»   »  தமிழ் பெயர் வைத்தால் தான் சென்சார்: ராமதாஸ்

தமிழ் பெயர் வைத்தால் தான் சென்சார்: ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ்ப் படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால்தான் தணிக்கைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற விதிமுறையை உருவாக்க வேண்டும்என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

விஜய் டிவிக்கு அவர் அளித்த பேட்டி:

தமிழ்ப் படங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள் என்று வேண்டுகோளாகத்தான் நாங்கள் கூறினோம். எங்கள் வேண்டுகோளைமதிக்காமல், வேண்டுமென்றே ஆங்கிலத்தில் பெயர் வைக்கும்போது அதனை எதிர்த்து சாத்வீகமான வழியில் போராடுவது தவிர்க்கமுடியாதது ஆகி விடுகிறது.

கடந்த ஆண்டு 64 படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைத்தனர். இதற்கு முன்பு இதுபோன்ற நிலை ஏற்பட்டதில்லை. புற்று நோய் போலஇது வளர்ந்து வருகிறது. எனவே அதனை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

பெயர் மட்டுமல்ல, திரைப்படங்களில் ஆபாசக் காட்சிகளும் கூடாது, பெண்ணடிமைத்தனத்தை ஆதரிக்கும் காட்சிகள் இருக்கக் கூடாதுஎன்பதையும் தமிழ் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தும்.

தமிழில் பெயர் வைக்கச் சொன்னால் கிண்டல் செய்கிறார்கள். மும்பை எக்ஸ்பிரஸ் என்ற பெயரை தமிழ் படுத்த முடியாதா? எங்கள்ரயில்வே அமைச்சர் தொடங்கி வைத்த ஒரு ரெயிலுக்கு பொதிகை என்று அழகாக பெயர் சூட்டினோம். தற்போது ஆங்கிலப் பெயர்சூட்டியிருப்பவர்கள் அதனை மாற்றினால் வரவேற்போம்.

நான் திரைப்படங்களுக்கு எதிரி அல்ல. திரைப்படங்கள் எனக்கும் பிடிக்கும். அதனைப் பார்த்து ரசிக்கலாம், நல்ல கருத்து சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். அதை விட்டு விட்டு அதில் நடிப்பவர்களுக்கு மன்றம் வைப்பதெல்லாம் தேவையில்லாத வெட்டி வேலை.

இது எனது கவலை மட்டுமல்ல, படித்த அத்தனை பேரின் கவலை. இளைஞனின் சக்தி வீணாவதைப் பார்த்து துடிக்கும் அனைவரும் கவலை.

இப்போதுள்ள தணிக்கைக் குழு சரியில்லை என்பது எனது கருத்து. தமிழில் பெயர் வைத்தால்தான் தணிக்கைச் சான்றிதழ் தருவோம் என்றநிலையை உருவாக்க முடியுமா என்று யோசித்து வருகிறேன். மத்திய அரசுக்கு இதுகுறித்துக் கடிதம் எழுதவுள்ளேன். டெல்லிசெல்லும்போது சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாகளையும் நேரி சந்தித்துப் பேசுவேன் என்றார் ராமதாஸ்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil