மகள் எடுத்த விபரீத முடிவு.. நிலை குலைந்து போன சூப்பர் ஸ்டார்.. அவ்வளவு கஷ்டப்பட்டதும் இதுக்கு தானா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுசை 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் இருவரும், சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்த ஜோடியின் விவாகரத்து முடிவு ரசிகர்களிடையேயும், அவர்களது குடும்பத்தினருடமும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களது குழந்தைகளுக்காக பல சந்தர்ப்பங்களில் சந்தித்துக்கொள்கின்றனர். ஆரம்பத்தில் இந்த திருமணத்திற்கு ரஜினிகாந்த் சம்மதிக்கவே இல்லை என மூத்த பத்திரிக்கையாளர் பிதா ஜோசப் பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.
இதில், ராமாயணம், மகாபாரதம் என இன்னும் பல இதிகாசங்களை பார்த்தால் அவை அனைத்துமே பெண்ணுக்காக நடந்த யுத்தங்களாக தான் இருக்கும். அதேபோல தான் தனுஷுக்கும் சிம்புக்கும் இடையே ஒரு பெண்ணால் பிரச்சனை ஏற்பட்டது. இவர்கள் இருவருமே ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தனர். தனுஷும் ஒரு பெரிய இயக்குனரின் மகன், சிம்புவும் ஒரு பெரிய இயக்குநரின் மகன், இருவருமே ஒரே நேரத்தில் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்கள்.

நல்ல நட்பு: ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், சிம்புவும் பள்ளிக்காலம் முதலே நல்ல நண்பர்களாக இருந்தார்கள். அந்த நட்பு காலம் செல்ல செல்ல இருவருக்கு இடையே காதலாக மலர்ந்து இருந்தது. அது அவர்களின் நட்பு வட்டாரத்துக்குள் நன்றாகவே தெரியும். அப்படி சென்று கொண்டு இருந்த நேரத்தில் தான் தனுஷ் நடித்த திருடா திருடி திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படம் தான் தனுஷுக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த திரைப்படம். அந்த படத்தின் வரும் மன்மத ராஜா பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த பாடல் தான் சிம்புவுக்கும் தனுசுக்கும் இடையே மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தியது. இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சிம்பு, ஐஸ்வர்யாவுடன் தான் வந்து இருந்தார். இந்த சந்திப்பின் மூலம் தனுஷூக்கும் ஐஸ்வர்யாவிற்கும் நட்பு ஏற்பட்டது.
தற்கொலை முயற்சி: சிம்புவின் தோழியாக காதலியாக இருந்த ஐஸ்வர்யாவின் போக்கு அதன் பிறகு, மாறி தனுஷை பின் தொடர ஆரம்பித்துள்ளார். இந்த விஷயம் சிம்புவுக்கு தெரிய வர, அது மிகப்பெரிய பிரச்சனையானது. இது தொடர்பாக சிம்பு பேசிய ஆடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி பேசு பொருளானது. அதன் பின் இந்த விவகாரம் சூப்பர் ஸ்டாரின் காதுக்கு வர மகளை அழைத்து கண்டித்து, இது நமக்கு சரிபட்டு வராது என பலமுறை தண்டித்து இருக்கிறார். ஆனால், ஐஸ்வர்யா விடாப்பிடியாக இருந்தார். ஒரு கட்டத்தில் தற்கொலை முயற்சி வரை போனதால் வேறு வழியே இல்லாமல் இந்த திருமணத்திற்கு ரஜினி சம்மதம் தெரிவித்தார். ரஜினியின் விருப்பமே இல்லாமல் தான் ஐஸ்வர்யா, தனுஷ் அவர்களின் திருமணமே நடந்தது. அதன் பிறகு ரஜினியின் மருமகன் என்பதால் மிகப்பெரிய உச்சத்தை தனுஷ் அடைந்தார். ஆனால், திருமணமாகி இரண்டு மகன்கள் பிறந்த பிறகு, 18 வருடங்கள் கழித்து இப்போது இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் என சபிதா ஜோசப் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











