»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாயி படப்பிடிப்பில் இருந்தார் சரத் குமார். - நெற்றியில் சந்தனத்தை குழைத்து விபூதி பூசுவது போல பூசி, நடுவில் பெரிய குங்குமம், பெரிய மீசை, ஒட்டவெட்டப்பட்ட தலைமுடி- கால்கள் தெரிகிற அளவு வேட்டிக்கட்டு- பனியன் - உரம் ஏறிப் போன ஒரு கிராமத்துக்காரர் போல் காட்சி அளித்தார்.

சரத்குமார் நமக்கு அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்...

மாயி படம்- இரண்டு சமூகத் தலைவர்களாக கருதப்பட்டவர்களைப் பற்றியும், அவர்களின் அரசியல் கொள்கைகளை வைத்து, வேறு ஜாதிமதத்தினரைமோதவிடும் விதத்தில் படத்தில் உங்கள் காதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், ஒரு காட்சியில், பிண்ணனியில் காமராஜர் போட்டோ ஒன்றுஇருந்ததை நீங்கள் எடுத்துவிடும்படி சொன்னதாகவும், சில அரசியல்வாதிகள் குறிப்பிட்டு வருகிறார்களே ... உண்மையா?

என்னைப் பொறுத்த வரை, நான் தலைவர்களை மதிப்பவன் - அது சாதிமத சமயத்துக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட மரியாதை. காமராஜரும், பசும்பொன்முத்துராமலிங்கத் தேவரும், கதாசிரியரின் இன்ஸ்பிரேஸனாக இருந்திருக்கலாம். இருவருமே, கடைசி மூச்சு வரை, பிரம்மச்சாரியாக வாழ்ந்தார்கள். அதனால்என் கதாபாத்திரத்தைக் கேள்விப்பட்டவர்கள் - கூட்டிக் கழித்து அரசியல் வண்ணம் பூசி விட்டார்கள். அவ்வளவு தான்.

எந்த அரசியல் நோக்கமும் கிடையாது. நான் ஒரு குறிப்பிட்ட சமூகச்தைச் சார்ந்தவன் - அரசியலில் ஈடுபாடு உள்ளவன் என்பதால் இப்படி இல்லாதஒன்றை பிரச்சாரம் செய்து வருகிறார்களே இது நியாயமா?

படத்தில் உங்கள் ஹேர்கட்,மற்றும் மேக்கப் உடை எல்லாம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை நினைவுபடுத்துவது போலவே உள்ளதே?

பார்த்தமாத்திரத்தில் ஒரு தைரியசாலி, முரட்டுத் தனமானவர், நேர்மைக்கும் எடுத்துக்காட்டான, தீவிர பக்திமான் - கடவுளை நேசிப்பவர் என்பதையும்,அதே நேரத்தில் சிம்பிளானவர் என்பதையும் காட்டுவதற்காக இப்படி ஒரு கெட்டப் உருவமைக்கப்பட்டுள்ளது.

நிச்சயமாக யாரையும் மனதில் கொண்டு மேக்கப் போடவில்லை. டைரக்டர் தன்னோட சித்தப்பா, மாயி என்பவைரை மனதில் வைத்துக்கொண்டுஉருவாக்கப்பட்ட கெட்டப். இப்படி எல்லாம் ஆழமாக பார்க்க ஆரம்பித்தால் சினிமாவில் புதிய கெட்டப்புகளைப் போடவே முடியாது.

சூப்பர் குட் பிலிம்சுக்காக , நான் நடித்த சேரன் பாண்டியன், நாட்டாமை, சூரியவம்சம் போன்ற எல்லாப் படங்களிலுமே வித்தியாசமான கெட்டப்புகளைதேர்ந்தெடுத்து தான் நடித்துவந்திருக்கிறேன். அதனால், மாயி படத்திலும் சாதி, மதம் என்ற எல்லையைைத் தாண்டிய ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி,மனிதசாதியையும்,மனித நேயத்தையும் பற்றி இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

உங்கள் தீவிர அரசியல் ஈடுபாடு உங்கள் படங்களின் வெற்றியை பாதிக்கிறதா?

என்னைப் பொறுத்தவரை, நமது நாட்டுச் ஜனங்கள் சினிமா பார்க்கிறபோது கட்சிக்காரன் என்ற கண்ணோட்டத்தில பார்ப்பதில்லை. இது எம்.ஜி.ஆர்.காலத்திலிருந்தே ஏற்பட்டு வரும் பழக்கம். அப்படி கட்சிக்காரன் , ஜாதிக்காரன், மதத்துக்காரன் என்று பாகுபாடு படுத்திப்பார்த்திருந்தால்,எம.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா? இல்லை ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள்தான் உலக அளவில் பிரபலமாகி இருக்குமா? நல்ல படம் என்றால்அனைவரும் பார்க்கத்தான் செய்கிறார்கள்.

ஒரு படம் சரியாக ஓடவில்லை என்றால் - புதுமையாக கதை சொல்லப்படவில்லை, என்ற காரணமாகத்தான் இருக்குமே தவிர, என்னோட அரசியலால்,என் படங்கள் தோல்வியை கண்டிருக்காது.

உங்கள் குடும்ப வாழ்க்கை எப்படி உள்ளது?

சுமார் ஒண்ணரை ஆண்டுகளாக, என் குடும்ப வாழ்க்கை தளிர்விடத் தொடங்கியுள்ளது. என் குழந்தைகளுக்காக நான் சில மணி நேரங்களைச் செலவிடுகிறேன். ஒருகுடும்பப் பறவை நான் என்று சொல்லிக் கொள்கிற அளவுக்கு பொறுப்புடனும், பாசமுடனும், பாதுகாப்புடனும் நடந்து கொள்கிறேன்.

என் தந்தை பெயரில் கோயமுத்தூரில் ஆரம்பிக்கப்பட்ட ஆஸ்பத்திரி மற்றும் இலவச சட்ட உதவி, போன்ற இன்னும் பல விதமான சோஷியல்விழிப்புணர்வுகளுக்கு என் குடும்பத்தினர் கலந்து கொண்டு, ஊக்கமும் கொடுத்து என்னை மகிழ்வித்து வருகிறார்கள்.

டைரக்ஷன் பண்ணும் எண்ணம் உண்டா? எப்போது பண்ணப் போகிறீர்கள்?

சுமார் ஐந்து ஆண்டுகளாக சுபாஷ் சந்திர போஸ் - பற்றி பலர் எழுதிய புத்தகங்கள், இன்டர் நேஷனல் லெவலில் அவர் பற்றிய பல தகவல்களையும் சேகரித்துவருகிறேன். சுபாஷ் சந்திர போஸ் பற்றிய கதையை எண்பது சதவீதம் தயாரித்துவிட்டோம் - அது சுபாஷ் சந்திர போஸ் பற்றிய டாக்குமென்டரி போல்வந்து விடாமல். ஒரு நல்ல சினிமா மூவியாக்க, பல வல்லுனர்கள் துணையுடன் படத்தை நான் நிச்சயமாக டைரக்ட் செய்து நடிப்பேன்.

நமது நாட்டிற்கு சுபாஷ் சந்திர போஸ் போன்ற மாவீரன் பொறுப்பேற்றிருந்தால் - ரத்தம் சிந்தி.சண்டை போட்டு சுதந்திரம் பெற்றிருப்போம்.இப்போதும்கூட, மாறாமல் ஊறிப்போயிருக்கும் , அடிமைத்தனம் யாருக்குமே இருந்திருக்காது. - சுபாஷ் சந்திர போசின் பின்னால் போய் போராடிசுதந்திரம் பெற்றிருந்தால், தென்னிந்தியர்களுக்கெல்லாம் கூட வட இந்தியர்களுக்குச் சமமான தேசிய உணர்வு ஏற்பட்டிருக்கும். காந்தியத்தால்,அஹிம்சையால் சுதந்திரம் பெற்றதால் நமக்கு சுதந்திரத்தின் அருமை பெருமைகள் முழுமையாக தெரியவில்லை போன்ற கருத்துக்கள் ஆங்காங்கேசொல்லப்படும் - சுபாஷ் சந்திர போஸின் சொந்த வாழ்க்கை, பொது வாழ்க்கை, புதைந்துகிடக்கும் பல உண்மைகள் ஒரு சிறந்த கதையாக சுபாஷ் சந்திரபோஸ் படத்தில் இடம் பெறும்.

ஒரு ஏக்கம் - வேதனை -வலி?

கோயம்பத்தூரில் என் தந்தை பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆஸ்பத்திரி, பிரபல சர்ஜன் டாக்டர் வெங்கட் என்ற ஒருவரின் துணையோடு ஆரம்பித்தேன். இங்கே,இதயம் மற்றும் கிட்னி மாற்றுதல் போன்ற அறுவை சிகிச்சை இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இதற்கான லேட்டஸ்ட் கருவிகள் சுமார் ஒண்ணரைகோடி ரூபாய். பேங்க் லோன் தர தாயாராக உள்ளது. ஆனால் நான்தான் கொஞ்சம் தாமதித்து செய்யலாம் என்று இருக்கிறேன்.

நான் சென்னையில் ஆஸ்பத்திரி தொடங்காமல் கோயம்புத்தூரில் தொடங்கியதில் பலருக்கு வேதனைதான். ஒரு மாதத்தில் பெரும் பகுதியான நாட்கள்கோயம்புத்தூர், உடுமலைப் பேட்டை, பொள்ளாச்சி என்று இந்தப் பகுதியிலிருப்பதால் இவர்களின் கஷடங்கள் அதிகமாக என்னை பாதிக்க வைத்துவிட்டது.சென்னைக்கும் கொண்டு வரும் திட்டம் உண்டு. சென்னை திரைப்படத் துறையை சேர்ந்த ஏழை எளியவர்கள் கோயமுத்தூருக்கு டிக்கெட் செலவு செய்து வந்துவிட்டால் போதும், ஆஸ்பத்திரியில் இலவச சிகிச்சை பெற்றுவிட்டுப் போகலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil