»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கவர்ச்சி காட்டி நடிப்பது எனக்கு சரிப்பட்டு வராது, ஷோபா மாதிரி நல்ல ரோல்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடிப்பதே எனதுலட்சியம் என்று கூறுகிறார் "காதல்" நாயகி சந்தியா.

காதல் படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருப்பவர் சந்தியா. சென்னை பள்ளியில் 10வது படிக்கும் இந்தகேரளத்து குட்டிப் பாப்பா படத்தில்தான் படு சுட்டியாக இருக்கிறார். நேரில் பார்த்தால் படு அமைதியான பார்ட்டி.

காதல் பட அனுபவம் குறித்துக் கேட்டால், மிகவும் அருமையான அனுபவம் கிடைத்துள்ளது. எனக்குக் கிடைக்கும் பாராட்டுக்கெல்லாம்இயக்குநர் பாலாஜி சக்திவேல்தான் காரணம்.

அவர் என்ன சொன்னாரோ அதை நடித்துக் காட்டினேன். எனது நடிப்பை இயக்குநர் ஷங்கரும் வெகுவாகாப் பாராட்டியுள்ளார். அதுஎனக்கு ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.

காதல் படத்தில் முன்பு நடிப்பதாக இருந்த தனுஷும் என்னை போனில் தொடர்பு கொண்டு வெகுவாகப் பாராட்டினார். கவர்ச்சி மட்டும்காட்டி நடித்து விடாதே, இப்படியே நடி என்று அட்வைஸும் கொடுத்தார்.

இயக்குநர் பாலாவும் எனக்கு இதேபோன்ற அட்வைஸைக் கூறியுள்ளார். எனக்கும் கவர்ச்சி காட்டி நடிக்கப் பிடிக்கவில்லை. அது எனக்குபொருத்தமாகவும் இருக்காது.

மறைந்த ஷோபா போல நல்ல ரோல்களில், பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடிப்பதே எனது லட்சியம்.

காதல் படம் கொடுத்த வெற்றியால் மேலும் சில படங்கள் வந்துள்ளது. அதில் டிஷ்யூம் என்ற படத்தில் நடிக்கப் போகிறேன். ஆஸ்கர்பிலிம்ஸ் சார்பில் இயக்குநர் சசி இயக்கும் படம் இது.

இதிலும் நன்றாக நடிக்க வேண்டும். காதல் படத்தில் கிடைத்தப் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்கிறார் சந்தியா.

நடிப்போடு படிப்பையும் விட மாட்டேன் என்று கூறும் சந்தியா, படத்தில் நடிக்கும் அதேசமயம், பிரைவேட்டாக படிப்பையும்தொடர்வதாகக் கூறுகிறார்.

அது சரி, நடிப்பை மட்டும் நம்பினால் முடியுமா, படிப்புதானே நிரந்தரம்!

கொசுறு:

காதல் படம் சந்தியாவுக்கு மட்டுமல்ல, இயக்குநர் பாலாஜி சக்திவேலுக்கும் நல்ல எதிர்காலத்தைக் கொடுத்துள்ளது. வெற்றிப் பரிசாகஷங்கரிடம் கார் வாங்கியவர், இப்போது அடுத்த படத்தையும் ஷங்கர் தயாரிப்பிலேயே இயக்குகிறார்.

படத்தின் கதை இன்னும் ரெடியாக வில்லை. முந்தைய படத்தில் காதலைக் கூறியது போல இதில் நட்பு அல்லது வேறு ஏதாவது கனமானவிஷயம் இருக்குமாம். கதை தயாரானதும் நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்யவிருக்கிறார் பாலாஜி சக்திவேல்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil