»   »  நான் செண்டிமெண்ட்ல வீக்...!- ராதிகா ஆப்தேவை ஆச்சர்யப்படுத்திய ரஜினி!

நான் செண்டிமெண்ட்ல வீக்...!- ராதிகா ஆப்தேவை ஆச்சர்யப்படுத்திய ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் மட்டுமல்ல இந்திய மொழிகளில் நடிக்கும் எல்லா முன்னணி ஹீரோயின்களுக்குமே இருக்கும் ஒரே ஆசை சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடித்துவிட வேண்டும் என்பதுதான்.

இன்றைய நிலையில் எல்லா ஹீரோயின்களின் பார்வையும் ராதிகா ஆப்தே மீதுதான். பெரிய ஹிட்டே கொடுக்காமல் சடார் என்று ரஜினி ஹீரோயின் ஆகிவிட்டாரே?

சரி, ரஜினியுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

கோவாவில் எங்கள் இருவருக்குமான ஜோடி காட்சிகளைப் படமாக்கினார்கள். முதல் நாள் படப்பிடிப்பு என்னால் மறக்க முடியாதது. அவரது காலைத் தொட்டு வணங்கி ஆசீர்வாதம் வாங்கினேன். படப்பிடிப்பு தொடங்கியதும் என் இதயத் துடிப்பு அதிகமாகிவிட்டது. கைகளும், கால்களும் நடுங்கத் தொடங்கின. அதனால் நிறைய ‘ரீடேக்' வாங்க வேண்டியதிருந்தது.

Radhika Apte shares Kabali Rajini experience

எனது பதற்றத்தை உணர்ந்த ரஜினி சார் என் அருகில் வந்தார். ‘நான் உங்களுடைய நிறைய படங்களை பார்த்திருக்கிறேன். உண்மையில் உங்களோடு நடிப்பதை நினைத்து நான்தான் பயப்பட்டேன். ஸ்டைல் காட்டுவது, பஞ்ச் டயலாக் பேசுவது போன்றவை எனக்கு எளிது. ஆனால் சென்டிமெண்டாக நடிப்பதில் நான் கொஞ்சம் வீக். அதிலும் உங்களைப் போன்ற சிறந்த நடிகையோடு நடிக்கும் போது நான்..!'

என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே நான் வாய்திறந்து, ஆச்சரியத்தில் உட்கார்ந்துவிட்டேன். எனது பதற்றத்தைப் போக்கத்தான் அவர் அவ்வாறு சொன்னார் என்பது எனக்கு தெரியும். அதற்காக இவ்வளவு இறங்கி வந்து பேசிய, சிறந்த மனிதரை நான் இதுவரை பார்த்ததில்லை.

நாம் எளிமைக்கு இலக்கணமாக எத்தனையோ பேரை பார்த்திருக்கிறோம். எளிமையின் எளிமை அவர். அவரிடம் இருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும்.

சரியான நேரத்திற்கு ஷூட்டிங்குக்கு வந்துவிடுவார். டைரக்டர் முதல் லைட்பாய் வரை எல்லோரிடமும் மரியாதையாகப் பழகுவார். சாதாரண மனிதர் போன்று நடந்துகொள்வார். எதிலும் பிடிவாதம் கிடையாது. இப்படிக் கூட ஒருவரால் இருக்க முடியுமா... எனக்கு மிக ஆச்சரியமான அனுபவங்களை கபாலி தந்திருக்கிறது. அதற்கெல்லாம் கடவுளுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்...!''

-இவ்வாறு ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் ராதிகா ஆப்தே.

'அதானே முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல், கை கொடுக்கும் கை, அண்ணாமலை... இந்தப் படங்களிலெல்லாம் பார்க்காத எமோஷனலா தலைவா'!

-இது இந்தக் கட்டுரையைப் படித்ததும் ரஜினி ரசிகர்களின் ரியாக்ஷன்.

English summary
Kabali heroine Radhika Apte pouring praises on Rajinikanth for his simplicity and perfection in profession.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil