»   »  அம்மாவான சதா

அம்மாவான சதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

லீலை என்ற படத்தில் 4 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறார் சதா. இந்தப் படத்தில் அப்பா.. ஸாரி ஹீரோ நம்ம மாதவன் தான்.

இது குறித்து சதாவிடம் கேட்டால், அம்மாவாக கேரக்டரில் நடிக்கும்போது என்னுடைய மாறுபட்ட திறமை வெளிப்படுத்த முடிகிறது என்கிறார்.

இந்தப் படத்துக்கு மாதவன்தான் உங்களை சிபாரிசு செய்தாராமே என்று கேட்டால், கொஞ்சமாய் கோபத்தை காட்டியபடி , அதெல்லாம் இல்லை என மறுக்கிறார்.

படங்களில் பார்க்கவே முடியலையே என்று கேட்டபோது, கால்ஷீட் இல்லாததால் தாம்தூம், நேபாளி படங்களில் நடிக்க முடியவில்லை என்றார் சதா.

தெலுங்கில் சங்கர் தாதா ஜிந்தாபாத் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாராம்.

இந்தியில் லவ் கேம் படத்தில் ரந்தீப் ஹூடாவிற்கு ஜோடியாகவும், மலையாளத்தில் ஜென்மம், நாவல் போன்ற படங்களிலும் நடிக்கிறார்.

எப்போ கல்யாணம்?

நான் சுதந்திரப் பறவை, அதனால் யாரையும் காதலிக்க மாட்டேன், அது டென்ஷனான வேலை. ஆனால் யாரையாவது காதலித்தால், அவர் நல்லவராக இருந்தால் என் பெற்றோர் பச்சை கொடி காட்டுவார்கள் என்கிறார்.

ஹைதராபாத்தில் வீடு வாங்கியுள்ள சதாவிற்கு சென்னையில் வீடு வாங்கும் எண்ணம் இல்லையாம்.

அப்ப மெட்ராஸ் மாப்ளே வேண்டாமா சதா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil