For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Exclusive: வந்தே ஆகணும்னு செல்லமா அடம்பிடிச்சாங்க ஐஸ்வர்யா ராய்.. 'கண்டுகொண்டேன்' நினைவில் தாணு!

  By
  |

  சென்னை: கண்ணாமூச்சு ஏனடாவும், என்ன செய்ய போகிறாய்-யும், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பாடலும் அவ்வளவு எளிதில் மறந்துவிடக் கூடியதா என்ன?

  தேடித் தேடிக் கேட்கும் பாடல்கள் என்று சில உண்டு. எப்போதுமே இனிக்கிற, வியக்கிற, அதிசயிக்கிற, ஆனந்தப்படுகிற, காதல் ஏக்கம் கொள்கிற, காதல் உணர்வை, சோகத்தைத் தூண்டுகிற பாடல்கள் அதில் ஏராளம் இருக்கும்.

  அதில் இந்தப் பாடல்களுக்கும் நிச்சயம் இடம் உண்டு. இந்தப் பாடல்கள் இடம்பெற்ற படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.

  அதை செஞ்சது நான் இல்ல.. அவரோட வேலையா இருக்கும்.. மாவு பாக்கெட் பணம் குறித்து மனம் திறந்த பிரபல ஹீரோ!அதை செஞ்சது நான் இல்ல.. அவரோட வேலையா இருக்கும்.. மாவு பாக்கெட் பணம் குறித்து மனம் திறந்த பிரபல ஹீரோ!

  இன்னும் மறக்காமல்

  இன்னும் மறக்காமல்

  ராஜீவ் மேனன் இயக்கத்தில், மம்மூட்டி, அஜித், ஐஸ்வர்யா ராய், தபு என மெகா ஸ்டார்கள் இணைந்த மெகா பட்ஜெட் படம். ஏ.ஆர்.ரகுமான், ரவி.கே. சந்திரன் என டாப் டெக்னீஷியன்கள். இந்தப் படம் வெளியாகி 20 வருடம் ஆகி இருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டின் மே 5 ஆம் தேதி வெளியான படம் இது. வருடம் 20 ஆனாலும் இன்னும் மறக்காமல் இருக்கிறது படம்.

  நிறைய இருக்கு

  நிறைய இருக்கு

  இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவிடம் படம் பற்றிய அனுபவம் பற்றி ஸ்பெஷலாகக் கேட்டோம். 'அந்தப் படம் பற்றிய நினைவுகள் நிறைய இருக்கு. அதுக்குள்ள 20 வருஷம் ஆயிடுச்சான்னு ஆச்சரியமாகவும் இருக்கு. ஏவி.எம்-முக்குப் பிறகு ராஜீவ் மேனன் விருப்பப்பட்டு வந்து எங்க, வி கிரியேஷன்ஸ் நிறுவனத்துக்கு பண்ணின படம், இது' என்று ஆரம்பித்தார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.

  ஸ்காட்லாந்து

  ஸ்காட்லாந்து

  ''முதன்முறையா ஆசியாவில் இருந்து ஸ்காட்லாந்துல ஷூட் பண்ணிய படம் இதுதான். அதுக்கு முன்னால ஜேம்ஸ்பாண்ட் படத்தோட ஷூட்டிங் அங்க நடந்திருக்கு. வேற எந்த படமும் பண்ணினதில்லை. இந்தப் படத்தின், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பாடலை அங்க படம்பிடிச்சோம். இந்தப் படம் வந்த பிறகுதான் பல இந்திய படங்களின் ஷூட்டிங் அங்க நடந்திருக்கு.

  தீவிரவாதிகள்

  தீவிரவாதிகள்

  அஜித் நடிக்கிற, 'என்ன செய்ய போகிறாய்?' பாடலுக்காக, கெய்ரோவுக்கு ஷூட்டிங் போகணும். போகறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னால, 32 சுற்றுலாப் பயணிகளை அங்குள்ளதீவிரவாதிகள் சுட்டுக்கொன்னுட்டாங்க. அதனால, போகலாமா, வேண்டாமான்னு ஒரே பயம். பிறகு பாதுகாப்புக்கு ஸ்பெஷல் ஏற்பாடெல்லாம் பண்ணி, பயங்கர செக்யூரிட்டியோட அந்த பாடல் காட்சியை ஷூட் பண்ணினோம்.

  பாடல்

  பாடல்

  இந்தப் படத்துல ஒவ்வொரு பாடலுமே ரொம்ப சிறப்பா இருக்கும். தியாகராஜ பாகவதர் பாடிய ஒரு பாட்டு, 'கவலையை தீர்ப்பது நாட்டிய கலையே'. நாட்டக்குறிச்சி ராகத்துல உருவான பாடல். இதை ராஜீவ் மேனனோட அம்மா, அழகா பாடியிருந்தாங்க. அதை இன்ஸ்பிரேஷனா வச்சுக்கிட்டு ஏ.ஆர்.ரகுமான் உருவாக்கின பாடல்தான், 'கண்ணாமூச்சி ஏனடா?'. இப்பக் கேட்டாலும் எப்ப கேட்டாலும் அந்த பாட்டு அவ்வளவு இனிமையாக இருக்கும்.

  ஆச்சரியப்பட்டார்கள்

  ஆச்சரியப்பட்டார்கள்

  இந்தப் படத்துக்காக, காரைக்குடி கானாடுகாத்தான் பேலஸ்ல ஷூட்டிங் வச்சிருந்தோம். அதுக்கு முன்னால அந்த பேலஸ்ல ஷூட்டிங் நடத்த அனுமதி கொடுத்ததே இல்லை. பெரிய அரசியல்வாதிகள்ல இருந்து, உயர் பதவிகள்ல இருக்கிறவங்க கேட்டும் கூட கொடுக்கலை. முதன்முறையா நான் சிறப்பு அனுமதி வாங்கினேன். அப்ப ஒட்டு மொத்த இன்டஸ்ட்ரியும் இதைக் கேள்விபட்டு ஆச்சரியப்பட்டாங்க.

  செல்ல கோபம்

  செல்ல கோபம்

  இந்த விஷயம் ஐஸ்வர்யா ராய் காதுக்குப் போனதும், இவ்வளவு செலவு பண்றாரு, பிரமாண்டம் காண்பிக்கிறாரு..உபசரிப்பும் மிரட்டலா இருக்கு.. ஆனா, அந்த தயாரிப்பாளரை பார்க்கவே இல்லையேன்னு சொல்லி இருக்காங்க. பிறகு 'அந்த தயாரிப்பாளர், நாளைக்கு இங்க வந்து எங்களோட சாப்பிடலைன்னா, நான் ஷூட்டிங் வரமாட்டேன்'னு செல்லமா கோபப்பட்டாங்க.

  காரைக்குடி வாசல்

  காரைக்குடி வாசல்

  இதுபற்றி ராஜீவ் மேனன் ஃபோன்ல எங்கிட்ட சொன்னார். தயவு செஞ்சி வந்துட்டுப் போங்க சார்னு கேட்டுக்கிட்டார். உடனே நான் போனேன். அவங்களோட சாப்பிட்டேன். அது மறக்க முடியாத சந்திப்பு. இந்தப் படத்தோட பாடல் வெளியீட்டு விழாவை ரொம்ப வித்தியாசமா பண்ணினோம். காரைக்குடி வாசலை வச்சு, அதுக்குள்ள இருந்து எல்லாரும் விழா மேடைக்கு வர்ற மாதிரி வடிவமைச்சிருந்தோம்.

  மலரும் நினைவுகள்

  மலரும் நினைவுகள்

  தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தற விழாவா அது அமைஞ்சிருந்தது, இந்த படத்தின் பாடல் வெளியீடு. படத்துல சம்மந்தப்பட்ட எல்லாருமே வேட்டி சட்டையில வந்திருந்தாங்க. அது அப்போ பிரமாண்டமான ஏற்பாடு.. ஒவ்வொரு படங்களுக்கு பின்னாலயும் இப்படி நிறைய கதைகள் இருக்கு...' என்று மலரும் நினைவுகளில் மூழ்குகிறார் தயாரிப்பாளர் தாணு.

  English summary
  Kandukondain Kandukondain to turns 20 tomorrow. producer of the film Kalaipuli S.Thanu talks about his experience.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X