Robo Shankar Passes Away: நல்ல தம்பியை இழந்துட்டேனே.. ரோபோ சங்கர் மறைவு.. துடித்துப்போன சிங்கம் புலி
சென்னை: ரோபோ சங்கர் அவர்களின் திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் சிங்கம் புலி, ரோபோ சங்கரின் மரணச் செய்தி கேட்டு தான் அடைந்த வேதனையை பகிர்ந்துகொண்டார். "எனக்கு ரொம்ப ஷாக்கிங்கா இருக்கு" என்று கூறும்போதே அவரது குரலில் இருந்த துக்கம் வெளிப்பட்டது.
சிங்கம் புலி தற்போது கோயம்புத்தூரில் படப்பிடிப்பில் இருக்கிறார். ஒரு வாரத்துக்கு முன்பு ரோபோ சங்கர் தொலைபேசியில் பேசியதாகவும், அப்போது படப்பிடிப்பில் இருந்ததால் பிறகு பேசலாம் என்று கூறியதாகவும் தெரிவித்தார். ஆனால், அதற்குள் இப்படி ஒரு துயரமான செய்தி வரும் என்று அவர் நினைக்கவில்லை.

ரோபோ சங்கரின் உடல்நலக் குறைவு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார். "அவ்வளவு தூரம் உடற்பயிற்சி செய்வாரு, உடலை கட்டுக்கோப்பாக வச்சிருப்பாரு. அவரைப் பார்த்தாலே பொறாமை வரும்" என்று ரோபோ சங்கரின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நினைவுகூர்ந்தார்.
சிங்கம் புலியும், ரோபோ சங்கரும் இணைந்து பல மேடை நிகழ்ச்சிகளில் கலக்கியுள்ளனர். ஐந்து வருடங்களாக இருவரும் இணைந்து நிறைய படங்களில் பணியாற்றியுள்ளனர். தி லயன் கிங் படத்தில் டிமூன் அண்ட் பும்பாவுக்கு இவர்கள் குரல் கொடுத்து பல ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளனர். அதனால், இந்த இழப்பு வார்த்தைகளில் சொல்ல முடியாதது என்று குறிப்பிட்டார். ரோபோ ஷங்கர் எப்போதும் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சந்தோஷமாக இருப்பார் என்றும் கூறினார்.
விஜய் டிவி, சன் டிவி போன்ற பல சேனல்களின் நிகழ்ச்சிகளில் ரோபோ சங்கர் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு நல்ல டான்சர், பெர்பார்மர், மிமிக்ரி ஆர்டிஸ்ட் என பன்முக திறமை கொண்டவர் என்று புகழ்ந்து பேசினார். அவரால் இந்த இழப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் கூறினார்.
ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டபோது, ரோபோ சங்கர் உடல்நல குறைவு காரணமாக மருந்து எடுத்துக்கொண்டதாக சிங்கம் புலி நினைவு கூர்ந்தார். அப்பொழுது, உடல்நிலை சரியாகிவிட்டது என்று ரோபோ சங்கர் கூறியதாகவும், முகம் கொஞ்சம் கருப்பாக இருப்பதாக சொன்னதற்கு, அதுவும் சரியாகிவிடும் என்று நம்பிக்கையுடன் பதிலளித்ததாகவும் தெரிவித்தார்.
ரோபோ சங்கர் அவர்களின் மகள் திருமணம் சமீபத்தில் தான் நடந்தது. பேரனும் பிறந்து அந்த சந்தோஷத்தை அனுபவிக்கும் நேரத்தில் இப்படி ஒரு இழப்பு நேரிடும் என்று நினைக்கவில்லை என்று கண்ணீர் மல்க கூறினார். "ரொம்ப மனஉளைச்சலா இருக்கு" என்று வேதனையுடன் முடித்தார் சிங்கம் புலி.


Click it and Unblock the Notifications











