»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

ஜக்கய்யாபேட்டை:

ஆந்திராவில் நடைபெற்று வரும் ஸ்ரீ கிருஷ்ணா புஷ்கரம் புனித நீராடல் விழாவில் நடிகர் ரஜினிகாந்தும், அவரதுநண்பரும் தெலுங்கு நடிகருமான மோகன் பாபுவும் கலந்து கொண்டு புனித நீராடினார்கள்.

கும்பகோணம் மகாமக திருவிழாவைப் போல, ஆந்திராவில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ணா புஷ்கரம்என்ற புனித நீராடல் விழா நடந்து வருகிறது.

இந்த வருடம் புனித நீராடல் விழா நடைபெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்த் அவரது நண்பரும் தெலுங்குநடிகருமான மோகன்பாபுவுடன் புனித நீராடினார். மோகன் பாபுவின் குடும்பத்தினரும் இதில் கலந்து கொண்டனர்.

பின்னர் ரஜினிகாந்த் பண்டிதர்கள் மந்திரம் ஓத பித்ருகளுக்கு பூஜை செய்தார். அதனையடுத்து நிருபர்களுக்குப்பேட்டியளித்த ரஜினி,

இந்த புனித நீராடலில் கலந்து கொண்டால் மோட்சம் கிட்டும் என்று நண்பர்கள் கூறியதால் முதன் முறையாக இங்குவந்தேன். இந்த இடத்தின் இயற்கை அழகும், ஆன்மிக சூழலும் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. இங்குநீராடுவது மன நிம்மதியையும், மகிழ்சியையும் அளிக்கிறது என்றார்.

ரஜினிகாந்தும் மோகன்பாபுவும் வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் ஏராளமானோர் அங்கு கூடிவிட்டனர்.அவர்களைக் கட்டுபடுத்த போலீசார் திணறினர்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil