்து பேசி உள்ளாத்ர.
அதில், விஜே சித்து, கும்பகோணத்தில் இருந்து இங்கே வந்த போது, ஒரு வேளை சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டார். சின்ன சின்ன சேனல்களில் பிராங் ஷோ மூலம் பிரபலமான இவர், பிளாக் ஷிப் யூடியூப் சேனலில் பிராங் ஷோ மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் விஜே சித்து. அந்த சேனலில் இருந்து விலகிய இவர், தனியாக, விஜே சித்து விலாக்ஸ் என்கிற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்த சேனலில் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, டூர் செல்வது, பிரபலங்களை வைத்து மொட்டை பார்ட்டி என இன்றைய இளசுகளுக்கு பிடித்தமான வகையில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சேனல் ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே இவரின் வளர்ச்சி வியக்கக்கூடிய வகையில் இருக்கிறது.

விஜே சித்துவின் டயங்கரம்: யூடியூப் சேனலில் கலக்கி வந்த விஜே சித்து, அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனின் கல்லூரி நண்பனாக நடித்திருந்தார். இந்த படத்தை படத்தை தொடர்ந்து, விஜே சித்து இயக்குநர் அவதாரம் எடுத்து இருக்கிறார். விஜே சித்து நடித்து இயக்கும் படத்திற்கு 'டயங்கரம்' என தலைப்பு வைக்கப்பட்டு அண்மையில் பூஜை போடப்பட்டுள்ளது. அந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனர் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். அது மட்டுமில்லாமல் விஜே சித்துவுடன் இருக்கும் நண்பர்கள் அனைவரும் திறமையானவர்கள், அவர்கள் புதுபுது ஐடியாவை கொடுத்து படத்தின் கதையை மெறுகேற்றி டயங்கரம் படத்தை நிச்சயமாக வெற்றிப்படமாக்கி விடுவார்கள்.
பிரபலம் சொல்வது என்ன?: எனக்கு தெரிந்து இந்த திரைப்படம் வியாபார ரீதியாக வெற்றிப்படமாக இருக்கும், விஜே சித்துவிற்கு பெயரை, புகழை கொடுக்கும் ஒரு வெற்றிப்படமாக இருக்கும். விஜே சித்துவின் வீடியோ ஒன் மில்லியன், இரண்டு மில்லியன் என அனைத்து வீடியோவும் மில்லியன் கணக்கில் தான் போகிறது. அவருக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதால் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











