twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லாக்டவுனுக்கு பின் சிறு மீடியம் பட்ஜெட் தயாரிப்பாளர்கள் இதை பண்ணினா தப்பிக்கலாம்? தனஞ்செயன் யோசனை!

    By
    |

    சென்னை: லாக்டவுனுக்கு பிறகு சிறு- மீடியம் பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் என்ன செய்தால், நஷ்டத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் யோசனை தெரிவித்துள்ளார்.

    கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக, பல நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.

    இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சினிமா தியேட்டர்கள், மால்கள், மூடப்பட்டுள்ளன. இந்த லாக்டவுன் இந்த மாதம் முழுவதும் தொடரும் என்று கூறப்படுகிறது.

    அங்கே என்ன தெரிகிறது.. ரெட் வெல்வெட் கேக் போல போஸ் கொடுத்த யாஷிகா.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!அங்கே என்ன தெரிகிறது.. ரெட் வெல்வெட் கேக் போல போஸ் கொடுத்த யாஷிகா.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

    தயாரிப்பாளர் தனஞ்செயன்

    தயாரிப்பாளர் தனஞ்செயன்

    இந்நிலையில், லாக்டவுனுக்குப் பிறகு சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் தயாரிப்பாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் யோசனை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: ஏன் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் தயாரிப்பாளர்கள் என்றால், ஒரு வருஷத்தில், 200 படம் வருதுன்னா, அதுல 160 படங்கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்கள்தான்.

    லாக்டவுன்

    லாக்டவுன்

    ரூ.5, 6 கோடிகள்ல எடுக்கப்படற படங்கள் இந்த பட்ஜெட் படங்கள். இந்தப் பட்ஜெட் படங்களோட சக்சஸ் ரேட் ரொம்ப குறைவு. வெற்றி சதவிகிதம் 10 சதவிகிதம் கூட இருக்காது. ஜூன் மாதம் லாக்டவுன் விலக்கப்பட்டு ஜூலையில் தியேட்டர்கள் திறந்தால், இவர்கள் என்ன செய்ய வேண்டும்? இவங்களை 2 விதமா பிரிக்கலாம்.

    வெயிட் பண்ணுங்க

    வெயிட் பண்ணுங்க

    ஒன்னு, படங்களை இன்னும் தொடங்காத தயாரிப்பாளர்கள், மீதி, பாதி படம் முடிஞ்சு ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிற படங்களின் தயாரிப்பாளர்கள். இதுல படம் தொடங்காத தயாரிப்பாளரள், குறைந்தது இன்னும் 3 மாசம் வரை வெயிட் பண்ணுங்க. இன்டஸ்டரி என்ன மாதிரி செயல்படுது, படங்கள் ரிலீஸ் ஆகுதா? தியேட்டருக்கு மக்கள் வர்றாங்களா, வசூல் எப்படி வருதுன்னு ஸ்டடி பண்ணிட்டு தொடங்கலாம்.

    செலவை குறைக்கணும்

    செலவை குறைக்கணும்

    ஏன்னா, ஒரு சர்வே-யில், லாக்டவுன் முடிஞ்சு தியேட்டர்கள் திறந்தால், 79.69 சதவிகிதம் பேர் தியேட்டருக்கு போகமாட்டோம்னு சொல்லி இருக்காங்க. அதனால இன்னும் 6 மாசத்துக்கு மக்கள் தியேட்டருக்கு வருவாங்களான்னு தெரியல. அடுத்து, படங்களை பாதியில முடிச்சிருக்கிற தயாரிப்பாளர்கள், ஷூட்டிங்கை தொடங்கி முடிச்சிடலாம். படம் ரெடியா இருக்கிற தயாரிப்பாளர்கள் என்ன பண்ணலாம்னா, செலவை குறைக்கணும்.

    சம்பளம் குறைப்பு

    சம்பளம் குறைப்பு

    படத்துல பணியாற்றிய டெக்னீஷியன்கள்ட்ட சம்பளத்தை குறைக்கறதை பற்றி நேர்மையா பேசணும். இல்லைனா, படத்தை வெளியிடுவோம், லாபம் வந்ததுன்னா தாரோம்னு சொல்லுங்க. இதை கண்டிஷனா போட முடியாது. அக்ரிமென்ட் போட்டிருப்போம். அதனால கோரிக்கையா வைக்கலாம். ஃபைனான்சியர்கள்கிட்டயும் இதையே விளக்கணும்.

    ரிலீஸ் வரைமுறை

    ரிலீஸ் வரைமுறை

    பிறகு முறையான ரிலீஸ் வரைமுறையை, தயாரிப்பாளர்கள் வாராவாரம் பின்பற்றணும். ஒரு வாரத்துக்கு மூனு, நான்கு படங்களுக்கு மேல வெளியிடக் கூடாது. பெரிய படங்கள் அவங்க நினைச்ச தேதியில ரிலீஸ் பண்ணுவாங்க. இந்த படங்களை அப்படி பண்ண முடியாது. எல்லா தயாரிப்பாளர்களும் ஒன்றிணைந்து இந்த முடிவை எடுக்கணும்.

    டப்பிங் வியாபாரம்

    டப்பிங் வியாபாரம்

    இப்படி பண்ணினா, எல்லா படத்துக்கும் ஓரளவு லாபம் கிடைக்கும். இந்தி டப்பிங்ல ஆக்‌ஷன் படங்களுக்கு ஒரு வியாபாரம் இருக்கு. டிஜிட்டல், சேட்டிலைட், தெலுங்கு, மலையாளம், ஓவர்சீஸ் மார்க்கெட்.. இந்தி வியாபரங்களை எப்படி பண்ணணும்னு சிறு மீடியம் பட்ஜெட் தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து செய்தா, இந்த பிரச்னைகள்ல இருந்து வெளிவர முடியும்' என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Producer G.Dhananjayan explains what small bidget Producers to do post lockdown?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X