கடவுள் கொடுத்த கிஃப்ட் கெனிஷா.. உடைந்து நின்ற ரவி.. கண்கலங்கிய தோழி!
சென்னை: நடிகராக இருந்த ரவி மோகன், தற்போது தயாரிப்பிலும் களம் இறங்கியுள்ளார். அவரது தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதில் இறுதியாக பேசிய ரவி மோகன், மனம் உடைந்து பல விஷயத்தை பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் காலையிலிருந்து இப்போது வரை பொருமையாக எனக்காக அமர்ந்து இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களிடமிருந்து இப்படி ஒரு அன்பு கிடைப்பதற்கு உண்மையிலேயே நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஒரு மனுஷனுக்கு தேவைப்படுகிற நேரத்தில் உதவுவதற்கு சில பேர் இருப்பாங்க, வாழ்க்கையில் அப்படி சில நபர்கள் இருப்பார்களா... இல்லையான்னு தெரிஞ்சுக்க சரியான நேரம் வரும். அப்படிப்பட்ட நேரம் யாருக்குமே வரவே வரக்கூடாது என நான் நினைக்கிறேன். ஆனால், அந்த நேரம் வரும் போது தான் யார் கூட இருப்பாங்க என்பது தெரியவரும். இந்த நேரத்தில் என் கூட இருக்கும் ஒவ்வொருத்தரும் எனக்கு கிடைச்ச மிகப்பெரிய கிப்ட், இத்தனை நண்பர்களின் மனதில் நான் இருக்கிறேன் என்று நினைக்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கு அனைவருக்கும் நன்றி.

நீங்க தான் என் சொத்து: என்னுடைய குடும்பம், என்னுடைய ரசிகர்கள், என்னுடைய மூவிஸ், என்னுடைய நண்பர்கள் தான். என் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து கொண்டு இருக்கிறேன். என் சொத்துக்கள் எல்லாம் முடக்கப்பட்டுவிட்டது, வீடு போச்சு, கார் போச்சு என சொல்கிறார்கள். அது எல்லாம் உண்மை இல்லை, என் சொத்து நீங்க தான். இந்த சொத்தை யாராலும் முடக்க முடியாது. இந்த சொத்தை எவன் ஒருத்தன் வாழ்க்கையில் சம்பாதிக்கிறானோ அவன் நிச்சயம் ஜெயிப்பான், அவன் தான் சக்சஸ்ஃபுல் மேன். அந்த சொத்தை நான் சம்பாதித்துவிட்டேன். இன்னைக்கு எனக்காக இங்கு வந்த அனைவரையும் என்னைக்கும் என் மனதில் வைத்து இருப்பேன்.
எனக்கு கிடைத்த கிப்ட்: இந்த நேரத்தில் ஒருத்தர் பற்றி நான் சொல்லியே ஆகவேண்டும், இந்த ஷோ நடப்பதற்கு முழுக்க முழுக்க காரணம் கெனிஷா தான். இதுவரை எனக்கு யாரும் செய்யாததை கெனிஷா எனக்காக செய்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு இவ்வளவு பேர் வருவாங்க என்று எனக்கு தெரியாது. ஆனால், எனக்காக இத்தனை பேர் வருவாங்க என்பதை நான் இன்னைக்கு தெரிஞ்சுகிட்டேன் அதுக்கு காரணம் கெனிஷா தான். நாம ஒரு இடத்தில் 'ஸ்டக்' ஆகி என்னடா செய்வது என தெரியாமல் நிற்கும் போது, கடவுள் ஒரு விஷயத்தை அனுப்புவார் என்று சொல்வார்கள். அது காசாக இருக்கலாம்.. பொருளாக இருக்கலாம்... வாகனமாக இருக்கலாம்... எது வேண்டுமானாலும் இருக்கலாம்... அந்த மாதிரி எனக்கு ஒரு கடவுள் கொடுத்த கிப்ட் கெனிஷா தான். நான் யார் என்பதை உணர வைத்தது அவங்க தான். ஒருவரின் வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒருத்தர் இருந்தா அவங்க வாழ்க்கை நிச்சயம் நன்றாக இருக்கும் என கண் கலங்கியபடி பேசினார். இதை கேட்டு பாடகி கெனிஷா கண்கலங்கினார்.


Click it and Unblock the Notifications











