»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

சிம்மாசனம், குரோதம்-2 என்று கலக்கிக் கொண்டிருப்பவர் ராதிகா செளத்ரி.சென்னையில் அவரை சந்தித்தோம்..

நான் நடிக்க வந்தது என்னவோ டைம் படத்துக்காகத்தான். அந்தப் படத்தில் நடிக்கும் பொழுது ஒரு சிறிய தகராறு. பிரபுதேவா பெரிய பெர்பெக்ஷனிஸ்ட்.எனக்கு இது முதலில் தெரியாது என்பதால் அவருடன் ஏற்பட்ட மனத்தாங்கலுடன் தான் திரும்பவும் பூனாவுக்கு சென்றேன்.

மறுபடியும் வரவழைத்து பாடல் காட்சியை படமாக்கி தனது பெரிய மனதை வெளிப்படுத்தினார். பிரபு தேவாவுக்கு உண்மையிலேயே பெரிய மனதுதான்.பிரபு தேவாவுக்கும் எனக்கும் மொழிப் பிரச்சனை வேறு என்பதால் அவரை சரியாக சமாதானம் செய்யமுடியாமல் போய்விட்டது.

இதுக்கடுத்து எனக்கு கிடைத்த படம், ஆபாவாணன் இயக்கிய அடிமைகள். சத்யராஜ் சார் தான் ஹீரோ. அந்தமானில் படமாக்கினார்கள். என்னகாரணத்தினாலோ படம் பாதியோடு நிற்கின்றது. இதற்கிடையில் கண்ணுபடப் போகுதய்யா மறுவாழ்வு கொடுத்தது. அதுக்கடுத்து சிம்மாசனம். பிரேம்சார் நடித்து இயக்கும் குரோதம்-2 வில் சோலோ கதாநாயகியாக நடிக்கிறேன்.""

ராதிகா செளத்ரி பெயரே வித்யாசமாக இருக்கிறதே. எந்த ஊர்ங்க நீங்க?

மராட்டி. முழுப்பெயர் ராதிகா போன்ஸ்லே செளத்ரி. தமிழகத்தில் ராதிகா பிரபலமாக இருப்பதால் போன்ஸ்லேவை எடுத்துவிட்டு ராதிகா செளத்ரி என்றுவைத்துக் கொண்டேன்.

போன்ஸ்லே என்பது குடும்பப் பெயராயிற்றே, ஆஷா போன்ஸ்லே உங்களுக்கு சொந்தமா?

உறவினர் இல்லை அவருடைய மியூசிக் ஆல்பத்தில் நடித்ததால் தான் சினிமாவுக்கே வந்தேன். இதுவரை அவரை சந்தித்தது இல்லை. விரைவில் அவரைசந்திக்க வேண்டும்.

பிறகு .. என்று யோசித்தவர் சிறுவயது முதலே நாடக மேடைகளில் நடித்து அனுபவப்பட்டிருக்கிறேன். எங்கள் வீடு ஒரு கூட்டுக் குடும்பம் இருபத்தைந்துபேர் வரை எப்பொழுதும் இருப்போம். ஆனால் நான் தான் செல்லக்குட்டி.

சினிமா வாழ்க்கை எப்படி இருக்கிறது?

குரோதம் - 2 படத்தில் தனிக் கதாநாயகியாக நடிக்கிறேன். தயாரிப்பாளர் ப்ரேம், பத்திரிகையில் என் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு உடனடியாகஈ-மெயில் அனுப்பச் சொல்லியிருந்தார். நானும் அனுப்பி வைத்தேன். பத்திரிகையில் வந்த புகைப்படத்தைப் பார்த்துத்தான் என்னை தேர்வு செய்தாராம்.அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டவள் நான்.

தமிழ் எப்படி? என்றோம்

தமிழ் பேசக் கற்றுக் கொள்ள புதிய வழியைக் கண்டுபிடித்திருக்கிறேன். ஒரு சின்ன பிரபலமான கதையை தமிழில் சொல்லச் சொல்லி அதை மனப்பாடம்செய்து அப்படியே தெரிந்தவர்களிடம் சொல்லிக் காண்பிக்கின்றேன்.

உதாரணத்துக்கு நான் ஒரு கதை சொல்லவா என்று ஆரம்பித்தார். உற்சாகமாகிவிட்டோம். சொல்லுங்க சொல்லுங்க என்று காத்திருந்தோம். ஒருகாக்கா வடையை தூக்கிப்போக அங்க வந்த நரி காக்கா காக்கா அழகா இருக்கியே ஒரு பாட்டுப் பாடுன்னுச்சாம். காக்கா தன்னைப் பார்த்து அழாகஇருக்குன்னு நரி சொல்லுதேன்னு பாட்டுப் பாட வடை ...

போதும் போதும் நிறுத்துங்க. அம்மணி வேற ஏதோ கதை சொல்லப் போறாங்கன்னு பார்த்தா கடைசியில காக்கா வடையின்னு ரொம்ப நல்லா வடைசுடறீங்க. ஸாரி தமிழ் பேசறீங்க என்று அடுத்த விஷயத்துக்கு தாவினோம் ...

ராதிகா செளத்ரி பார்க்கணும்னு ஆசைப்படற நபர் யாராவது இருக்காங்களா?

முதல்ல ராதிகா மேடத்தைப் பார்க்கணும். அடுத்து ரேவதி. இவங்க ரெண்டு பேருடைய நடிப்பும் எனக்கு ரொம்ப பிடிக்கும். சீக்கீரம் சந்திக்கணும்என்றார்.

நெருங்கிய தோழி என்று யாரும் உண்டா செளத்ரி?

சிம்மாசனம் படத்தில் நடித்தது ,பெருமையான விஷயம் என்றால், அந்த படத்தின் மூலம் மந்திரா எனக்கு நண்பியாக கிடைத்தது அதைவிட பெருமையானவிஷயம். நல்ல நண்பர் அவர் என்று சிரிக்கிறார் ராதிகா செளத்ரி.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos