»   »  'அத்தை ரோல் சொத்தை இல்லை'

'அத்தை ரோல் சொத்தை இல்லை'

Subscribe to Oneindia Tamil


அத்தை ரோலாக இருந்தால் என்ன, எந்த ரோலாக இருந்தால் என்ன. ஒரு நடிகைக்கு எந்த கேரக்டரைக் கொடுத்தாலும் நடிக்கத் தெரிய வேண்டும், தயாராக இருக்க வேண்டும் என தடாலடியாக கூறியுள்ளார் உயிர் சங்கீதா.


சிம்புவின் காளை படத்தில் அட்டகாசமான அத்தை ரோல் ஒன்று உள்ளதாம். கிட்டத்தட்ட வில்லி லெவலுக்கு உள்ள ரோலாம் இது. இதில் நடிக்க பலரையும் அணுகினார் சிம்பு. ஆனால் யாரும் நடிக்க முன்வரவில்லை. கடைசியில் சினேகாவை அணுகினார்.

அத்தை ரோல், அதிலும் வில்லத்தனமான ரோல் என்றதுமே முடியாது என்று கூறி விட்டார் சினேகா. அத்தோடு நில்லாமல், அத்தை ரோலில் நடிக்கும் அளவுக்கு எனக்கு வயதாகி விடவில்லை. சிம்புவுடன் ஒரு பாட்டுக்கு ஆட வாய்ப்பு கொடுத்திருந்தால் கூட ஆடியிருப்பேன் என்று பேட்டியளித்தார்.

இதைக் கேட்டு டென்ஷன் ஆன சிம்பு, முடியாது என்றால் பேசாமல் போய் விட வேண்டும். அதை விட்டு விட்டு இப்படியெல்லாம் பேட்டி கொடுக்கக் கூடாது. என்னுடன் ஆடுவதற்கும் ஒரு தகுதி வேண்டும் என்று சினேகாவுக்குப் பதிலடி கொடுத்தார்.

தற்போது இந்த வில்லங்க அத்தை வேடத்தில் நடிப்பவர், உயிர் படத்தில் கொழுந்தனாரை கொக்கி போட்டு இழுக்க முயலும் வில்லங்க வேடத்தில் நடித்த சங்கீதா.

இந்த கேரக்டரை சங்கீதாவே வலியப் போய் பெற்றாராம். தற்போது தேனியில் முகாமிட்டு அத்தை ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறார் சங்கீதா. இந்த ரோலில் நடிப்பது குறித்து சங்கீதாவிடம் கேட்டபோது, எனக்கு இந்த ரோல் ரொம்பப் பிடித்துப் போய் விட்டது. ஏன் இதை சினேகா வேண்டாம் என்று கூறினார் எனப் புரியவில்லை.

மிகுந்த ஈடுபாட்டோடு நடித்து வருகிறேன். நிச்சயம் இந்த கேரக்டர் பேசப்படும். சிம்புவின் திறமையே தனிதான். படத்தில் இந்த கேரக்டர் வெகுவாக பேசப்படும் வகையில் அதை ஷேப் செய்துள்ளார்.

சர்ச்சைக்குரிய ரோல்களில் நானாக விரும்பிப் போய் நடிப்பதில்லை. என்னை நடிக்கக் கூப்பிட்டால் நான் போய்த்தான் ஆக வேண்டும். காரணம் நான் ஒரு நடிகை. அதை விட்டு விட்டு அப்படி நடிக்க மாட்டேன், இப்படி நடிக்க மாட்டேன் என்று கூற முடியாது.

நடிகை என்று வந்து விட்டால் எந்த கேரக்டராக இருந்தாலும் நடிக்கத் தயாராக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் பேசாமல் வீட்டோடு முடங்கியிருக்க வேண்டும் என்றார் அணலாக.

இது சங்கீதாவின் பேச்சா அல்லது அவர் மூலமாக சிம்புவின் சீற்றமா?

Read more about: aunty role, kaalai, snageetha
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil