twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தூண்களாய் நின்ற இணை துணை இயக்குனர்கள் ...ஒரு படம் கற்று கொடுத்த பாடம்

    |

    சென்னை : பரபரப்பும் டென்ஷனும் நிறைந்த இன்றைய அவசர உலகில், ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லது செய்ய யாராவது வரமாட்டார்களா என்ற கேள்விதான் பலருக்கும் இருக்கும். ஆனால் செய்ய வருபவர்கள் வெகு சிலரே.

    அது போல ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதிரடி, ஆக்ஷன், காமெடி திரைப்படங்கள் வந்து கொண்டிருந்தாலும், சமூக நலன், சர்ச்சையான மக்கள் வாதம்,எதிர்பார்ப்பு போன்ற பல சுவாரஸ்யங்கள் கலந்து வரும் படங்கள் வெகு சில மட்டுமே.

    இதென்னடா போஸ்... திருமணத்திற்கு பின் டோட்டலா மாறிய வித்யுலேகா ராமன்!இதென்னடா போஸ்... திருமணத்திற்கு பின் டோட்டலா மாறிய வித்யுலேகா ராமன்!

    அதிலும் சர்ச்சைகள் சரமாரியாக வந்து விழும் படங்களையும் கண்டிருக்கிறது திரையுலகம். அப்படி பல சர்ச்சைகளும் பேச்சுகளும் போட்டிகளும் நிறைந்த திரெளபதி படத்தின் நிகழ்வுகளை நாம் மறந்திருக்க மாட்டோம். அந்த திரைப்படத்தின் இயக்குனர் ஜி.மோகன் இப்பொழுது இயக்கியுள்ள திரைப்படம்:" ருத்ரதாண்டவம்" சமீபத்தில் வெளியாகியது. அதற்கும் பல சர்ச்சைகளும் விமர்சனங்களும் வித விதமாக எழுந்த நிலையில், உதவி இயக்குனர்கள் இந்த திரைப்படத்தின் டீம்-ல் தூண்களாக பணியாற்றிய சிலர் நமது தளத்திற்கு அளித்த சுவாரஸ்யமான பேட்டியில் சில முக்கியமான கேள்வி பதில்களை இங்கே கானாலாம்.

    பசங்கள திட்டாதீங்க..ப்ளீஸ்

    பசங்கள திட்டாதீங்க..ப்ளீஸ்

    இந்த திரைப்படத்தின் இணை இயக்குனர் முகுந்தன் அவர்களிடம்,"எப்படி உங்களுக்கு இந்த படத்துல வர வாய்ப்பு வந்துச்சு," அதற்கு அவர் கூறிய பதில் ..."நல்ல எனர்ஜிடிக்-ஆன டீம் கூட ஒர்க் பண்ணேன். மேனேஜர் முருகன் சார்தான் எனக்கு கால் பண்ணி, ஒரு பெரிய டைரக்டரோட அடுத்த படம். நீங்க கோ-டைரக்டர் ஆ வொர்க் பண்ண முடியுமான்னு கேட்டாரு. சில மாதம் கழிச்சி போய் நேர்ல பார்த்தா மோகன் ஜி. எனக்கு கொஞ்சம் ஷாக்-கா இருந்துச்சு. டைரக்டர் கிட்ட, ஏற்கனவே திரெளபதி மாதிரி பரபரப்பான படமா?-ன்னு கேட்க, அதவிட 100 மடங்கு அதிகமா இருக்கும்-ன்னு சொன்னாரு.கதைய கேட்டதும் ரொம்பவே பிடிச்சி போச்சு. ஒரு ஃபேமிலி மாதிரி ஒர்க் பண்ணோம். யாரையும் தாக்கும் எண்ணத்தோட இந்த படம் சொல்லப்படல. ஒரு விஷயத்த கொண்டு போய் சேர்க்கனும்னு தான் அவரோட முடிவா இருந்துச்சு. பயங்கரமான விஷயங்கள படங்கள்ல சொல்லிருந்தாலும்,நிஜமவே ஒரு குழந்தை மனசுதான் அவருக்கு.

    குறை தயங்காம சொல்லு

    குறை தயங்காம சொல்லு

    "எந்த விஷயம் உங்கள ரொம்ப ஈடுபாடோட இருக்க வச்சது?" உதவி இயக்குனர் யுவராஜிடம் இந்த கேள்வி கேட்க ,அவர் கூறிய பதில் : "இந்த ஸ்க்ரிப்ட்ட டெவலப் பண்ணி கொண்டு வா-ன்னு ஒரு சின்ன டாஸ்க்- குடுத்து தான் என்ன செலக்ட் பண்ணாரு. அத டெவலப் பண்ணி, அத நரேட் பண்ண விதம் ரொம்ப பிடிச்சி போயி, இந்த டீம்ல என்ன சேர்த்துகிட்டாங்க. "எந்த குறை நிறை இருந்தாலும் தயங்காம உடனே சொல்லு, அது சரியா இருந்தா நிச்சயமா எடுத்துக்கிறேன்"-ன்னு சொன்னாரு. எத்தன டைரக்டர் இப்படி எல்லாம் சொல்லுவாங்க. அந்த விஷயத்துல ரொம்பவே ஸ்பெஷல். எல்லாருமே ஒரு ஃபேமிலியா.. ஒரு திருவிழா போலதான் இருந்துச்சு."எந்த நிலையிலும் பசங்கள திட்டி வேல வாங்காதீங்க"-ன்னு இணை இயக்குனர் கிட்ட சொல்லிருக்காரு மோகன் அண்ணா.. அந்த அளவுக்கு எங்கள நல்லா பார்த்துகிட்டாரு. அப்பாடா சரியான இடத்துலதான் வந்துருக்கோம்ன்னு ஒரு திருப்தி வந்துச்சு. பசங்க எல்லாரும் ரொம்பவே சந்தோஷமா டெடிகேட்-ஆ ஒர்க் பண்ணோம்

    இது பேசப்படும். மிஸ்பண்ணாதீங்க

    இது பேசப்படும். மிஸ்பண்ணாதீங்க

    உதவி இயக்குனர் பாலாஜி இந்த வீடியோவில் சந்தோஷமாக சொன்ன விஷயம் ,பழைய வண்ணார பேட்டை படங்கள்ல இருந்து இயக்குனர் மோகன எனக்கு தெரியும், அதுக்கு முன்னாடி சொல்லப்போனா என் ஸ்கூல் சீனியர் அவர். அவரோட கடந்து வந்த பாதை, சறுக்கல் எல்லாமே தெரியும். இந்த டீம் ல நான் கடைசியா தான் வந்து ஜாயின் பண்ணேன். ஒரு பிறவி பயன் அடைந்தது போல ஒரு ஃபீல் எனக்கு இருக்கு. ஏன்னா.. ஸ்க்ரிப்ட், கதை எல்லாமே சூப்பர். அது தாண்டி கேமராமேன் ஃப்ரூக் மெரட்டி இருக்காரு. மியூசிக் அது போல நிச்சயமா பேசப்பட்டு வருது . ருத்ரதாண்டவம் படத்துல கேமரா, ம்யூசிக் ரெண்டுமே மக்கள் மத்தியில ரொம்பவே பேசப்படும். அத உறுதியா சொல்றேன்.

    இப்படியெல்லாம் யோசிப்பாரா?

    இப்படியெல்லாம் யோசிப்பாரா?

    உதவி இயக்குனர் சுரேந்தர் அனைவரும் செய்யும் இண்ட்ராக்ஷன் பார்த்து,மனதில் பட்டதை உடனே மைக் வாங்கி பேச துவங்கினார் .அவர் சொன்ன அனுபவம் என்னவென்றால் பழைய வண்ணாரப்பேட்டை படத்துலேர்ந்து மோகன் அண்ணா கூட அசிஸ்டண்ட் டைரக்டரா இருக்கேன். அதுக்கு முன்னாடியே அண்ணன் பழக்கம். ஒரு சிங்கிள் ட்ராக் ரிலீஸ் ஆகியிருந்த நேரம். அப்ப நான் 11th படிச்சிட்டு இருந்தேன். எதாச்சும் வேல இருக்குமான்னு கேட்க போயி, அப்படியே அவர் கூட ட்ராவல் பண்ணேன். என்ன வேலன்னு கூட எனக்கு கேட்க தெரியாது. ஆனா கூடவே இருந்தேன். ஓரளவு பேசிக் நாலேஜ் கத்துகிட்டேன். அப்பறம் திரௌபதி படத்துல அசிஸ்டண்ட் டைரக்டரா ஒர்க் பண்ணேன். இப்ப ருத்ரதாண்டவத்துலயும் அசிஸ்டண்ட்ஆ ஒர்க் பண்ணேன். நல்ல சிஷ்யன் கிடைக்கிறத விட நல்ல குரு கிடைக்கனும். குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன் இல்லன்னு தான் எல்லாரும் சொல்வாங்க. ஆனா மோகன் அண்ணா சொல்றது என்னன்னா.. குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன் இருக்கனும்ன்னு தான். அப்படி ஒரு குரு எங்களுக்கு கிடைச்சிருக்காரு

    எப்படி நடிச்சாங்க தெரியுமா?

    எப்படி நடிச்சாங்க தெரியுமா?

    உதவி இயக்குனர் கெளதம் இந்த படத்தில் முக்கிய பொறுப்புகளை பார்த்து வந்தார் . அவரிடம் நாம் கேட்ட கேள்வி : "நீங்க கூட இருந்து பார்த்து ரசிச்ச சீன் எது?" பதில் : "15,16 வருஷமா எனக்கு மோகன் அண்ணா பழக்கம். என் ஸ்கூல் சீனியர். ஒரே ஏரியா நாங்க. அவர் கூடதான் பாதி நாள் இருந்துருக்கேன். இந்த ருத்ர தாண்டவம் படத்துல நடிச்சவங்களபத்தி சொல்லனும். முக்கியமா அந்த கோர்ட் சீன். எல்லாருமே சிங்கிள் டேக் தான். அவ்ளோ நல்ல சீன். ராதாரவி, தம்பி ராமையான்னு நிறைய சீனியர் ஆர்டிஸ்ட். எல்லாருமே அவ்ளோ தத்ரூபமா அந்த கேரக்டரா வாழ்ந்துருந்தாங்கன்னு தான் சொல்லனும். க்ளைமேக்ஸ் ரொம்பவே எல்லாரையும் பேசப்படும்."

    பெண் உதவி இயக்குனர்கள்ன்னாவே..

    பெண் உதவி இயக்குனர்கள்ன்னாவே..

    "அத்தனை ஆண்கள் மத்தியில் ஒரு பெண் உதவி இயக்குனாரா பணியாற்றிய உங்கள் அனுபவம் எப்படி இருந்துச்சு?" என்று உதவி இயக்குனர் சந்திரலேகாவிடம் கேள்வி கேட்ட போது : "பொதுவா இப்ப உள்ள சினிமாக்கள்ல, பெண் உதவி இயக்குனர்கள் ஒருத்தராச்சும் இருப்பாங்க. அவங்க ஹீரோயின் கூட, பெண் நடிகர்கள் கூட ஒரு கம்யூனிகேஷன் க்கு இருக்கட்டும்ன்னு தான் பயன்படுத்தபடறாங்க. ஆனா அவங்களுக்கும் கிரியேட்டிவ் ஆன விஷயங்கள் இருக்கும். திறமைகள் இருக்கும். அது வெளில வரனும். எனக்கு அது இந்த படத்துல கிடைச்சது. உதவி இயக்குனரா பண்ணிருக்கேன். ஒரு பெரிய ரோல் ஒன்னும் நடிச்சிருக்கேன். கூடவே ப்ரொடக்ஷன் டீம் ல ஒரு முக்கியமான வேலையும் எனக்கு இருந்துச்சு. அது மூலமாகவும் எனக்கு நிறைய விஷயங்கள் கத்துக்க முடிஞ்சது. என்னோட திறமைகளும் வெளிப்பட்டுச்சு. நானும் நிறைய கத்துக்க முடிஞ்சது என்று தனது அனுபவங்களை பகிர்ந்தார் .

    தூண்களாய் நின்ற

    உதவி இயக்குனர் விவேக்கிடம் "மோகன் ஜி கிட்ட நீங்க கத்து கிட்டது என்ன?"என்று கேட்ட போது..."திரெளபதி படத்துல எனக்கு வாய்ப்பு வாங்கி தந்ததே சுரேந்தர் தான். எனக்கு ஸ்கூல் ப்ரண்ட் அவன். மோகன் அண்ணன் கிட்ட, நானும் அவனும் நடிச்ச ஷாட் ப்லிம்ல்லாம் நடிச்சத காட்டிருந்தான். அப்பறம் மோகன் அண்ணன் கிட்ட சொல்லி திரெளபதி படத்துல உதவி இயக்குனரா வாய்ப்பு கிடைச்சது. எல்லாருமே ரொம்ப நல்லா டீமா ஒர்க் பண்ணிருந்தோம். இப்போ ருத்ர தாண்டவம் படத்துலயும் உதவி இயக்குனரா பண்ணியிருக்கேன். இந்த லாக்டவுனுக்கு அப்பறம் பரபரப்பா பேசப்படும் படம்ன்னா அது ருத்ரதாண்டவம் தான். நிறைய விஷயம் கத்துக்கிட்டேன் மோகன் அண்ணாகிட்ட. " உனக்கு என்ன தெரியுதோ நீ செய்.. என்ன கத்துக்க முடியுமோ கத்துக்க. நீ இதுல எவ்வளவு கத்துக்கிறங்குறது தான் சினிமா.. நான் கத்து குடுக்கறதுல இல்ல.. " " இப்படி நிறைய விஷயம் சொல்லி குடுத்தார் மோகன் அண்ணா. நிஜத்துல,நேர்ல சந்திக்கும் போது , டெரரா இருக்க மாதிரி இருக்கும். ஆனா குழந்த மனசு. வெளில சொல்லாத எத்தனையோ உதவிகள பண்ணிகிட்டு இருக்காரு. இவரு கெடச்சதுக்கு நாங்கல்லாம் பெருமை படறோம்" என நெகிழ்ந்து கூறினார்.

    ஒரு பிரம்மாண்ட படைப்பின் வெற்றிக்குப் பின் அதற்கு காரணமாய், தூண்களாய் நின்ற அத்தனை பேரும் ருத்ர தாண்டவ வெற்றியில் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாக உள்ளனர்.மேலும் பல சுவாரஸ்ய தகவல்களையும் அவர்களின் மகிழ்ச்சிகளையும் வீடியோவாக காண https://youtu.be/RBJ_DjY1--g என்ற பில்மிபீட் யூட்யூப் லிங்கை கிளிக் செய்தும் பார்க்கலாம் .

    English summary
    Rudra Thandavam Direction Team Interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X