»   »  கபாலி ஷூட்டிங்கில் என்னை வரவேற்க காத்திருந்தார் ரஜினி!- ராதிகா ஆப்தே

கபாலி ஷூட்டிங்கில் என்னை வரவேற்க காத்திருந்தார் ரஜினி!- ராதிகா ஆப்தே

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் பங்கேற்க வந்த தன்னை வரவேற்பதற்காக கேரவன் வாயிலில் காத்திருந்தார் ரஜினி என்று கூறியுள்ளார் ராதிகா ஆப்தே.

கபாலி படத்தில் ரஜினிக்கு நாயகியாக நடித்துள்ள ராதிகா ஆப்தே, தனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்.


பேட்டி

பேட்டி

சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், "ரஜினிகாந்த் என்ற சூப்பர் ஸ்டார் பற்றி எல்லாரும் நிறைய சொல்லிக் கேட்டிருக்கிறேன், படித்திருக்கிறேன். ஆனால் அந்த மனிதருடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது என் அதிர்ஷ்டம் என்பேன்.


வியப்பு

வியப்பு

இப்படி ஒரு நடிகரை, மனிதரை, அற்புதமான மனிதாபிமானியை நான் எங்கும் பார்த்ததில்லை. என் வாழ்க்கையில் இப்படி ஒருவரை இனியும் பார்ப்பேனா என்று தெரியவில்லை.


பெரிய நடிகை இல்லை

பெரிய நடிகை இல்லை

எளிமை என்பதற்கு அர்த்தத்தை அவரைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். நான் ஒன்றும் பெரிய நடிகை இல்லை. தமிழ் சினிமாவில் எனக்கென ஒரு இடம் கூட இல்லை.


இதான் எளிமை

இதான் எளிமை

ஆனால் கபாலி முதல் நாள் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள நான் சென்றபோது, என்னை வரவேற்க சூப்பர் ஸ்டார் ரஜினி சார் கேரவனுக்கு வெளியில் காத்திருந்தார். எனக்கு நடுக்கமாகிவிட்டது. அவரோ நான் இயல்பு நிலைக்கு வரும் வரை காத்திருந்து, நடிக்கச் சொன்னார். அதான் சூப்பர் ஸ்டார்!


வேறு லெவல்

வேறு லெவல்

நான் இதுவரை பார்த்த ரஜினி படங்களிலிலிருந்து வேறு லெவலில் இருக்கும் கபாலி. ரஜினி புதுப் பரிமாணம் காட்டியுள்ளார். ரஜினி ரசிகர்களுக்கு இந்தப் படம் பெரும் விருந்தாக இருக்கும்," என்று கூறியுள்ளார்.


English summary
Radhika Apte, the heroine of Rajini in Kabali has highly praised the actor for his humbleness.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil