twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'அப்போ ரூட்டு தல... இப்போ நாட்டுக்கே தல...’ பஞ்ச் பேசும் அட்டக்கத்தி தினேஷ்!

    நடிகர் அட்டக்கத்தி தினேஷ் நடித்துள்ள அண்ணனுக்கு ஜே திரைப்படம் சமகால அரசியலை நையாண்டி செய்யும் வகையில் உருவாகியுள்ளது.

    |

    Recommended Video

    கூடிய விரைவில் அட்டகத்தி 2 வருகிறது சொல்கிறார் தினேஷ்- வீடியோ

    சென்னை: அட்டக்கத்தி படத்தில் ரூட்டு தலையா இருந்த தான், அண்ணனுக்கு ஜே படத்தில் நாட்டுக்கே தல ஆகிவிட்டதாக நடிகர் தினேஷ் தெரிவித்துள்ளார்.

    ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த அட்டக்கத்தி படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் தினேஷ். குக்கூ, விசாரணை என பாராட்டத்தக்க படங்களில் நடித்துள்ள தினேஷ், வெற்றிமாறன் தயாரிப்பில் ராஜ்குமார் இயக்கியிருக்கும் அண்ணனுக்கு ஜே படத்தில் நடித்துள்ளார்.

    இந்த படம் குறித்து ஒன்இந்தியாவிடம் பேசிய அவர், அட்டக்கத்தி படத்தில் ரூட்டு தலையா இருந்த தான், அண்ணனுக்கு ஜே படத்தில் நாட்டுக்கே தல ஆகிவிட்டதாக தெரிவித்தார்.

    அரசியல் நையாண்டி:

    அரசியல் நையாண்டி:

    அண்ணனுக்கு ஜே படம் அரசியல் நையாண்டி படம். இப்படத்தில் யாரையும் குறிப்பிட்டு பண்ணவில்லை. இப்போது தமிழகத்தில் மோசமான நிலையில் அரசியல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதைப்பற்றி தான் அண்ணனுக்கு ஜே படத்தில் பேசியுள்ளோம். இப்போதைய அரசியல் நிலையை நக்கல், காமெடி கலந்து சொல்லியிருக்கிறோம். நிச்சயம் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இப்படம் இருக்கும்.

    பயிற்சி:

    பயிற்சி:

    படத்தில் பனை மரம் ஏறுவது போன்ற ஒரு காட்சி. ஆரம்பத்தில் பார்க்க இது எளிதாக இருப்பது போல் தோன்றியது. அதற்காக இரண்டு நாள் பயிற்சி எடுத்துக் கொண்டேன். ஆனால் நான் செய்த தவறு, காலில் ஷூ போட்டுக் கொண்டு பயிற்சி செய்தது தான். ஆனால் படப்பிடிப்பின் போது வெறும் காலில் செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். அது மிகவும் கஷ்டமாக இருந்தது.

    பயங்கர கால் வலி:

    பயங்கர கால் வலி:

    வெறும் காலில் மரத்தில் ஏறவே முடியவில்லை. 5,6 டேக்குகள் எடுத்துக் கொண்டேன். அடுத்தநாளும் அதே காட்சிகள் படமாக்கப்பட்டதால், கால்களில் பயங்கர வலி. திருவண்ணாமலை பக்கம் படப்பிடிப்பு நடந்ததால், மலை மீது ஏறி இறங்கினேன். அதன் பிறகு தான் வலி சரியானது.

    விசாரணை:

    விசாரணை:

    ஒன்றரை வருடம் எடுக்கப்பட்ட படம் குக்கூ. எனக்கு தமிழில் இரண்டாவது படம் என்பதால் அதிக பயிற்சி எடுத்துக் கொண்டு கண் பார்வையில்லாதவராக நடித்தேன். ஆக்சன் என்று சொன்னவுடன் என் கண்கள் மாறி விடும். அதனாலேயே படம் முடிந்தபிறகும் அதில் இருந்து வெளியில் வர முடியவில்லை. விசாரணை வரை அந்தப் பாதிப்பு எனக்கு இருந்தது. விசாரணை படப்பிடிப்பின் போது தான் என்னை அடிஅடியென அடித்து வெற்றிமாறன் மாற்றினார். மிகவும் கஷ்டப்பட்டு அதில் இருந்து வெளியில் வந்தேன்.

    துடைப்பக்கட்டை அடி:

    துடைப்பக்கட்டை அடி:

    இப்படத்தில் மஹிமா நன்றாக நடித்துள்ளார். படத்தில் துடைப்பக்கட்டையால் அடிப்பது போன்ற காட்சி இருந்தது. இதற்காக 25 டேக் வரை எடுத்து துடைப்பக்கட்டையால் என்னை அடிஅடியென விளாசி விட்டார். நானும் படத்தில் அவரை அடிப்பது போன்ற காட்சிகள் உண்டு. சில சமயங்களில் தெரியாமல் கை வேகமாக அவர் மீது பட்டு விடும். ஆனால், அவர் அவற்றை எல்லாம் கண்டு கொள்ள மாட்டார். நல்ல நடிகை. நிச்சயம் தமிழில் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

    அட்டக்கத்தி 2:

    அட்டக்கத்தி 2:

    ரஞ்சித் இவ்வளவு உயரத்திற்கு போனது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நானும் உயர வேண்டும் என்பது தான் அவரது ஆசை. அட்டக்கத்தி 2 பத்தி இருவரும் பேசிக்கொண்டிருக்கிறோம். இன்னும் கன்பார்ம் ஆகவில்லை. ஆனால் விரைவில் இருவரும் இணைந்து அப்படத்தைப் பண்ணுவோம் என நினைக்கிறேன். நிச்சயம் அப்படமும் வெற்றி பெறும். ரூட்டுத்தல இப்போ நான் நாட்டுக்கே தல.

    அரசியலில் இறங்கும் ஐடியா இருக்கிறதா..?

    அரசியலில் இறங்கும் ஐடியா இருக்கிறதா..?

    அதனால் என்ன அரசியலில் இறங்கினால் போயிற்று' என சிரித்துக் கொண்டே பேட்டியை முடித்துக் கொண்டார் தினேஷ். அண்ணனுக்கு ஜே மட்டுமின்றி, ‘பல்லு படாம பார்த்துக்க', ‘களவானி மாப்பிள்ளை' உள்ளிட்ட படங்களிலும் தினேஷ் நடித்து வருகிறார். இதில் பல்லு படாம பார்த்துக்க சோம்பி கதை. அதோடு அடல்ட் மூவி ஆகும்.

    English summary
    In an exclusive interview to OneIndia actor Dinesh shared his experience in Annanuku Jai and future projects.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X