»   »  விஜய்காந்த்.. இது வேண்டாம்..: சரத் அட்வைஸ்

விஜய்காந்த்.. இது வேண்டாம்..: சரத் அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

கூடும் கூட்டத்தை நம்பி அரசியலில் இறங்க வேண்டாம் என விஜய்காந்துக்கு சரத்குமார் அட்வைஸ் கொடுத்துள்ளார்.

சரத்குமாரின் பத்திரிக்கைப் பேட்டி:

அரசியலில் இறங்கவும், கட்சி ஆரம்பிக்கவும் ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் உரிமை உண்டு. நடிகர்களும் அரசியலுக்குதாராளமாய் வரலாம். விஜய்காந்த் மட்டுமல்ல விஜய், விக்ரம், தனுஷ் என யாரூம் வரலாம்.

ஆனால், அதற்கு மக்களிடம் என்ன அங்கீகாரம் கிடைக்கும் என்பது தான் முக்கியம். இதுவரை விஜய்காந்த் தனது அரசியல்திட்டம் குறித்து என்னிடம் பேசவில்லை. நான் அரசியலில் 10 வருடம் அனுபவம் உள்ளனர்.

ஊர் ஊராக பிரச்சாரம் செய்தவன். திமுக மீது மக்களுக்குள்ள ஆர்வத்தையும் அலையையும் பார்த்தவன், பார்த்துக்கொண்டிருப்பவன். இப்படி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் தான் ஆட்சிக்கு வர முடியுமே தவிர, கூட்டம் சேருகிறதே என்றுஅவசரப்பட்டு கட்சி ஆரம்பித்தால், எதிர்காலத்தை இழக்க வேண்டிய நிலை தான் வரும்.

கூட்டம் சேருவதால் மக்கள் ஆதரவு இருப்பதாக அர்த்தமல்ல. இப்படி தவறாக நினைத்து கட்சி ஆரம்பித்த பலரது கதிஎன்னவானது? தமிழகத்தில் உள்ள உதிரிக் கட்சிகள் குறித்து எல்லோருக்கும் தெரியும்.

என்னிடம் கேட்டால், விஜய்காந்த் கட்சி ஆரம்பிக்க இது சரியான சந்தர்ப்பம் அல்ல. அவர் யோசித்தே முடிவெடுக்கச் சொல்வேன்.தன் பலத்தை சோதிக்க ஆசைப்பட்டால், 234 தொகுதிகளில் தனக்கு ஆதரவு அதிகமுள்ள ஏதாவது ஒரு தொகுதியில்சுயேச்சையாக நின்று தன் மீது மக்களுக்குள்ள அபிமானம் குறித்து சோதித்துப் பார்க்கலாம்.

இது விஜய்காந்துக்கு மட்டுமல்ல, ரஜினிக்கும் பொருந்தும். ஒருவேளை ரஜினி தனிக் கட்சி ஆரம்பித்து அரசியலில்இறங்கியிருந்தால். அவரைத் தோற்கடிக்க முதல் ஆளாக நான் களமிறங்கியிருப்பேன். அரசியலில் ஒரு கட்சியில் இருப்பவன்என்ற முறையில் அவரை எதிராளியாகவே நான் பார்த்திருப்பேன்.

அரசியல் வேறு, சினிமா வேறு என்று கூறியிருக்கிறார் சரத்குமார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil