»   »  'சினிமாவிலும் சரி, நிஜத்திலும் சரி ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான்!'- இயக்குநர் ரஞ்சித்

'சினிமாவிலும் சரி, நிஜத்திலும் சரி ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான்!'- இயக்குநர் ரஞ்சித்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திரையிலும் சரி, நிஜத்திலும் சரி ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அவர் ரஜினிகாந்த் என்று இயக்குநர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ரஜினி வைத்து கபாலி படத்தை இயக்கியுள்ள பா ரஞ்சித், அண்மையில் மலையாள மனோரமா நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியின் சில பகுதிகள்:

Rajini is the only superstar on screen and off screen - Director Pa Ranjith

* கபாலி ஒரு உணர்ச்சிமயமான படம். இந்தப் படத்தில் ரஜினியின் அதி தீவிர ரசிகர்களுக்கு ஏகப்பட்ட விஷயமிருக்கிறது. அதே நேரம், அதைத் தாண்டிய பல சுவாரஸ்யமான சமாச்சாரங்கள் உள்ளன.

* இந்தப் படத்தில் ரஜினிகாந்த் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் வருகிறார்.

* படத்தில் பாடல்கள், சண்டைக் காட்சிகள் உள்ளன. ஆனால் அவை வழக்கமானவை அல்ல. ரசிகர்களை மட்டுமே மனதில் கொண்டு எடுக்கப்பட்டவை அல்ல.

* ஆரம்பத்தில் ரஜினியை இயக்குவதை நினைத்து கொஞ்சம் டென்ஷனாகத்தான் இருந்தேன். ஆனால் அவர் 'ரஞ்சித் இது உனக்காக நான் செய்து தரும் படம். இதற்கு முன் நான் நடித்த எந்தப் படத்துக்காகவும் இத்தனை ஆர்வத்தோடு நான் காத்திருந்ததில்லை. தைரியமாக செய்.. நல்லதே நடக்கும்,' என்று எனக்கு உற்சாகமூட்டினார்.

* ரஜினி சாரின் அன்பு, அக்கறை, எளிமை பற்றியெல்லாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதைவிட பல மடங்கு கபாலி ஷூட்டிங்கின்போது நான் நேரில் அனுபவித்தேன். செட்டிலிருந்த அத்தனைப் பேரையும் அவ்வளவு அக்கறையோடு பார்த்துக் கொண்டார்.

*சூப்பர் ஸ்டார் என்று சொல்வதற்கு திரையிலும் சரி, நிஜத்திலும் சரி, பொருத்தமான ஒரே ஒருவர் ரஜினி சார்தான். உலகில் ஒருவரால் கூட அவரை வெறுக்க முடியாது....

-இப்படிப் போகிறது அந்த நேர்காணல்.

English summary
In an interview to Malayala Manorama, Director Ranjith has hailed Rajinikanth as the real superstar on screen and off screen.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil