For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  செத்தே போகக்கூடிய சூழல்ல மீண்டு வந்த கதை ...ரேஷ்மாவுடன் ஒரு சுவாரஸ்ய சந்திப்பு

  |

  சென்னை: சன் டிவியின் சன் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக தொகுப்பாளராக அறிமுகமான ரேஷ்மாவை இன்று தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள்.வாணி ராணி, மரகதவீணை, உயிர்மெய், அன்பேவா போன்ற சீரியல்களிலும் நடித்தார். வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் இவருடைய புஷ்பா கதாப்பாத்திரம் மிகவும் பிரபலம்.

  எனக்கு OCD problem இருக்கு | Actress Reshma Exclusive part-02 | Filmibeat Tamil

  ரேஷ்மா பசுப்புலெட்டி மீடியாவில் தனக்கென்ன ஒரு அங்கீகாரம் கிடைக்க நிறைய மெனக்கெடுப்பவர் . வித்யாசமான உடைகளை நவநாகரீகமாக பயன்படுத்தி அன்றாடம் ட்ரெண்டிங்காண விஷயங்களுடன் போட்டோஷூட் மூலம் கனெக்ட் செய்து நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் தன் இணையதள ரசிகர்களை மகிழ்விப்பார் . மனதில் பட்ட கருத்துக்களை பளார் பளார் என்று பேச கூடிய பெண் .

  நடிகை ராதிகாவின் அந்த படத்தை போன்றதா ஜோதிகாவின் உடன்பிறப்பே? தீயாய் பரவும் தகவல்! நடிகை ராதிகாவின் அந்த படத்தை போன்றதா ஜோதிகாவின் உடன்பிறப்பே? தீயாய் பரவும் தகவல்!

  பிக்பாஸ் சீசன் 3 இல் கலக்கிய நாயகி, சமூக வலைத்தளங்களிலும் மிகவும் பிரபலம். கலகலப்பாக பாசிட்டிவ்வாக இருக்கும் ரேஷ்மா பரபரப்பாகவும் காணப்படுகிறார். ஓடிடி, படங்கள், வெப்சீரீஸ், சோசியல் நெட் ஒர்க் என பிசியாகவே இருக்கும் ரேஷ்மா, நமது பில்மிபீட் சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அதில் கேட்கப்பட்ட சில கேள்வி பதில்களை இங்கே காணலாம்.

  அணல் பறக்கும் வைரல் ரேஷ்மா

  அணல் பறக்கும் வைரல் ரேஷ்மா

  கேள்வி " போட்டோ ஷூட் வைரல்ன்னா ரேஷ்மாதான். ட்ரெண்டிங்-ல முதல்ல நீங்கதான் அப்பப்ப காணப்படுகிறீர்கள் .. எப்படி இருக்கு இந்த சந்தோஷம் ?"

  பதில் : " போட்டோ ஷூட் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒன்னு.. ரொம்பவே ரசிச்சி ரசிச்சி பண்ணுவேன். எப்பவுமே வெஸ்டர்ன் லுக்ல ட்ரண்ட்டா போட்டோ ஷூட் போட்டுட்டு, திடீர்ன்னு ஹோம்லி லுக் போட்டதும் அது வைரல் ஆகிடுச்சி. சில சமயங்களில் சில மனிதர்கள் செய்யும் கமென்ட்ஸ் கூட ட்ரெண்ட் ஆகும் .

  மூனு முப்பது

  மூனு முப்பது

  கேள்வி: " இப்போ என்ன மாதிரியான படங்கள் பண்ணிட்டு இருக்கீங்க"


  பதில் : " இப்போ ஓடிடி படங்கள் பண்ணிகிட்டு இருக்கேன். பிக்பாஸ் முடிஞ்சதுமே கிட்டத்தட்ட 12 படங்கள் நடிச்சிருக்கேன் . அதுல ரெண்டு மூணு ரிலீஸ் ஆகிவிட்டது . இன்னும் ரிலீஸ் ஆகவேண்டிய படங்களே நிறைய இருக்கு. ஓடிடி-ல கெளதம் வாசுதேவன் கூட ‘மூணு முப்பது'ன்னு ஒரு ப்ராஜெக்ட் பண்ணிருக்கேன். ஜிவி பிரகாஷ் கூட 'வணக்கம்டா மாப்ள" பண்ணிருக்கேன்.இதெல்லாம் நல்லா போயிட்டு இருக்கு. சத்யராஜ் சார் கூட வெப்சீரிஸ் பண்ணிட்டு இருக்கேன். டிவி, ஓடிடி, மூவீஸ், விளம்பரம்,யு ட்யூப், இன்ஸ்டான்னு சோசியல் மீடியா, இப்படி எல்லாத்துலயும் இருக்கனும். எல்லாமும் பண்ணனும்." இது தான் என் ஆசை .

  இங்க்லீஷ் நியூஸ்

  இங்க்லீஷ் நியூஸ்

  கேள்வி : பல துறைகள் இருந்த நீங்கள் இதெல்லாம் அசால்ட்டா " எல்லா கேரக்டரும் அவ்ளோ ஈசியா உங்களால பண்ண முடிஞ்சதா.."

  பதில் : " அது ஆரம்பத்துலதான் கொஞ்சம் பெருசா கஷ்டமா தான் இருக்கும். அப்பறம் அடிச்சி தூள் பண்ணிடலாம். ஏர் ஹோஸ்டஸ் பண்ணனுமா.. பண்னியாச்சு.. இங்க்லீஷ் நியூஸ் ரீடரா.. அதுவும் பண்ணியாச்சு, இஞ்சினீயர்.. இப்படி நிறைய.."நிறைய சேயின்ஐஸ் தொடர்ந்து பார்த்தாச்சு .

  அழகான நர்ஸ்

  அழகான நர்ஸ்

  கேள்வி : அவ்ளோதானு இல்ல.. வேற இன்னும் இருக்கா ? நடிப்பு இல்லாம, உங்கள எதாச்சும் ஒரு நாட்டுல கொண்டு போய் விட்டா என்ன பண்ணுவீங்க? "

  பதில் : " வேற என்னல்லாம் பண்ணுவன்னு கேட்டீங்கல்ல.. Am a registered Nurse in US. இப்ப US போனா கூட, ஒன்னு சாப்ட்வேர் டெஸ்டிங்ல போயிடலாம். இல்ல நர்ஸிங்ல போயிடலாம்."

  கத்துக்கிற ஆர்வம்

  கத்துக்கிற ஆர்வம்

  கேள்வி: .எப்படி இப்படில்லாம் பன்முக திறமையாளாரா உங்கள வளத்துகிட்டீங்க..?"

  பதில்: " எனக்கு புதுசு புதுசா கத்துக்கிறதுன்னா புடிக்கும். அப்படி சும்மா இல்லாம எதாச்சும் படிச்சிட்டே இருப்பேன். காலைல ஆபீஸ் போயிட்டு, ஈவ்னிங் நர்ஸிங் போயிருக்கேன். எனக்கு அந்த கத்துக்கிற ஆர்வம் அப்பவே உண்டு.இப்பவும் உண்டு "

  உடம்பா.. வெடக்கோழி கொழம்பா

  உடம்பா.. வெடக்கோழி கொழம்பா

  கேள்வி :அது வந்து.. ஆங்.. எப்படி சொல்றது..! ‘ இதென்ன உடம்பா.. வெடக்கோழி கொழம்பா'-ன்னு ல்லாம் சோசியல் நெட் ஒர்க் ல சொல்றாங்களே.. அது பற்றி.."

  பதில் : " அத நான் ஒரு காம்ப்ளிமெண்ட்-ஆ தான் எடுத்துக்குவேன். ஏன்னா நான் இப்படி இருக்க, மெயிண்டயின் பண்ண நிறைய உழைக்கிறேன். அதுக்காக நான் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்ல.. தெனமும் மூனு மணி நேரம் ஜிம் ப்ராக்டீஸ். தெனமும் ஒரு மணி நேரம் ஸ்விம்மிங் . அது மட்டும் இல்லாம டயட் வேற. பிடிச்சது எதயும் டக்குன்னு சாப்பிட முடியாது. ஆசையா இருக்கும். இருந்தாலும், அந்த டயட் கண்ட்ரோல் மெயிண்டன் பண்றதெல்லாம் அவ்ளோ ஈசி இல்ல. இங்க இவ்ளோ கஷ்டப் படறோம். நாலு பேர் ஈசியா கமெண்ட் பண்ணதான் செய்வாங்க. அதெல்லாம் கண்டுக்ககூடாது. அதயும் நான் ப்ளஸ்சா தான் எடுத்துகிறேன்.

  ஆண்கள விட பெண்கள்தான்

  ஆண்கள விட பெண்கள்தான்

  கேள்வி : " பெண்களும் உங்களோட கண்கள.. புன்னகைய ரசிக்கிறாங்களே.."

  பதில் : " நிஜமாவே சோசியல் நெட் ஒர்க்ல என்ன பாலோ பண்றது ஆண்கள விட பெண்கள்தான். ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்ண பிடிச்ச்சிருக்கு, அவங்கள பத்தி பாசிட்டிவ்வா எழுதுறாங்கன்னா அதுவே பெரிய விஷயம்தான். வெற்றிதான். ஏதோ ஒன்னு அவங்களோட வாழ்க்கையில நான் ஞாபகபடுத்திருக்கேன். என்னோட ட்ரஸிங், ஸ்மைல், ரியாக்ஷன் இப்படி ஏதோ ஒன்னு அவங்கள டச் பண்ணிருக்கு.

  சிங்கப் பெண்ணே..!

  சிங்கப் பெண்ணே..!

  கேள்வி : " இந்த லாக்டவுன் டைம்ல உங்கள பாதிச்ச, சோகமாக்கின விஷயம் எதாச்சும் நடந்துச்சா ?"

  பதில் : " என்ன அவ்ளோ சீக்கிரம் ஹர்ட் பண்ணிட முடியாது. ஏன்னா சின்ன வயசுலயே அவ்ளோ கஷ்டம் பாத்துட்டு வந்தாச்சு. அதானால இப்ப யாரு என்ன சொன்னாலும் அத பத்தி கவல படறதில்ல.. எவ்வளவோ பாத்துட்டோம். இதெல்லாம் ஒரு விஷயமே இல்லன்னு தூசி போல தட்டிவிட்டு போயிட்டே இருக்கேன். என் கெரியர் பாதிக்கிற அளவுக்கு டேமேஜ் ஆன வார்த்தைகள் நான் சொன்னேன்னு மத்தவங்க சொல்றாங்க. அதெப்படி அவங்க சொல்ல முடியும். என் பர்சனல் பத்தி தப்பு தப்பா சொல்றவங்க, கமெண்ட் பண்றவங்க பத்தியெல்லாம் நான் கவலயே படறது கிடையாது. அவங்களுக்கு எந்த தகுதியும் இல்ல. அதனால என்ன யாரும் அவ்வளவு சீக்கிரம் கஷ்டப்படுத்திட முடியாது. இந்த லாக்டவுன் டைம் ல மெடிடேஷன் பண்றது, ஒர்க்கவுட் பண்றது. எனக்கு பெயிண்டிங் பண்ணத் தெரியும்.. பண்ணிட்டு இருந்தேன். கவலப்படவெல்லாம் நேரமில்ல பாஸ்.. நம்ம மனசுதான் எல்லாம் "

  இந்த டாட்டூ எதுக்குன்னா..!

  இந்த டாட்டூ எதுக்குன்னா..!

  கேள்வி : " நிறைய டாட்டூல்லாம் போட்டுருக்கீங்க, அதுக்கே நிறைய ரசிகர்கள் இருக்காங்க.. அது எப்படி ஜஸ்ட் பிடிச்சதால போட்டுகிட்டதா?"


  பதில் : " இல்ல.. ஒவ்வொன்னுக்கும் ஒரு காரணம் இருக்கு. ஒரு பீனிக்ஸ் டாட்டூ போட்டுருப்பேன். அது என் லைப்ல ரொம்ப முக்கியமான ஒன்னு. செத்தே போகக்கூடிய சூழல்ல இருந்து நான் மீண்டு வந்தப்போ, இந்த பினிக்ல்ஸ் டாட்டு போட்டுகிட்டேன். அது அப்ப மட்டும் இல்ல.. எப்ப நான் பார்த்தாலும் எனக்கு பெரிய பலம் குடுக்கும். கைல போட்டுருக்கிறது அம்மா அப்பா நியாபகமா ஒரு ஹார்ட் லைப் லைன் டாட்டு. அப்பறம் ரெண்டு ரோஸ் இருக்கமாதிரி ஒரு டாட்டூ. வாழ்க்கையில முள்ளும் இருக்கும் ரோஜாவும் இருக்கும்ன்னு சொல்ற ஒரு மீனிங்கா கூட வச்சிக்கலாம். "என்று மிகவும் கலகலப்பாக நம்மிடம் பகிர்ந்து கொண்டார் ரேஷ்மா. புன்னகை மாறாத பாசிடிவ் எனர்ஜியுடன் ரேஷ்மா பேசிய முழு வீடியோவை பில்மி பீட் யூ ட்யூபிலும் காணலாம். மூன்று பாகங்களாக இன்னும் நிறைய கேள்விகளுக்கு பதில் அளித்து உள்ளார் . மிகவும் ஜாலியாக பாட்டு பாடி, தன் குடும்பம் பற்றியும் ,பாபி சிம்ஹா பற்றியும் , தனக்கு உள்ள "ஓ சி டி" பற்றியும் நிறைய வித்யாசமான பதில் அளித்ததை வீடியோவில் காணலாம் .

  English summary
  bigg boss fame reshma pasupuleti shares her real life story in filmibeat special interview. she was famous in bigg boss season 3 and pushpa character in valainu vandha vellaikaran movie.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X