»   »  சிக் ஆன கருத்தம்மா!

சிக் ஆன கருத்தம்மா!

Subscribe to Oneindia Tamil

கருத்தம்மா நாயகியரில் ஒருவரான ராஜஸ்ரீ சிக் என மாறி விட்டார். மறுபடியும் ஹீரோயினாக ஒரு ரவுண்டு அடிக்க துடிப்பாக காத்திருப்பதாக கூறுகிறார்.

பாரதிராஜா கண்டுபிடிப்பான ராஜஸ்ரீ, கருத்தம்மாவில் அழுத்தமான வேடத்தில் வந்து அசத்தலாக நடிப்பைக் காட்டியவர். அவருடைய துரதிர்ஷ்டமோ என்னவோ பெரிய அளவில் அவரால் பிரகாசிக்க முடியாமல் போனது.

இடையில் பாலாவின் புண்ணியத்தால் சேதுவில் பைத்தியக்கார பிச்சைக்காரப் பெண் வேடத்தில் வந்தார். பிறகு நந்தாவில் சூர்யாவின் அம்மாவாக, வாய் பேச முடியாத பெண்ணாக வந்து நடிப்பைக் கொட்டினார்.

அதன் பின்னர் காணாமல் போன ராஜஸ்ரீ இப்போது படு சிக் என மாறியுள்ளார். என்ன இந்த திடீர் மாற்றம் என்று கேட்டபோது, எனது வயதுக்குரிய வனப்புடன்தான் உள்ளேன். இதில் அதிசயம் என்ன இருக்கிறது என்றார்.

தொடர்ந்து அவரே, நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பேன். ஹீரோயினாக நடிக்கவும் தயாராகவே இருக்கிறேன். எனக்கொன்றும் வயதாகி விடவில்லை என்று குண்டைப் போட்டு அதிர வைத்தார்.

ராஜஸ்ரீக்கு இப்போது படங்கள் அதிகம் இல்லையாம். தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கக் கூப்பிடுகிறார்களாம். இருந்தாலும் அறிமுகம் கொடுத்த சினிமாவை விட்டு விட்டு முழுக்க டிவிக்குத் தாவ அவருக்கு மனம் இல்லையாம்.

எனவே, நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் நிச்சயம் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்று கலக்குவதற்காக காத்திருக்கிறார்.

Please Wait while comments are loading...