சுசித்ராவிற்கு புத்தி பேதலித்துவிட்டதா? நம்புறமாதிரியே இல்ல.. பிரபலம் பளீச்!
சென்னை: பிரபல பின்னணிப் பாடகியான சுசித்ரா, என்னுடைய 48 வயதில் என் மனதில் காதல் வந்தது. என் வாழ்க்கையை காப்பாற்றுவது போல சண்முகம் என் வாழ்க்கைக்குள் வந்தார். தனுஷ் உன் வாழ்க்கையை கெடுத்துவிட்டான், கார்த்திக் ராஜாவால் உன் வாழ்க்கையால் போய்விட்டது. நானும் வாழ்க்கையில் என் மனைவி, குழந்தைகளால் பெரிய கஷ்டப்பட்டு விட்டேன். இனி மேல் உனக்கு நான் எனக்கு நீ என்று இருப்போம், என பல விதமான ஆறுதல் வார்த்தைகளை சொல்லி என்னுடைய வாழ்க்கைக்குள் வந்தார். நானும் அவர் சொல்வது எல்லாம் உண்மை என நினைத்து அவரை காதலிக்க ஆரம்பித்தேன்.
ஆனால், அவர் என்னை ஏமாற்றி பணம் மொத்தத்தையும் சுருட்டிவிட்டார். ஆனால், தினமும் என்னை அடித்து உடைத்து மிதித்து கொடுமைப்படுத்தினார் என்று சுசித்ரா அந்த வீடியோவில் பேசி இருந்தார். இதுகுறித்து KING 24x7 யூடியூப் சேனலில் சபிதா ஜோசப் பேசி உள்ளார். அதில், ஒவ்வொரு நடிகர்கள் பற்றியும் பல விதமான குறைகளை சொல்லிய சுசித்ரா இப்படி ஏமாந்து விட்டேன் என்று சொல்வதை நம்பும்படியாகவே இல்லை. ஒருவர் பேசுவதை வைத்தே அவன் எப்படிப்பட்டவன், எதற்காக இப்படி பேசுகிறான் என்பதை கண்டுபிடிக்க தெரிந்த சுசித்ராவிற்கு சண்முகம் எப்படிப்பட்டவர் என்பதை கண்டுபிடிக்க தெரியவில்லையா... சண்முகம் சுசித்ராவிற்கு சூனியம் வைத்துவிட்டாரா.

புத்தி பேதலித்துவிட்டதா: சண்முகம் திருமணமானதை மறைத்து என்னுடன் ரெண்டு வருடம் வாழ்ந்து வந்தார், என்னை தினமும் அடித்து துன்புறுத்தினார், என் சொத்துக்களை அபகரித்துக் கொண்டார் என சுசித்ரா பேசியதை கேட்கும்போது, அவர் என்ன உலகமே தெரியாத எல்கேஜி படிக்கும் மாணவியா இல்லை, சுஜித்ராவிற்கு புத்தி பேதலித்து விட்டதா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. பல ஆதாரங்களை வைத்திருக்கும் சுசித்ரா, சண்முகம் அடித்த வீடியோவை எடுத்து போலீசில் புகார் கொடுத்து இருக்கலாமே, சண்முகம், சுசித்ராவை ஏமாற்றினாரா இல்லை சுசித்ரா சண்முகத்தை ஏமாற்றி பணம் பறிக்க நினைக்கிறாரா என்பது தெரியவில்லை. சுசித்ரா இன்றும் நன்றாக திரைக்கதை எழுதி, கதையில் சுவாரசியத்தை கூட்டி சொன்னால் நன்றாக இருக்கும் என்று பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் அந்த பேட்டியில் பேசினார்.


Click it and Unblock the Notifications











