Just In
- just now
சரண்யா- பொன்வண்ணன் மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம்.. வைரலாகும் போட்டோ.. வாழ்த்தும் ரசிகர்கள்!
- 23 min ago
மீண்டும் ஒலித்த தேனிசை குரல்.. சிவகார்த்திகேயன் படத்திற்கு இன்னாம்மா “ஃபீல்” பண்ணியிருக்காரு தேவா!
- 46 min ago
பத்து தல படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல இயக்குனர்!
- 1 hr ago
ஆன்லைன் விளையாட்டின் தூதர்.. நடிகை தமன்னாவுக்கு கேரள உயர் நீதிமன்றம் திடீர் நோட்டீஸ்!
Don't Miss!
- News
அடேங்கப்பா.. ஹேமந்த் சோரன் அதிரடி.. தனியார் நிறுவனங்களில் 75% பணியிடங்கள் மாநில மக்களுக்கு மட்டுமே
- Sports
ஐயோ அவரா?.. என் கேப்டன்சிக்கே ஆபத்து வரும்.. கறாராக சொல்லிவிட்ட தோனி.. முட்டிமோதும் சிஎஸ்கே!
- Automobiles
ஆர்ப்பரிக்கும் வசதிகளுடன் வந்துள்ள புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!
- Finance
பட்ஜெட் பதற்றம்.. தொடர் சரிவில் சென்செக்ஸ்.. நிஃப்டியும் 13,900 கீழ் சரிவு.. !
- Lifestyle
தூங்கிக் கொண்டிருக்கும் போது நமது மன உணர்வு உண்மையில் என்ன செய்கிறது தெரியுமா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டார் இயக்குனர் லோகேஷ்.. ரமேஷ் திலக் ஹேப்பி!
சென்னை : இயக்குனர் லோகேஷ், மாஸ்டர் படத்துல நடிக்க வாய்ப்பு தருவதாக வாக்குறுதி கொடுத்திருந்தார் அதை தற்போது நிறைவேற்றி விட்டார் என்று மகிழ்ச்சியுடன் ரமேஷ் திலக் கூறினார்.
நடிகர் ரமேஷ் திலக் பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து மக்களை கவர்ந்தவர். இவர் பல படங்களில் சிறிய கதபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் இவர் எப்போதும் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் எல்லாம் தாக்கம் மிகுந்த கதாபாத்திரங்களாகவே இருக்கும் இதனாலே மக்கள் மனதில் இடம்பிடித்து விட்டார் ரமேஷ் திலக்.

மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறார் ரமேஷ் திலக் இதை பற்றி கூறுகையில் நான் மாஸ்டர் படத்தில் ஒரு சிறிய அங்கம் என்று தெரிவித்துள்ளார். மாஸ்டர் படத்தில் தனக்கென்று பெரிய கதாபாத்திரம் இல்லை என்றும் விஜய் படத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவை மாஸ்டர் மூலம் நிரைவேற்றி கொண்டதாக ரமேஷ் திலக் குறிப்பிட்டு கூறியிருந்தார் .
கைதி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி கொண்டிருக்கும் போது அடுத்தாக விஜய் படத்தை இயக்க போவதாக சில தகவல்கள் கசிந்ததாகவும். இதை உறுதி செய்ய ரமேஷ் திலக் லோகேஷ்க்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டாராம். அப்போது லோகேஷ் அது உண்மை தான் நீங்களும் அந்த படத்துல கட்டாயம் இருக்கீங்க என்று வாக்குறுதி கொடுத்திருந்தார் அதை தற்போது நிரைவேற்றி விட்டார் என்று மகிழ்ச்சியுடன் ரமேஷ் திலக் கூறினார் .
மேலும் லோகேஷை பற்றி கூறிய ரமேஷ் திலக், லோகேஷ் படப்பிடிப்பில் என்ன வேண்டுமானலும் ஆகலாம் என்று பல பிளான்களுடன் தான் படப்பிடிப்புக்கு வருவார் இதனால் எந்த விதத்திலும் அவரின் படப்பிடிப்பு நின்று போகாது என கூறினார் .

ரமேஷ் திலக் பல படங்களில் சிறிய கதாபாத்திரத்திலே நடித்து இருக்கிறார். இதில் பல படங்கள் அவரை கரைசேர்த்திருந்தாலும் சில படங்களில் அவர் வந்ததே பலருக்கு தெரியாமல் போகிறது. அப்படியொரு படமாக காதலும் கடந்து போகும் படத்தை பார்ப்பதாக ரமேஷ் திலக் கூறியுள்ளார். ஏனெனில் அந்த படத்தில் டிரைவராக வந்து எந்த ஒரு விஷயமும் செய்யாமல் அப்படியே சென்றது திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்க்கும் போது தான் தெரிந்தது என வருத்ததுடன் கூறினார்.

ரமேஷ் திலக் தற்போது மளையாளத்திலும் நடிக்க துவங்கிவிட்டார். கடந்த வருடம் இவர் நடித்த கும்பலாங்கி நைட்ஸ் படம் பெரிய வெற்றியை மலையாளத்தில் கண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து இரண்டு மலையாள படங்களில் நடித்து அசத்தினார் ரமேஷ் திலக். தற்போது தமிழ் மற்றும் மலையாளம் என தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ரமேஷ் திலக்.