»   »  ரஜினி என்ன செய்கிறார்? எப்படி இருக்கிறார்? எப்போது திரும்புகிறார்?- கலைப்புலி தாணு பேட்டி

ரஜினி என்ன செய்கிறார்? எப்படி இருக்கிறார்? எப்போது திரும்புகிறார்?- கலைப்புலி தாணு பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி குறித்து பரவி வரும் தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். அவர் அடுத்த வாரம் சென்னை திரும்புகிறார் என்று கலைப்புலி தாணு கூறியுள்ளார்.

தந்தி டிவியின் நிகழ்ச்சி ஒன்றில் பதிலளித்த கலைப்புலி தாணுவிடம் கபாலி பாடல்கள், அதற்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து ரஜினியின் கருத்து, ரஜினியின் உடல் நிலை பற்றியெல்லாம் கேள்வி எழுப்பினர்.


வதந்தியை விரட்டிய நெருப்புடா

வதந்தியை விரட்டிய நெருப்புடா

இதற்கு பதிலளித்த கலைப்புலி தாணு, "நெருப்புடா பாடல் டீசருக்குக் காரணம் இயக்குநர் ரஞ்சித். இந்த டீசர் வெளியான நேரத்தில் ஒரு தப்பான வதந்தியைப் பரப்பி விட்டார்கள். காலையில் அந்த வந்த வதந்தி பரவுது, மாலையில் இந்த டீசரை வெளியிட்டேன். நெருப்புடா பாடல்...


ரஜினி பேசினார்

ரஜினி பேசினார்

இன்னிக்கு காலையில் 6.42 மணிக்கு அமெரிக்காவிலிருந்து ரஜினி சார் போன். மிஸ்டு காலாகிவிட்டது. நானே அமெரிக்காவுக்கு கூப்பிட்டுப் பேசினேன். அப்போ ஸார் சொன்னார், 'இந்த மாதிர சங்கடமான சூழலில் என் ரசிகர்களுக்கு இந்த டீசரை போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது மனசுக்கு சந்தோஷமா இருக்கு,'ன்னாரு.


ஊடகங்கள்

ஊடகங்கள்

திடீர்னு ஊடகங்கள் ஏன் இப்படி சந்தேகம் கிளப்புகின்றன. ரஜினியின் குடும்பத்தினர் இங்குள்ளனர். எதுவாக இருந்தாலும் அவர்களிடம் கேட்கலாம். நாம விளக்கம் எதுவும் வெளியிடலாமா என்று கேட்டார்கள். நான்தான் வேண்டாம் என்றேன். அவர்கள் அப்படி ஏதாவது கொடுத்தால் மீண்டும் மீண்டும் செய்தி வெளியிட்டுக் கொண்டே இருப்பார்கள்.


அமெரிக்காவில்

அமெரிக்காவில்

ரஜினி சார் அமெரிக்காவுக்கு போயிருக்கார். அங்கு எந்திரன் இரண்டாம் பாகத்துக்கான வேலைகள், டெஸ்டுகள் நிறைய நடக்கின்றன. பெரிய பெரிய தொழில்நுட்பக் கலைஞர்களோடு அவர் ட்ராவல் பண்ண வேண்டியிருக்கு. அவர் அமெரிக்கா போனால் இவர்கள் இஷ்டத்துக்கும் எழுதலாமா?" என்றார்.


அடுத்த வாரம்

அடுத்த வாரம்

இன்னும் சில தினங்களில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு ரஜினிகாந்த் சென்னை திரும்பிவிடுவார் என்றும் தாணு கூறினார்.


English summary
Producer Kalaipuli Thaanu says that Rajini is fine and healthy and will return soon to Chennai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil