விஜய்க்கு ஒரு நாளைக்கு இத்தனை கோடி.. அதர்வாவோட 7 படங்கள் வியாபாரம் ஆகல.. கே. ராஜன் பகீர்!
சென்னை: தமிழ் சினிமா மோசமான சூழ்நிலை சந்தித்து வருவதாக தொடர்ந்து திரையுலகில் இருப்பவர்கள் பேட்டியளித்து வருகின்றனர். திருப்பூர் சுப்ரமணியம், தனஞ்செயன் உள்ளிட்டோர் ஏகப்பட்ட யூடியூப் சேனல்களில் பேட்டியளிக்கும் போது ஹீரோக்களின் சம்பளம் தான் இங்கே தயாரிப்பாளர்களுக்கும் சினிமா உலகத்துக்கும் பெரிய பிரச்னையாக உள்ளது என்றனர். இந்நிலையில், தயாரிப்பாளர் கே. ராஜன் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் விஜய் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் குறித்தும் 2ம் கட்ட ஹீரோக்களை தொடர்ந்து 3ம் கட்ட நடிகர்களின் நிலைமை குறித்தும் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஒரு 12 நடிகர்கள் தான் பிரபலமானவர்களாக உள்ளனர். அதில், முதலில் உள்ள 6 நடிகர்களுக்கும் மட்டும் தான் அவர்கள் எப்படி படம் நடித்தாலும் மக்கள் வந்து பார்க்கின்றனர். அதனால், பிசினஸ் நன்றாக நடக்கிறது. மீதமுள்ள 6 நடிகர்களின் படங்கள் நல்லா இருந்து விட்டால் அவர்களுக்கான பிசினஸ் நடக்கிறது.

ஆனால், அதன் பின்னர் உள்ள ஒரு 20 ஹீரோக்களின் நிலைமை ரொம்பவே மோசமான சூழ்நிலையில் தான் உள்ளது என்றும் நடிகர் அதர்வாவும் அதில் ஒருவர் என்று பேசியுள்ளார்.
7 படங்கள் வியாபாரம் ஆகல: தம்பி அதர்வா ஒரு சிறந்த நடிகர். அவரை பற்றி தப்பா சொல்லணும்னு சொல்லவில்லை. அவர் நடித்த 7 படங்கள் ரெடியாகி சென்சார் ஆன நிலையில், வியாபாரம் ஆகாமல் ரிலீஸ் செய்ய முடியாத சூழலில் இருப்பது தான் இன்றைய யதார்த்தம் என கே. ராஜன் வருத்தப்பட்டுள்ளார். பல இளம் நடிகர்கள் மற்றும் 3ம் கட்ட நடிகர்களின் நிலைமை இன்றைக்கு இப்படித்தான் உள்ளது என்றும் முன்னணி நடிகர்கள் லிஸ்ட்டில் உள்ள ஒரு சில நடிகர்கள் பல கோடி சம்பளம் வாங்குவது தான் மற்றவர்கள் பாதிக்க காரணம் என்றார்.
விஜய்க்கு ஒரு நாளைக்கு: நடிகர் விஜய் ஜன நாயகன் படத்துக்கு 250 கோடி சம்பளம் என்று சொல்கின்றனர். குறைந்த பட்சம் 200 கோடியாவது அவர் வாங்கியிருப்பார். 100 நாட்கள் கால்ஷீட் என்று வைத்துக் கொண்டால், அவருக்கு ஒரு நாளைக்கு 2 கோடி சம்பளம். இங்கே அந்த பணத்தில் பல படங்கள் தயாராகி வருகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் இப்படி நடிகர்களின் சம்பளங்களை உயர்த்து விட்டு இன்று தமிழ் சினிமாவே பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது என கே. ராஜன் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











