For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அம்பத்தூர் சிக்னலில் ஷூட்டிங், அடையாளம் தெரியாத சந்தானம்...காரணங்கள் சொல்லும் இயக்குநர் ரத்னகுமார்

  |

  சென்னை: நாம் உயிருடன் இருக்கின்ற தருணங்கள் அனைத்தும் முக்கியமானது என்று உணர்ச்சி ததும்ப "குலுகுலு " பட இயக்குனர் ரத்னகுமார் தெரிவித்தார்.

  மேலும் அவர் கூறுகையில், மொழி குறித்தும், மொழியின் அத்தியாவசியம் குறித்தும் இப்படத்தில் தெரிவித்துள்ளேன் என்றார் இயக்குநர் ரத்னகுமார்.

  இந்த படம் "குலுகுலு " சமீபத்தில் வெளியாகி வித்யாசமான பல கருத்துக்களை பெற்று வருகிறது.

  இது குறித்து அவர் பிலிம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு பார்க்கலாம்.

  Kuruthi Aattam Twitter Review: கில்லி விஜய் ரெஃபரன்ஸுன்னு சொல்லிட்டு படம் முழுக்க அஜித் இருக்காரே! Kuruthi Aattam Twitter Review: கில்லி விஜய் ரெஃபரன்ஸுன்னு சொல்லிட்டு படம் முழுக்க அஜித் இருக்காரே!

   தவறாக உச்சரிக்கப்பட்ட வார்த்தை

  தவறாக உச்சரிக்கப்பட்ட வார்த்தை

  கேள்வி: படத்தின் தலைப்பு "குலுகுலு" என வைக்க காரணம்?

  பதில்: இந்த படத்தின் டைட்டிலை பொறுத்தவரை கூகுள் சம்பந்தமான வீடியோ ஒன்று வெளியானது. அதில் தவறுதலாக குலு... குலு...என்று உச்சரிப்பார்கள். அதிலிருந்து தான் இந்த டைட்டிலை எடுத்தேன். மேலும் படத்தின் கதைக்கும் அந்த டைட்டில் பொருத்தமாக இருந்தது. ஏனென்றால் கூகுளில் என்ன தகவல் வேண்டுமென்றாலும் கிடைக்கும். அது மாதிரி தான் படத்தின் கதாநாயகனிடம் எது குறித்து கேட்டாலும், என்ன உதவி கேட்டாலும் சரி, உடனே காசு இல்லாமல் செய்யக்கூடியவர். மேலும் இந்த படமானது மொழி குறித்தும், மொழியின் அத்தியாவசியம் குறித்தும் தான் பேசும். மொழி குறித்து ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், தவறாக உச்சரிக்கப்பட்ட வார்த்தை தான் குலு... குலு.... அதுவும் படத்தின் கதாநாயகனின் பெயராகவும் அமைந்தது. இப்படத்தில் அமைக்கப்பட்ட அனைத்து கதாபாத்திரங்களும் எமோஷனலாகவும், ஜாலியாகவும் இருக்கும் என்றார்.

  கந்தல் துணியும் டிரெண்டாகும்

  கந்தல் துணியும் டிரெண்டாகும்

  கேள்வி: அம்பத்தூர் சிக்னல் படப்பிடிப்பின் போது என்ன நடந்தது?

  பதில்: அம்பத்தூர் சிக்னலில் 10உடன் 11வது நபராக நடிகர் சந்தானத்தை நடிக்க விட்டு Hidden Camera கொண்டு படமாக்கினோம். வித்யாசமான தோற்றத்தில் இருந்தார் சந்தானம். படத்தில் நடிகர் சந்தானத்தின் காஸ்ட்யூமை தினேஷூம், தாடி, ஹேர்ஸ்டைல் போன்றவற்றை மேக்கப்மேன் பட்டணம் ரஸீத் கவனித்தார். நடிகர் சந்தானத்தின் தோற்றத்தை அம்பத்தூர் சிக்னலில் யாரும் கண்டுபிடிக்கவில்லை. நடிகர் சந்தானத்தின் கதாபாத்திரத்தை அடையாளப்படுத்தும் விதமாக இப்படத்தில் நான் ஒரு பாடல் எழுதியுள்ளேன். அதில் நான் கந்தல் துணி போட்டாலும், அது தான் டிரெண்ட்டாகும்... எனக்கு எதிரிங்க இருக்க மாட்டாங்கள்.. அப்படி இருந்தாலும்... அதில் நண்பர்கள் இருப்பார்கள் என்ற அர்த்தத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளேன் என்றார் ரத்னா.

  அடுத்த கட்டத்தை நோக்கி சிலம்ப கலை

  அடுத்த கட்டத்தை நோக்கி சிலம்ப கலை

  கேள்வி: உங்கள் அப்பாவை இந்த படத்தில் நடிக்க வைக்க என்ன காரணம்?

  பதில்: முதன்முறையாக எங்க அப்பாவை நடிக்க வைத்திருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷம். நான் எடுத்த முதல் இரண்டு படங்களில் அவரை நானும் கூப்பிடவில்லை அவரும் என்கிட்ட வாய்ப்பு கேட்கவில்லை. நான் நல்ல தருணத்தில் அவரை சினிமாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று எண்ணியிருந்தேன். கோவிட் தொற்றால் எங்க குடும்பத்தில் உள்ள 14 பேரும் பாதிக்கப்பட்டனர். யார் உயிர் பிழைப்போம் என்று தெரியாத நிலை இருந்தது. நாம் உயிருடன் இருக்கின்ற தருணங்கள் அனைத்தும் முக்கியமானது என்று கருதினேன். அதனால் தான் இந்த படத்தில் அப்பாவை நடிக்க வைத்தேன். 50 வருடமாக அப்பா சிலம்ப மாஸ்டராக உள்ளார். சிலம்ப கலையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென்றால், சினிமாவால் மட்டுமே சாத்தியம் என்று கருதினேன்.

  உண்மையானதாக இருந்தால்

  அதனால் கதையை பாதிக்காத வண்ணம், அந்த கலையையும், அப்பாவையும் படத்தோட முக்கியமான சீனில் நடிக்க வைத்தேன். இந்த தருணத்தில் நான் ஒன்றை கூற விரும்புகிறேன். நான் நினைக்கின்ற விஷயங்கள் உண்மையானதாக இருந்தால், அது தானாகவே நடக்கும் என்பது தான் வாழ்வின் ஆச்சரியமான உண்மை .

  இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/NjOzufFRfu0 இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். இயக்குநர் ரத்னகுமார் இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளார். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.

  English summary
  Santhanam Not Identified By people During Shooting in Ambattur Signal Says Director Rathnakumar
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X