»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அதிரடித் தொடகைள், அரைகுறை உடைகள், அடாவடி ஆட்டங்கள் மற்றும் அதாகப்பட்ட சமாச்சாரங்களால் பல ஹீரோயின்கள் தமிழ் சினிமாவை மிரட்டிக்கொண்டிருக்க கண்களால் பேசியே ரசிகர்களின் நெஞ்சில் உட்கார்ந்துவிட்டார் பாண்டவர் பூமி ஷமிதா.

ரொம்ப அழகு என்று சொல்ல முடியாது. நிறமும் கூட சுமார் தான். பார்க்க, கண்ணியமான நம் பக்கத்து வீட்டுப் பெண் மாதிரி இருக்கிறார். சுட்டித்தனமானவிழிகள் தான் அவரை விட அதிகம் பேசுகின்றன. அளவுடன் சிரிக்கிறார். நடிகைக்கு உரிய அடையாளம் ரொம்ப, ரொம்ப கம்பி. பார்க்கும் யாருக்கும்அவரைப் பிடித்துப்போய் விடும்.

நடித்தது ஒரே படம். அதிலும் முந்தானை விலகாத தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார், இழுத்துச் செருகாத சேலை என இப்போதைய நடிகைகள் செய்த் துணியாதவகையில் உடையணிந்து பரவசப்படுத்தினார்.

பாண்டவர் பூமி மூலம் கோலிவுட்டில் புதிய நட்சத்திரமாக உதித்திருக்கிறார். அடுத்த ஷோபா ரெடி என்ற பேச்சும் எழுந்துள்ளது.

அவரிடம் பேசினோம்:

பாண்டவர் பூமி படத்தை டைரக்டர் மற்றும் உடன் நடித்த நடிக, நடிகையருடன் போய் தியேட்டர்களில் பார்த்தேன். எனது ரசிகர்கள் என்னிடம் கவர்ச்சியைஎதிர்பார்க்கவில்லை என்பதை நேரடியாக தெரிந்து கொண்டேன். அவர்கள் என்னை தங்கள் வீட்டில் ஒரு பெண்ணாகத் தான் பார்க்கிறார்கள்.

சகோதரியாக, காதலியாக, நண்பியாக தங்கள் மனதில் ஒரு மரியாதையான இடம் தந்திருக்கிறார்கள். இந்த அன்புக்கு நான் மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன்.

என்னை ஷோபா அளவுக்கு என்னை புகழ்வது எனக்கும் சந்தோஷமாகவே உள்ளது. ஆனால் அப்படி முத்திரை குத்தி விடுவார்களோ என்று பயமாகவும்இருக்கு.

பாண்டவர் பூமி ஒரு அருமையான அனுபவம். அதில் யாருமே நடிக்கவில்லை. அந்தந்த கேரக்டர்களாக வாழ்ந்துவிட்டுத் தான் வந்தோம். படப்பிடிப்பு முடிந்துஸ்பாட்டை விட்டுக் கிளம்பும்போது அனைவர் கண்களிலும் கணணீரைப் பார்தேன். அந்த இடம், வீடு, கிராமம், மக்கள் எல்லாமே எங்களில் ஒன்றாகிப்போயிருந்தன. அந்த அனுபவங்களை மறப்பது இந்த ஜென்மத்தில் சாத்தியமில்லை.

அறிமுகமாகும்போதே இவ்வளவு அட்டகாசமான படம் யாருக்குக் கிடைக்கும். இதில் கிடைத்த மரியாதையை நான் காப்பாற்றியாக வேண்டும்.

அதனால், கவர்ச்சியாக நடிக்கவே மாட்டேன், முட்டி வரை உடையணிந்து தான் நடிப்பேன், அதற்கு மேல் உடையைக் குறைக்க மாட்டேன். அதற்காகசேலை கட்டித்தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்க மாட்டேன். கிளாமர் ரோல்களில் எனக்கு ஆர்வம் இல்லை என்கிறார் ஷமிதா.

பேச்சில் நடிப்பில்லை. பட்டுப்பூச்சி மாதிரி கண்கள் படபடக்க மனதில் பட்டதை பேசுகிறார்.

இன்டியா இன்போ வாசகர்கள் சார்பில் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டுத் திரும்பினோம்.

ஷமீதாவின் அக்காதான் பொற்காலம் படத்தில் ஊமையாக வந்த ராஜேஸ்வரி என்பது உங்களுக்குத் தெரிந்ததுதானே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil