»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் திரைப்படத்தில் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகை ரோஜா 100 படங்களில் நடித்து முடித்து விட்டார். பொட்டு அம்மன் அவருக்கு 100 வதுபடம்.

டைரக்டர் ஆர்.கே.செல்வமணியின் செம்பருத்தி படத்தில் அறிமுகமானார் நடிகை ரோஜா. அதற்குப்பின் 100 படங்களில் நடித்து முடித்து விட்டார். டைரக்டர்விக்ரமனின் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில் நடித்த ரோஜாவுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது கிடைத்தது. இந்தப் படம்ரோஜாவுக்கு நல்ல பிரேக் கொடுத்தது.

பல தெலுங்குப் படங்களில் நடித்த அவருக்கு ஆந்திர அரசின் சிறப்பு விருதும் கிடைத்தது. 100 படங்களில் நடித்துமுடித்து விட்ட ரோஜாவுக்கு நடிகர் சங்கம் சார்பில் விழா எடுக்கப்பட்டது. விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், பிரபு,குஷ்பு, அஜித் ஆகியோர் இணைந்து இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்தனர்.

100 படங்களில் நடித்த ரோஜாவின் மனம் திறந்த மினி பேட்டி இதோ:

100 படங்களில் நடித்து முடித்து விட்டீர்கள். எந்தப் படங்களில் நடிக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகஇருந்தீர்கள்? எந்தப் படம் உங்களுக்கு அதிக மனநிறைவைக் கொடுத்தது?

இரண்டு படங்கள் எனக்கு மனநிறைவையும், மகிழ்ச்சியையும் கொடுத்தது. அவை செம்பருத்தி மற்றும்உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்.

செம்பருத்தி படத்தில் கிளாமர் நடிகையாக நான் அறிமுகமானேன். அதற்குப் பிறகு பல கிளாமர் ரோல்கள்.அப்புறம் விக்ரமன் சார் டைரக்ஷன்ல உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படம். அது எனக்கு நல்ல பிரேக்கொடுத்தது. அந்தப் படத்தில் கேரக்டர் ரோலில் நடித்தேன். அது கிளாமர் நடிகை என்ற முத்திரையை முற்றிலும்அழித்தது.

ஒரு ஹீரோயினாக சினிமா உலகில் உங்களது பங்கு என்ன ரோஜா?

எனது அம்மா மிகவும் அழகாக என்னைப் பெற்றெடுத்ததே என் பாக்கியம். எனது சகோதரர்கள் என்னை மிகவும்அன்பாகப் பார்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் ஊக்கம்தான் நான் பல படங்களில் நன்றாக நடிக்கமுடிகிறது. 100 படங்களில் நடித்த நான் சினிமாவுக்கு எந்த அளவுக்கு பங்காற்றினேன் என்று தெரியவில்லை.முடிந்த அளவுக்கு சிறப்பாக பணியாற்றியிருக்கிறேன் என்று நினைக்கிறேன. எனக்கு தமிழகத்திலும்,ஆந்திராவிலும் அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுவும் எனக்குக் கிடைத்த பாக்கியம்.

100 படங்களில் நடிப்பேன் என்று நினைத்துப் பார்த்தீர்களா?

கண்டிப்பாக இல்லை. ஆனால் 100 படங்களில் நடித்து விட்டதை நினைக்கும் போது மிகவும் பரவசமாகஇருக்கிறது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். அனைத்துப் படங்களிலுமே நான் ஹீரோயினாக நடித்திருப்பதும்என்னை மகிழ்ச்சியடைய வைக்கிறது.

டபுள் செஞ்சுரி போட நினைக்கிறேன். அதாவது ரசிகர்கள் எனக்கு ஆதரவு கொடுக்கும் வரை நான்திரைப்படங்களில் நடிப்பேன்.

ரோஜாவின் நெருங்கிய நண்பர் யார்?

உமா. என்னோட க்ளாஸ்மேட். காலேஜ் மேட்டும் கூட. கிரிக்கெட் பிளேயர் வெங்கடபதி ராஜூவைக் காதலித்துக்கொண்டு இருக்கிறார் அவர். அவர் எனது நல்ல தோழி.

நீங்கள் இதுவரை நடிக்காத கேரக்டர் ..?

மனநோயாளியாக நடிக்கவில்லை. அப்படி நடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை.

உங்கள் தொழிலில் ஏற்பட்ட சறுக்கல்கள்?

நான் தயாரிப்பாளராக சினிமா தொழிலில் ஈடுபட்ட போது கையிலிருந்த பணம் முழுவதும் கரைந்தது என்னைமிகவும் வருத்தப்பட வைத்தது.

Read more about: acting actress century movies roja

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil