»   »  ரீமாவும் கார்த்தியும்

ரீமாவும் கார்த்தியும்

Subscribe to Oneindia Tamil

பருத்தி வீரன் கார்த்தி ஹீரோவாக நடிக்கப் போகும் டைரக்டர் செல்வராகவனின் அடுத்த படத்தில் ரீமாசென் தான் ஹூரோயின்.

இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லையாம். ஆனாலும் ஷூட்டிங் ஆகஸ்டில் ஆரம்பமாகப் போகிறது.

கொஞ்ச காலமாகேவ இறங்கு முகத்தில் தான் இருக்கிறது ரீமாவின மார்க்கெட். சிம்புவுடன் நடித்த வல்லவன் தனக்கு பிரேக் கொடுக்கும் என எதிர்பார்த்தார். அது என்னமோ சிம்பு-நயன்தாராவுக்கு இடையே பெரிய பிரேக்கை கொடுத்துவிட்டது.

இதைத் தொடர்ந்து ஜீவாவின் இயக்கத்தில் தாம் தூம் படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்து வந்தார் ரீமா.

இயக்குனர் ஜீவா திடீர் மரணமடைந்துவிட யூனிட்டே தடுமாறிப் போய்விட்டது. இந் நிலையின் ஜீவாவின் குருவான பி.சி.ஸ்ரீராம் படத்தை முடித்துத் தர முன் வந்துள்ளார்.

இந் நிலையில் தான் செல்வராகவன் பட சான்ஸ் வந்துள்ளது ரீமாசென்னுக்கு.

இந்தப் படத்துக்காக செல்வராகவனுக்கு மொத்தமாக 60 நாள் கால்ஷீட்டை அள்ளிக் கொடுத்துள்ளாராம் ரீமா. மேலும் வேண்டுமென்றாலும் கொடுக்க தயாராக இருப்பதாக சொல்லியுள்ளாராம்.

படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் நடக்க உள்ளது. இது குறித்து ரீமாசென் கூறுகையில்,

நான் வல்லவனில் 100 சதவீதம் நடிப்பை கொட்டினேன்(?). ஆனால் அதில் நடித்தது எனக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் திருப்தியாக அமையவில்லை.

இதையடுத்து தமிழ் சினிமாவுக்கும் எனக்கும் பெரிய கேப் விழுந்துவிட்டது. நான் நடித்து கொண்டிருந்த தாம் தூம் படத்தின் டைரக்டர் ஜீவா மரணத்தால் தள்ளிப்போனது பெரிய துரதிர்ஷ்டம்.

இந்த வேளையில் எனக்கு பொன்னான வாய்ப்பை செல்வராகவன் கொடுத்துள்ளார். அதனை பக்காவாக யூஸ் பண்ணுவேன்.

இந்தப் படத்தின் கதை, நான் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது என்று எல்லா நடிகைகளையும் போலவே சொல்கிறார் ரீமா.

செல்வராகவன் இயக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் தயாராகப் போகிறது. இதன்மூலம் கார்த்தி தெலுங்கிலும் அறிமுகமாகப் போகிறார்.

கொசுறு:

கார்த்தி, சந்தியா நடிக்க, செல்வராகவன் இயக்க இருந்த மாலை நேரத்து மயக்கம் படம் கைவிடப்பட்டுவிட்டதாம். இதற்கான காரணம் தெரியவில்லை.

பாவம் பாப்பா சந்தியா!!.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil