»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

செல்லமே படம் ரீமா சென்னை தூக்கோ தூக்கு என்று தூக்கி நிறுத்தியுள்ளது. ஒபனிங் சீனிலேயே ஓபனாகநடித்தவர், அதையே படம் முழுக்க கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

படத்தில் எத்தனை சீன்களில் ரீமா அரைகுறையாக வந்தார் என்பதை விட, எத்தனை சீன்களில் முழுக்கஉடையணிந்து வந்தார் என்பதைக் கண்டிபிடிப்பது எளிது. ரீமாவின் இந்த கவர்ச்சி கதகளியாட்டத்தோடுகொஞ்சம் வித்தியாசமான கதையும் சேர்ந்து கொண்டதால் படம் ஹிட்டாகிவிட்டது.

ஆனால், எதிர்பார்த்த வசூல் இல்லை என்கிறார்கள். இருந்தாலும் இப்போது கோடம்பாக்கத்தில் திரும்பியபக்கமெல்லாம் ரீமா புராணம் தான் ஓடுகிறது. அதோடு ரீசண்டாக வெளிவந்துள்ள கிரி படமும் சேர்ந்து கொள்ள,எல்லா சுவரிலும் ரீமாவின் போஸ்டர்தான் தெரிகிறது.

இதனால் அடுத்தடுத்து படவாய்ப்புகளும் வந்துள்ளன. இந்த திடீர் வாழ்வு காரணமாக தலை எது வால் எது என்றுபுரியாத அளவுக்கு சந்தோஷத்தில் திக்குமுக்காடி போயிருக்கிறார் ரீமா. இதுவரை ஹோட்டல்களில்தங்கியிருந்தவர் இப்போது பங்களா தேடிக் கொண்டிருக்கிறார்.

மேலும் தனது கால்ஷீட் விவகாரங்களை கவனித்துக் கொள்ள ஒரு மேனேஜரையும் நியமித்துள்ளார். பயங்கரகுஷியில் இருக்கும் ரீமாவைச் சந்தித்து எடக்கு முடக்காக சில கேள்விகளை வீசிய போது அநாயசமாக அவற்றைஎதிர்கொண்டார்.

கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த நீங்கள், ஜேஜே படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியது ஏன் என்றுகேட்டபோது, தயாரிப்பாளரும் இயக்குனரும் நட்பு ரீதியில் கேட்டதாலும், அதிக சம்பளம் கொடுத்ததாலும்நடித்தேன் என்றார்.

கவர்ச்சி காட்டாமல் உங்களால் நடிக்க முடியாதா என்ற கேள்விக்கு, கவர்ச்சி இல்லாமல் சினிமா இல்லை.கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை. ஆபாசமாக நடிப்பதுதான் தவறு என அரைத்த மாவை அரைத்தார்.

மும்பை நடிகைகள் சிலர் முக்கால் நிர்வாணமாக நடிக்கிறார்கள். சிகரெட் பிடிக்கிறார்கள். குடிக்கிறார்கள். நீங்கஎப்படி கேட்டபோது,

மும்பை நடிகைகள் நாகரீகத்தில் முற்றியவர்கள். ஆனா, சத்தியமாக எனக்கு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாதுசாமி என்றார் சத்தியம் செய்யாத குறையாக.

கேட்டுகங்கப்பா !

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil