»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

தயவு செய்து ஒரு பெண்ணை தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு செல்லும் வரை எழுதாதீர்கள். அவள்அமைதியாக வாழக் கூட உரிமை இல்லையா என்று நிருபர்களிடம் கூறினார் ரோஜா.

சமீப காலமாக கோர்ட்டுக்கும் வீட்டுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார் ரோஜா. செக் மோசடி வழக்குகள் தான்பெரும்பாலும் அவருக்கு எதிராக கோர்ட்டுகளில் பதிவாகிக் கொண்டுள்ளன.

சமீபத்தில் முரளி மோகன் ரெட்டி என்ற பைனான்சியர் தொடுத்த வழக்கில் ரோஜாவுக்குப் பிடிவாரண்ட்பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கோர்ட்டில் ஆஜராகி மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில் வியாழக்கிழமை திடீரென்று செய்தியாளர்களைச் சந்தித்தார் ரோஜா. அவருடன் அவரது வக்கீல்சிவாவும் உடனிருந்தார். செய்தியாளர்களிடம் ரோஜா கூறுகையில்,

கடந்த ஆண்டு வரை அதிக படங்களில் நடித்த நடிகை நான் தான். எனவே எனக்குப் பணப் பற்றாக்குறைஇருப்பதாகக் கூறவே முடியாது. அதனால் செக் மோசடி செய்து விட்டேன் என்றும் கூற முடியாது.

நான் முன்பு ரொம்ப பிசியாக இருந்தபோது, எனது செக்குகள் பெருமளவில் தவறாகப் பயன்படுத்தப்பட்டன.அதுபோலவே முரளி மோகன் ரெட்டி சம்பந்தப்பட்ட செக்கும் சென்றுள்ளது. இருப்பினும் போத்ரா சம்பந்தப்பட்டசெக் வழக்கு அனேகமாக முடிந்து விட்டது. ரெட்டி வழக்கு நிலுவையில் உள்ளது.

எனது கையெழுத்திடப்பட்ட செக் யாரிடமாவது இருந்தால் அடுத்த 15 நாட்களுக்குள் எனது வக்கீலை அணுகிஅவர்களது பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த வழக்குகளால் எனது மனநிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்படியே நீடித்துக் கொண்டிருந்தால் எனதுதனிப்பட்ட வாழ்க்கையும் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்துள்ளேன். அதனால் தான் பணம் வாங்கியிருக்காவிட்டாலும் கூட பணத்தைக் கொடுத்து வருகிறேன்.

முரளி மோகன் ரெட்டியிடம் நான் பணம் ஏதும் வாங்கவில்லை. ஆனால் எனது கையெழுத்திட்ட செக்கை அவர்வைத்துள்ளார். எனக்குத் தெரியாமலேயே நடந்து விட்ட விவகாரம் இது. ஆனால் நான் நிம்மதியாக இருக்கவேண்டுமானால், இதை விரைவில் தீர்க்க வேண்டும்.

இந்த குழப்பங்களால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவு வரை நான் சென்று விட்டேன். பத்திரிக்கைகள் தான்இதற்குக் காரணம்.

தயவு செய்து ஒரு பெண்ணை தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு செல்லும் வரை எழுதாதீர்கள். ஒரு பெண்அமைதியாக வாழக் கூட உரிமை இல்லையா என்றார் ரோஜா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil