அப்பாவின் மரணத்தை வைத்து ஆதாயம் தேடாதீங்க.. இறப்புக்கு இதுதான் காரணம்.. ரோபோ மகள் உருக்கமான பேட்டி!
சென்னை: நகைச்சுவை நடிகரான ரோபோ ஷங்கர் செப்டம்பர் 18ம் தேதி இரவு திடீரென உயிரிழந்தார். ஷூட்டிங்ஸ் பாட்டில் மயங்கி விழுந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 46 வயதில் மரணம் அடைந்த ரோபோ ஷங்கரின் மரணம் குறித்து பலவிதமான கருத்துக்கள் இணையத்தில் பரவி வரும் நிலையில், ரோபோ சங்கரின் மகள் இந்திராஜா சங்கர் தனது youtube சேனலில் தந்தை உயிரிழந்ததற்கான காரணம் குறித்து பல விஷயத்தை பேசி உள்ளார்.
அப்பா ஒரு மாதமாகவே உடல் நலம் சரியில்லாமல் இருந்தார், ரத்த வாந்தி எடுத்தார் என்று கூறுகிறார்கள். ஆனால், அப்படி இல்லை. இறப்பதற்கு முன் நாள் இரவு, நானும் அப்பாவும் கடைக்கு சென்று வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கிக்கொண்டு, வாங்கிங் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தோம். அடுத்த நாள் காலை 6 மணிக்கு அப்பா, ஷூட்டிங்கிற்கு கிளம்பிவிட்டார். ஆனால், அவருக்கு 'பிபி' குறைவாக இருந்ததால், ஷூட்டிங்கில் மயங்கி விழுந்து இருக்கிறார். அங்கிருந்தவர்கள் அப்பாவை மருத்துவமனைகள் சேர்த்து அவருக்கு ட்ரிப்ஸ் போடப்பட்டது. அப்போதும் கூட, ட்ரிப்ஸ் முடிந்ததும் வீட்டுக்கு சென்று விடுகிறேன். வீட்டில் யாருக்கும் தெரிய வேண்டாம் என அங்கிருந்தவர்களிடம் கூறியிருக்கிறார். ஆனால், இரவு 11 மணி ஆகிவிட்டதால் நான் போன் செய்தேன். அப்போது தான் அப்பாவிற்கு ட்ரிப்ஸ் ஏறி கொண்டு இருக்கும் விஷயம் தெரியவந்தது.

இதுதான் நடந்தது: உடனே நாங்கள் மருத்துவமனைக்கு சென்றுவிட்டோம், அதன் பிறகு தான் அப்பாவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக பிபி குறைத்து 40ஆக வந்துவிட்டது. அந்த நேரத்தில் அவருக்கு மாரடைப்பு வந்து சிடிஆர் செய்யப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு உறுப்பாக செயல் இழந்து தான் அப்பா உயிரிழந்தார். மருத்துவமனையில் அந்த நேரத்தில் எங்களுடன் இருந்த அனைவருக்கும் என்ன நடந்தது என்று தெரியும். மருத்துவமனையில் எங்களுடன் இருந்தவர்கள் யாரும், ரோபோ சங்கர் எப்படி இறந்தார் என்று எந்த மீடியாவிற்கும் பேட்டி கொடுக்கவில்லை. ஆனால், இதற்கு சம்பந்தமே இல்லாத பலர் எதுவுமே தெரியாமல் ஆதாயத்திற்காக வாய்க்கு வந்ததை பேசினார்கள் அதை கேட்கும் போது மனம் மிகவும் வேதனை அடைந்தது.
இதுதான் காரணம்: இதன் மூலம் ஒரே ஒரு விஷயத்தை நான் உங்களிடம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அவர் இறந்து விட்டார் அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும். அவர் குடித்து குடித்தே இறந்தார் என்று தயவுசெய்து விமர்சனம் செய்ய வேண்டாம். ஒரு குடும்பத்தில் ஒருவரை இழந்து விட்டால் அந்த குடும்பம் எவ்வளவு கஷ்டத்தை, துயரத்தை அனுபவிக்கும் என்பது அந்த குடும்பத்திற்கு மட்டும்தான் தெரியும். ஒரு ஆத்மாவை நிம்மதியாக இருக்க விடுங்கள், அதையும் தாண்டி விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் அவரின் ஆத்மாவை மேலும் வேதனை அடைய செய்யாதீர்கள். அப்பாவிட்டு சென்ற பல கடமைகள் இருக்கிறது. அதை நாங்கள் தொடர்ந்து செய்வோம். அப்பா இறந்த நேரத்தில் எங்களுடன் ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றி சொல்லி வேண்டும் என்பதற்காகத்தான், மன வலியோடு இதை நான் பேசுகிறேன் என இந்திரஜா ரோபோ சங்கர் அந்த பேட்டியில் கண்கலங்கி பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











