twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    A freewheeling interview with Actor Rajesh

    By Staff
    |

    "அவள் ஒரு தொடர்கதையில் அப்ப எனக்கு வாய்ப்பு வந்தது. அரங்கண்ணல் தான் தயாரிப்பாளர். அதாவது எப்படின்னா, கூடவேலை பார்த்த வாத்தியார், நமச்சிவாயம்னு பேரு. அவர், இயக்குநர் பீம்சிங்கோட மகனுக்கு, அதாவது பீம்சிங்கோடஇரண்டாவது மனைவியான நடிகை சுகுமாரியம்மாவோட பையன். அவருக்கு ட்யூஷன் சொல்லிக் கொடுத்துக்கிட்டிருந்தாரு.அவர் மூலமா பாலச்சந்தர் பழக்கம் கிடைச்சது.

    நான் போனேன், செலக்ட் ஆனேன், அட்வான்ஸும் கொடுத்தாங்க. ஆனா என்ன ஆச்சோ தெரியலே, அந்தக் கதை இப்போவேணாம், பிறகு பார்த்துக்கலாம்னு சொன்னாங்க. நான் செலக்ட் ஆன கேரக்டரில் கமல் நடிச்சார். முதலில் அந்த கேரக்டர் சினிமாவாய்ப்பு தேடி அலையற மாதி வச்சிருந்தாங்க. ஆனால் கமலுக்காக அதை விகடகவியாக மாத்தி, படம் வெளிவந்து ஓஹோன்னுஓடியது.

    எனக்கு ரொம்ப வருத்தம். நாம ஏதோ சிவாஜி கணேசன் மாதிரியும், வாய்ப்பு பறி போய் விட்டது போலவும் வருத்தப்பட்டேன்.சின்ன வயசுல அப்படித்தானே நினைப்போம். அப்புறம் ரொம்ப விரக்தியா திரிஞ்சேன். அப்ப எனக்கு 24, 25 வயசுதான்இருக்கும்.

    அப்புறம் டைரக்ஷனில் இறங்குவோம்னு முடிவு செஞ்சு, மகேந்திரனுடன் சுத்தினேன். புக்ஸ் படிக்கிறது, படம் பார்க்கிறது,எக்ஸர்ஸைஸ் செய்வது என சுத்தினேன். டைரக்ஷனில் பெரிய ஆளாகி விட வேண்டும் என்ற முடிவோடு, நிறைய ஆங்கிலப்படங்கள் பார்க்க ஆரம்பிச்சேன்.

    திங்கள் முதல் சனிக்கிழமை வரை படம் பார்ப்பேன். தினசரி 3,4 சினிமான்னு வெறித்தனமா பார்த்தேன். அப்பல்லாம் வீடியோகிடையாது, டிவி கிடையாது.

    அப்ப இந்தியன் எக்ஸ்பிரஸ்ல கதையைப் போடுவான். அதைப் படிச்சுட்டு அதை நாம எடுத்தால் எப்படி எடுப்போம்னு, நானேகதையை எழுதுவேன். ஓபனிங் ஷாட் எப்படி எடுப்பது, ஸ்க்ரீன் பிளே எழுதுறது, அப்புறம் அதை எடுத்துட்டுப் போய் அந்தப்படத்தப் பார்ப்பேன். அப்படியே நான் எழுதின மாதிரியே அந்தப் படம் இருக்கும். ஆஹா, நாம பெரிய ஆளுதான் என்று நானேநினைச்சுக்குவேன். அதுக்கு மார்க்கும் போடுவேன்.

    அப்பத்தான் "16 வயதினிலே வந்தது. என் தம்பி போய் அந்தப் படத்தப் பார்த்துட்டு வந்து சொன்னான், அண்ணே, நீஎன்னெல்லாம் சொன்னியோ, எழுதினியோ, அதை அப்படியே "16வயதினிலே படத்தில் எடுத்திருக்கான். இன்னொரு டைரக்டர்வந்துட்டான் அப்படின்னான். எனக்குப் பொறுக்கல, உடனே போய் குரோம்பேட்டையில படத்தப் பார்த்துட்டேன். விடிய விடியஎனக்கு தூக்கமே வரல.

    நாம நினைச்சத, இன்னொரு ஆளு சொல்லிட்டானேன்னு எனக்கு வருத்தம். 2 நாள்ல போய் பாரதிராஜவைப் பார்த்துட்டேன்.அப்படித்தான் ராஜ்கண்ணு எனக்கு அறிமுகமானாரு. அந்தத் தொடர்பு மூலமா "கன்னிப்பருவத்திலே வாய்ப்பு கிடச்சது.

    அப்புறம் பாரதிராஜா, "கிழக்கே போகும் ரயில், "சிவப்பு ரோஜாக்கள், "புதிய வார்ப்புகள்னு எடுக்க ஆரம்பிச்சிட்டாரு.ராஜ்கண்ணு மூலமா எனக்கு "கன்னிப் பருவத்திலே பட வாய்ப்பு கிடச்சதுக்கும் சிவாஜிதான் காரணம், அங்கயும் அவருதான்நிக்கிறாரு. அதாவது என்னையப் போலவே ராஜ்கண்ணுவும் சிவாஜி ரசிகர். என்னத்தான் "கன்னிப் பருவத்திலேயில் போடவேண்டும்னு சொல்லிட்டாரு. பேஸ் கரக்டா இருக்கு, பரிதாப உணர்வு சரியா இருக்கும் அப்படின்னு சொல்லி என்னய நடிக்கவச்சாரு.

    "கன்னிப் பருவத்திலே வந்து நல்லா ஓடி வெற்றி பெற்றது. அதுக்குப் பிறகு நெறய படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். அப்பத்தான்"அந்த 7 நாட்கள் வாய்ப்பு வந்தது. அது எனக்கு பெரிய பிரேக்காக அமைஞ்சது. முதலில் அந்தப் படத்தில நடிக்க யோசிச்சேன்.

    பாக்யராஜ் படம்னா அதுல அவர்தான் முழுசா வருவாரு. இது சரியா வருமான்னு யோசிச்சேன். அப்புறம் நினச்சேன், சின்னவேடத்துல நடிச்சாதான் நாம நிக்கறதுக்கு நல்ல வாய்ப்பு. எப்படி அசோகன், "உயர்ந்த மனிதன் படத்துல சின்ன கேரக்டர்ல வந்துநின்னாரோ, சிவாஜி, "துளி விஷம் படத்துல சின்ன கேரக்டர்ல வந்து சாதிச்சாரோ அதே மாதி நாமளும் நடிப்போம்னு முடிவுசெஞ்சு "அந்த 7 நாட்கள்ல நடிச்சேன். படம் நல்லா ஓடியது, எனக்கும் அதுதான் பெரிய பிரேக்காக அமைஞ்சது.

    (ராஜேஷின் நினைவுகள் தொடரும்...)

    ராஜேஷ் நினைவுகள் பாகம் - 1

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X