»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாவில் நுழையும் எண்ணமே இல்லாமல் இருந்தாராம் காதல் படத்தின் நாயகி சந்தியா.

காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல், சந்தியா ஆகியோர் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நூற்றாண்டு சிறப்புமுத்தமிழ் விழாவில் பங்கேற்றனர்.

இதில் மாணவர்களின் சரமாரிக் கேள்விகளுக்கு இருவரும் சளைக்காமல் பதில் தந்தனர்.

சந்தியா பேசுகையில், எனது முதல் விருப்பம் மாடலிங்தான். அதில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால்சினிமாவுக்குள் நுழைந்து விட்டேன். இப்போது சினிமாவை அதிகம் நேசிக்க ஆரம்பித்துள்ளேன்.

நல்ல சினிமாவுக்காக எனது படிப்பையும் தியாகம் செய்யத் தயாராக உள்ளேன். எனக்குப் பிடித்த, ரசிகர்களின் மனதில் நிற்கும்படியானரோல்களை செய்வேன்.

எனது மனம் கவர்ந்த நடிகர் கமல்ஹாசன். அவருடன் நடிக்க ஆசை.

காதலுக்குப் பிறகு சிபிமலயில் இயக்கும் ஒரு மலையாளப் படத்திலும், டிஷ்யூம் என்ற தமிழ் படத்திலும் நடிக்கிறேன் என்றார்.

பாலாஜி சக்திவேல் பேசுகையில், தமிழ் சினிமாவில் நிறைய தடைகள். இவற்றைத் தாண்டி விட்டால் இங்கேயும் சத்யஜித்ரே, மிருனாள் சென்போன்றவர்கள் உருவாவார்கள்.

இயக்குனர் ஷங்கர் ஆரம்பத்திலிருந்தே பிரமாண்மான படங்களை எடுத்துப் பழக்கப்பட்டு விட்டார். அவரது ஸ்டைல் அதுதான். ஆனால்நான் காதல் கதையை அவரிடம் சொன்னபோது, என்னால் செய்ய முடியாததை நீ செய்கிறாய், ரொம்ப சந்தோஷம் என்று கூறி படத்தைதானே தயாரித்தார்.

4 பாட்டு, 4 பைட்டு, காமடி என்ற ரீதியில் நாம் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தால் தரமான சினிமாவை தர முடியாது. எது கதைக்குத்தேவையோ அதைத்தான் சேர்க்க வேண்டும். அப்போதுதான் படம் நிற்கும்.

எனது படத்தில் கதைதான் ஹீரோ-ஹீரோயின். நடிகர், நடிகைகள் முக்கியமில்லை. நல்ல கதை இருந்தால்தான் படம் எடுப்பேன். அதுவும்புதுமுக நடிகர்களை வைத்துப் படம் எடுப்பதையே விரும்புகிறேன். பெரிய நடிகர்களுக்காக காத்திருக்கவோ, அவர்களுக்காக கதை தயார்செய்யவோ எனக்கு விருப்பமும் இல்லை, பொறுமையும் இல்லை.

காதல் ஒரு யதார்த்தமான படம். அதனால் ரசிகர்கள் அதை வரவேற்றார்கள்.

எனது அடுத்த படம் நட்பைப் பற்றி உயர்வாய் பேசப் போகும் படம். இதுவும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

தமிழ் நடிகைகள் கவர்ச்சி காட்டுவது போன்ற சில விஷயங்களில் தயக்கம் காட்டுவதால்தான் வெளி மாநில நடிகைகளை இங்கே அழைத்துவர வேண்டியுள்ளது. மும்பை நடிகைகள் இங்கே அதிகம் சுற்றித் திரிவதற்கு இதுதான் என்றார் பாலாஜி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil