twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அப்பா.. மகள் பாசக்கதை.. “ராஜாவுக்கு செக்“ இயக்குனருடன் ஒரு சந்திப்பு!

    |

    சென்னை : தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜாவுக்கு செக் படத்தின் இயக்குனர் சாய் ராஜ்குமார் நமது பிலிம் பிட் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

    ராஜாவுக்கு செக் படம் எப்படி இருக்கிறது என்ன கருத்து ரசிகர்களிடம் இருந்து வருகிறது ?

    படம் பார்த்த அனைவரும் படத்தை பற்றி பாராட்டி தான் இதுவரை கூறியுள்ளனர். படத்திற்கு ஓரு நெகட்டிவ் விமர்சனமும் இதுவரை நான் கேட்கவில்லை. படத்தை பார்க்கும் அனைவரும் தங்களது குடும்பத்தில் இருக்கும் ஒருவரை இப்படத்துடன் தொடர்புபடுத்தி கொள்கின்றனர். படம் நன்றாக உள்ளது என்றே பலரும் கூறுகின்றனர்.

     Rajavukku check film director sai rajkumar special interview

    இந்த படத்தின் கதை திரைக்கதை எப்படி உருவானது மற்றும் எப்போது துவங்கியது ?

    இது நேற்று ஆரம்பித்து இன்று முடித்த கதை அல்ல கொஞ்சம் முன்கூட்டியே துவங்கியது தான். இது ஒரு கற்பனை கதை. ஒரு குறைந்த பட்ஜெட்டில் நல்ல திரைப்படம் கொடுக்க வேண்டும் என்பதால் திரில்லர் ஆக எடுக்க முடிவு செய்தோம் அதில் சமூகத்திற்கு ஒரு கருத்து சொல்ல வேண்டும் என்று எண்ணினோம்.

    இது சமீபத்தில் நடந்த சில முக்கிய சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கபட்டதாக கூறுகிறார்கள் அதனை பற்றி ?

    படத்தை துவங்கிய போது இந்த எந்த சம்பவங்களும் நடக்கவில்லை. படம் ஆரம்பித்த சில நாட்களிலே நான் க்ளைமாகஸ் எடுத்துவிட்டேன். படம் முடித்து முதல் காப்பி பார்த்த பின்பு தான் அது போன்ற சில விஷயங்கள் நடந்தது. முதலில் படத்தை பார்த்து பின் ஒரு வருடம் கழித்து தான் ரீலிஸ் செய்து இருக்கிறோம். இது போன்ற அவர்களே பேசுவார்கள் ஆனால் அது உண்மையல்ல என்று கூறினார் இயக்குனர்.

     Rajavukku check film director sai rajkumar special interview

    சேரன் அவர்களை எப்படி இதற்குள் கொண்டு வந்தீர்கள் ?

    இது ஒரு அப்பா மகள் பற்றிய கதை அப்பாவை அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்து, இதற்கு சேரன் அவர்கள் சரியாக இருப்பார் என்று நடிக்க வைத்தேன். சேரனை வைத்து பார்க்க வரும் மக்கள் அவரை எளிதாக தொடர்புப்படுத்திக்க முடியும் என்று செய்தேன் என்றார் இயக்குனர் சாய் ராஜ்குமார்.

    உங்கள் சினிமா கிராப் பற்றி ?

    மழை இயக்கிய பிறகு எனக்கு நிறைய ரீமேக் படங்களாக வந்தது. அதனை நான் விரும்பவில்லை. உடனடியாக தெலுங்கு திரையுலகில் வாய்ப்பு கிடைத்தது அங்கு இயக்கினேன். இதன் பின் பல சிக்கல்களை சந்தித்தேன் இது ஒரு குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். என்னை நிறைய பேர் எப்படி இது போன்று செய்ய முடிந்தது என்றே கேட்டனர். மழை இதற்கு எதிர்மறையான படம் அது பட்ஜெட் சற்று அதிகம் அந்த காலத்தில் என்று கூறினார் இயக்குனர் சாய் ராஜ்குமார்.

    இதில் அப்பா மற்றும் மகள் இருவரும் மதுபானக்கடைக்கு செல்லும் காட்சி ஒன்று உள்ளதே அதனை பற்றி ?

    பத்து வருடங்களாக ஒருவர் தனியாக மகளை பிரிந்து இருக்கிறார். இந்த காட்சியை படத்தில் பார்க்கும் பொழுது புரியும். பேட்டியின் போது அந்த காட்சியை தெளிவாக விளக்கி பேசினார். மேலும் இது போன்ற பல வித்தியாசமான கேள்விகளுக்கு இயக்குநர் சாய் ராஜ்குமார் பேட்டி அளித்துள்ளார்.

    English summary
    Rajavukku check film director sai rajkumar special interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X