»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

எனக்கு அம்மா ரோல்களே போதும் என்கிறார் ரோஜா.

செல்வமணியுடன் கல்யாணமானதோடு சினிமா சான்ஸ்கள் நின்று போக சமீபத்தில் சரத்குமார் நடித்த அரசு படத்தில் அவருக்குஅம்மாவாக நடிக்கக் கூப்பிட்டார்கள். ரோஜா யோசிப்பார் என நினைத்த இயக்குனருக்கும் சரத்குமாருக்கும் பெரும் அதிர்ச்சி.

உடனே ஓ.கே. சொன்னார். இந்தப் படத்தில் அப்பா சரத்குமாருக்கு இவர் மனைவி. மகன் சரத்குமார் இவரிடம் அம்மா.. அம்மா.. என்றுகொஞ்சுகிறார். படம் பார்ப்பவர்களுக்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் அதைப் பற்றி ரோஜா கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அம்மா வேடத்தில் நடிக்கச் சொல்லி நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளனவாம். இதை ரோஜாவேசொன்னார்.

நான் தமிழ், தெலுங்கில் பல படங்களில் ஹீரோயினா நடித்து முடித்துவிட்டேன். நான் யார் கூட எல்லாம் டூயட் பாடி மரத்தை சுத்திஓடினேனா, இப்போ அதே ஹீரோக்களுக்கு ஆண்டி வேஷத்துக்கும் அம்மா வேஷத்துக்கும் கூப்பிடுறாங்க.

இதில் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. இன்னும் என் கடன் தொல்லை தீரவில்லை. இதனால் எந்த ரோல் என்றாலும் சரி. ஒப்புக் கொள்ளநான் தயார் என்கிறார் ரோஜா.

செல்வமணி கையில் படங்கள் ஏதும் இல்லை. இதனால் ரோஜா தான் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சம்பாதிக்க வேண்டிய நிலையில்இருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil