»   »  என் மீது தவறில்லை-சாமி

என் மீது தவறில்லை-சாமி

Subscribe to Oneindia Tamil


நடிகை பத்மப்ரியா விவகாரத்தில் என் மீது எந்தத் தவறும் இல்லை என்று பத்மப்ரியாவை அடித்ததற்காக ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ள மிருகம் படத்தின் இயக்குநர் சாமி கூறியுள்ளார்.

Click here for more images

மிருகம் படத்தின் ஷூட்டிங்கின் போது சரியாக நடிக்காததால் பத்மப்ரியாவை கன்னத்தில் அறைந்து பரபரப்பை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கியுள்ளார் சாமி.

இந்த விவகாரம் குறித்து பஞ்சாயத்துப் பேசிய தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், சாமிக்கு ஒரு ஆண்டு தடை விதித்துள்ளது. மிருகம் படத்தை மட்டும் முடிக்க சாமிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நடந்தது என்ன என்பது குறித்து நாம் சாமியை அணுகி கேட்டபோது, என் பக்கம் எந்தத் தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எந்த இயக்குநருக்கும், நடிகைக்கும் இதுபோல நடப்பது வழக்கம்தான்.

ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், பத்மப்ரியா என் மீது சுமத்திய பாலியல் தொந்தரவு என்ற புகார் பொய்யானது என்பது நிரூபணமாகியுள்ளது.

பத்மப்ரியாவின் குணம் குறித்து பலருக்கும் தெரியாது. முரட்டுத்தனமான குணம் படைத்தவர் அவர். பிடிவாதம் அவருக்கு ஜாஸ்தி. இயக்குநரை விட தான்தான் பெரியவர் என்று காட்டிக் ெகாள்ள முயற்சிப்பவர் அவர்.

மிருகம் படத்தை முடிக்க தயாரிப்பாளர் சங்கம் என்னை அனுமதித்துள்ளது. பத்மப்ரியா சம்பந்தப்பட்ட பெரும்பாலான காட்சிகள் முடிந்து விட்டன. படத்தை முடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அவருடன் இணைந்து பணிபுரிய நான் தயாராகவே இருக்கிறேன்.

என் மீது பத்மப்ரியா சுமத்திய பொய்யான பாலியல் குற்றச்சாட்டுக்களுக்காக அவர் மீது நான் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. தடை குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை.

யார் வேண்டுமானாலும், யார் மீது வேண்டுமானாலும் புகார் கூறலாம். துரதிர்ஷ்டவசமாக நமது சட்டங்களும் அதுபோன்று அவதூறாகப் பேசுவோருக்கு உதவியாகவே உள்ளது என்றார் சாமி.

தமிழ் சினிமாவில் நடிகைகளை இயக்குநர்கள் அடிப்பது என்பது புதிதான விஷயமல்ல. முன்பு பாரதிராஜா, பாலச்சந்தர் போன்ற பெரிய இயக்குநர்கள் கூட ஹீரோயின்களை அடித்ததாக வரலாறு உள்ளது.

தாங்கள் விரும்பும் வகையில் காட்சி வர வேண்டும் என்ற ஆதங்கத்தில் நடிகைகள் அடிபட்டிருக்கிறார்கள். முன்னணி நடிகைகள் கூட இதற்கு விதிவிலக்காக இருந்ததில்லை. புதுமைப் பெண் படத்தில் ஒரு காட்சியில் சரியாக அழவில்லை என்பதற்காக ரேவதியை அடித்து நடிக்க வைத்தார் பாரதிராஜா என்பது அந்தக் காலத்து செய்தி.

அதேபோல பாக்யராஜ், பாண்டியன், ரத்தி அக்னிஹோத்ரி, ராதிகா போன்றோரும் பாரதிராஜாவிடம் அடி வாங்கியுள்ளனர்.

இயக்குநர் கே.பாலச்சந்தர், சரியாக நடிக்காவிட்டால் நடிகர்களை துண்டால் அடிப்பார் என்று கூறப்படுவதுண்டு.

ஆனால் அதையெல்லாம் அந்தக் கலைஞர்கள் பெரிதுபடுத்தியதில்லை. மாறாக மோதிரக் கையால் குட்டுப்பட்டோம் என்று பெருமையாகத்தான் கூறியுள்ளனர். மேலும், குருவின் கையால் ஆசிர்வாதம் வாங்கியதாகத்தான் அவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் இன்றோ?

Read more about: samy
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil