டேட்டிங்கிற்கு வயது ஒரு தடை இல்லை… ராஷ்மிகா மந்தனா பளிச் பதில் !
சென்னை : இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா டேங்டிங் செல்வதற்கு வயது ஒரு தடை இல்லை என்று கூறியுள்ளார்.
Recommended Video
பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் அம்சமான அழகு , தலை சுற்றவைக்கும் சிரிப்பு என இளைஞர்கள் மனதில் பச் என்று ஒட்டிக்கொண்டவர் ராஷ்மிகா மந்தனா.
2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் என்ற படத்தில் விஜய் தேவரக்கொண்டாவுடன் இணைந்து நடித்திருப்பார். அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

ராஷ்மிகா மந்தனா
கீதா கோவிந்தம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பல திரைப்படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். தற்போது இவர், அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா திரைப்படத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா. இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் முதல் பாகம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

வயது தடை இல்லை
ராஷ்மிகா சமீபத்தில் அளித்துள்ள நேர்காணலில்,டேட்டிங் செல்வதற்கு வயது ஒரு பொருட்டல்ல என்று கூறியுள்ளார். மேலும், பேசிய அவர், டேட்டிங் செய்யும் நபர், உங்களைப் பற்றி நன்றாக உணர வேண்டும், அந்த நபர் உங்களை மாற்ற முயற்சிக்கக்கூடாது. சிறிய விஷயங்களை சார்ந்தே மகிழ்ச்சி இருக்கிறது என்று கூறியுள்ளார். நீங்கள் ஒரு பையனுடன் டேட் செய்கிறீர்கள் என்றால், நண்பர்கள் உங்களை கேலி செய்வார்கள், உங்களையும் டேட் செய்பவரின் பெயரையும் இணைத்து பேசுவார்கள். ஆதலால் இது போன்ற எந்த கேள்களுக்கு என்னிடம் பதில் இல்லை.

கட்டுக்கோப்பான உடல்
சட்டை இல்லாத புரொபைல் புகைப்படம் குறித்து பேசிய ராஷ்மிகா, எனக்கு இது புரியவில்லை. நன்றாக உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக் கோப்பாக வைத்திருப்பதை நான் பாராட்டுகிறேன். அது நீங்கள் எவ்வளவு அர்ப்பணிப்போடு இருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. ஆனால், அதை ஏன் உங்கள் சுயவிவரப் படமாக வைக்க விரும்புகிறீர்கள் என்று பேசினார்.

இந்தி படங்களில்
ராஷ்மிகாவுக்கு மிஷன் மஞ்சு என்ற இந்தி திரைப்படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், குட்பை என்ற இந்தி படத்திலும் படித்து வருவதால், படத்தில் நடிப்பதற்கு வசதியாக மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கி அதில் குடியேறி உள்ளார்.


Click it and Unblock the Notifications











