»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

வசூல்ராஜாவில் கெட்ட ஆட்டம் போட்ட ரகஸ்யா இப்போது தேவதையைக் கண்டேன் படத்தில் தனுசுடன்ஆடப் போகிறார்.

பாலிவுட்டில் அயிட்டம் நம்பர் ஒன் பாடல்களில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தவர் ரகஸ்யா. அவரைமுதன்முதலாக தமிழுக்கு கம்பீரம் படத்தின் மூலம் கொண்டு வந்தார்கள். படம் ஓடாததால் அவரின் ஆட்டம்பெரிதாக வெளியே தெரியவில்லை. தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாமல் மீண்டும் மும்பைக்கே போய்விட்டார்.

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்திற்காக மீண்டும் அவரை இயக்குநர் சரண் அழைத்து வந்தார். படத்தில் சிரிச்சுசிரிச்சு வந்தான் பாடலுக்கு தினேஷின் கிக்கான டான்ஸ் மூவ்மெண்ட்களுக்கு தக்கனூண்டு உடைகளுடன் இவர்ஆடிய துள்ளல் ஆட்டம் இருக்கிறதே, அப்பப்பா!. அதுவும் வீணை வாசிப்பது போன்ற மூவ்மெண்ட்டுக்குதியேட்டர்களில் விசில் பறக்கிறது. இந்தப் பாடல்தான் இப்போது டாப் டென்னில் நம்பர் ஒன்.

ரசிகர்களிடம் ரகஸ்யாவுக்கு இருக்கும் வரவேற்பைப் பார்த்துவிட்டு, நடிகர் தனுஷ் தனது தேவதையைக்கண்டேன் படத்தில் ஒரு பாட்டுக்கு இவரை வளைத்துப் போட்டுள்ளார்.

பாலிவுட்டோடு ஒப்பிடும்போது கோலிவுட் எப்படி இருக்கிறது என்று ரகஸ்யாவிடம் கேட்டால், பாலிவுட்டை ஒருபாட்டம் வசை பாடித் தீர்த்துவிட்டார்.

பாலிவுட்டில் படுக்கைக்குப் போனால்தான் படத்தில் வாய்ப்பு கிடைக்கும். அந்த விஷயத்தில் அட்ஜெஸ்ட் செய்யாவிட்டால், சினிமாவில் தலைகாட்டவே முடியாது. சான்ஸ் தருகிறேன் என்று கூறி பெண்களை சூறையாடியவர்கள்பாலிவுட்டில் அதிகம்.

நான் முதன் முதலில் வாய்ப்பு தேடி ஒரு டைரக்டரிம் சென்றேன். எனது பாய்பிரெண்டும் கூட வந்தார். அவரைவெளியே உட்காரச் சொல்லி விட்டு என்னை மட்டும் ரூமிற்குள் டைரக்டர் அழைத்துப் போனார். என்னிடம்கவர்ச்சி இருக்கிறதா என்பதை சோதிக்க எனது ஆடைகளை எல்லாம் களையச் சொன்னார். நான் முடியாது என்றுமறுத்து விட்டு, திரும்பி வந்துவிட்டேன்.

அதன்பிறகு மிகவும் கஷ்டப்பட்டுதான் பாலிவுட்டில் அறிமுகமானேன். இப்போது வாய்ப்புகள் தொடர்ந்துவருகிறது என்றாலும் அந்த முதல் சம்பவம் எனக்கு மறக்கவில்லை. இந்த விஷயத்தில் மும்பையை ஒப்பிடும்போதுசென்னை எவ்வளவோ பரவாயில்லை. அதனால்தான் ஏராளமான பெண்கள் அங்கிருந்து இங்கு வருகிறார்கள்என்று ரகசியம் ஏதும் இல்லாமல் பகிரங்கமாகவே குட்டை உடைத்தார்.

ஒரு பாடலுக்கு ஆடுபவராகவே அறியப்பட்டுள்ள ரகஸ்யா அதில் பிரபலமாகவே விரும்புகிறார். அதற்காக ஆடைவிஷயத்தில் மிகவும் மெனக்கெடுகிறார். நம்ம கோலிவுட் காஸ்ட்யூம் டிசைனர்கள் தைக்கிற டிரஸ் எல்லாம்இவருக்கு அலர்ஜியாகி விடுகிறது. காரணம் நிறைய துணி வைத்து காஸ்ட்யூம் டிசைன் செய்கிறார்களாம்.

அவற்றையெல்லாம் ஓரமாகப் போட்டுவிட்டு, மும்பையிலிருந்து தான் கொண்டு வந்திருக்கும் சிக்கனஆடைகளையே ரகஸ்யா பயன்படுத்துகிறார். மேலும், மறைக்க வேண்டிய இடத்தை மட்டும் மறைத்தால் போததாஎன்று அர்த்த புஷ்டியுடன் தமிழ் இயக்குநர்களைக் கேட்கிறாராம்.

புள்ள, பொழச்சுக்கும்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil