கவுண்டமணி பார்த்த வேலை தான் அது.. என் படங்களில் நடிக்கவே மறுத்துவிட்டார்.. சுந்தர்ராஜன் பேட்டி!

சென்னை: இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன் தான் நடிகனாக காரணமே கவுண்டமணி தான் என்று சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மேலும், ஒரு படத்தில் கவுண்டமணி நடிக்க மறுத்த கதையையும் அவர் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். ஏன், எதனால் என்ற கேள்விக்கு பதில் அளிக்கிறார் சுந்தர்ராஜன். கவுண்டமணி ஏன் அந்த படத்தில் நடிக்கவில்லை என்பதை பற்றி அவர் மனம் திறக்கிறார்.

சுந்தர்ராஜன் அவர்கள், தான் நடிகராக மாறியதற்கு கவுண்டமணியே காரணம் என்கிறார். சந்திரபாபு, தங்கவேலு, நாகேஷ் வரிசையில் கவுண்டமணியை தனது படங்களில் நடிக்க வைத்தாராம். ஆனால், ஒரு கட்டத்தில் கவுண்டமணி ஹீரோவாகிவிட்டதால், தான் அழைத்தால் சம்பளம் கேட்க முடியாமல் போகும் என நினைத்தாரோ என்னவோ, நடிக்க தயங்கினாராம்.

undarrajan Reveals Why Goundamani Refused That Film Role

கவுண்டமணி ஹீரோவான பிறகு, பிற படங்களில் நடிக்க மறுத்ததால், சுந்தர்ராஜனுக்கு ஒரு காமெடி ட்ரெண்ட் செட் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. செந்திலை வைத்து நடிக்க வைத்தாலும், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. ஜனகராஜ் போன்றோரை வைத்து முயற்சித்தும் அந்த திருப்தி கிடைக்கவில்லை என்கிறார்.

சினிமாவில் நடிக்க வந்த அனுபவத்தை பகிர்ந்துகொண்ட சுந்தர்ராஜன், தான் இன்னும் இயக்குநராகவே தன்னை அடையாளப்படுத்துவதாக கூறுகிறார். இயக்குநர் யூனியனில்தான் தனது அடையாளம் என்கிறார். நடிப்பு என்பது எதிர்பாராத விதமாக நடந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ரஜினி மற்றும் இளையராஜா ஆகியோர் தன்னை நடிக்க சொன்னதாகவும், மனோரமா கூட தனது படங்களில் நடிக்க வற்புறுத்தியதாகவும் சுந்தர்ராஜன் கூறினார். "நீங்க நல்லா எடுக்குறீங்களே, காமெடி சொல்லி தர்றீங்க, ஏன் நீங்க பண்ண மாட்டேங்கறீங்க" என்று மனோரமா கேட்டதாக அவர் நினைவு கூர்ந்தார்.

undarrajan Reveals Why Goundamani Refused That Film Role

திருமதி பழனிச்சாமி படத்தில் கவுண்டமணிக்கு இணையான காமெடி ஆர்டிஸ்ட் கிடைக்காததால், சுந்தர்ராஜனே நடிக்க முடிவு செய்தார். கவுண்டமணி நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தை அவருக்கே கொடுத்துவிட்டு, பெட்டிக்கடை ஓனர் கேரக்டரில் நடித்தாராம். அந்த படம் பெரிய வெற்றி பெற்றது.

அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு, பலரும் சுந்தர்ராஜனை நடிக்க அழைக்க ஆரம்பித்தனர். இயக்குநர் வேலை ரிஸ்க்கானதாக இருந்ததால, இது ஈஸியா இருக்கேன்னு நினைச்சு நடிக்க வந்ததாக ஜாலியாக கூறுகிறார். தற்போது 'சிறகடிக்க ஆசை' சீரியலில் நடித்து வருகிறார்.

அந்த சீரியலில் நடிப்பதை ரசிகர்கள் பாராட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார் சுந்தர்ராஜன். சிவாஜி கணேசன் ரசிகன் என்று தன்னை சொல்லிக்கொள்வதில் பெருமை என்கிறார். மேலும், அந்த சீரியல் பிரைம் டைமில் நம்பர் ஒன்னில் இருப்பதாக பெருமையுடன் குறிப்பிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X