»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை:

கோடீஸ்வரன் நிகழ்ச்சியை சூதாட்டம் என இயக்குநர் பாலச் சந்தர் விமர்சனம் செய்திருப்பது அவரது காழ்ப்புணர்ச்சியைக்காட்டுகிறது என கோடீஸ்வரன் நிகழ்ச்சி அமைப்பாளரும், நடிகருமான சரத்குமார் தெரிவித்தார்.

பொள்ளாச்சியில் நடக்கும் படப்பிடிப்பிற்காக கோவை வந்த சரத்குமார், அளித்த பேட்டியில் கூறியதாவது,

கோடீஸ்வரன் நிகழ்ச்சி அறிவுப்பூர்வமான விஷயத்திற்காக நடத்தப்படும் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியை காண்போர்நேரடியாக பங்கேற்ற மன நிறைவைப் பெறுகின்றனர். நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விகள் முன்பு எளிதாக இருந்தது. இப்போதுகடினமான கேள்விகளாக மற்றப்பட்டுள்ளது.

இதில் கேட்கப்படும் கேள்விகளை பொதுமக்கள், நோட்டில் குறித்து வைத்துக் கொள்கின்றனர். கோடீஸ்வரன் நிகழ்ச்சியில்பங்கேற்க வேண்டும் எனக் கருதி, அதற்கு படித்து தயாராகின்றனர். செய்தித் தாள்கள் மற்றும் பல புத்தகங்களைப் படிக்கத்தொடங்கியுள்ளனர். படிப்பில் ஆர்வத்தை தூண்டி, அறிவை வளர்க்கும் நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது.

இதில் பணம் கட்டி யாரும் பங்கேற்கவில்லை. அறிவுத் திறனுக்கு ஏற்ப, கேட்கப்படும் கேள்விக்கு அளிக்கும் பதிலுக்கு ஏற்றவாறுதொகை கூடுகிறது. எனவே சூதாட்டம் என்று இதனைக் கூற முடியாது.

இயக்குநர் பாலச்சந்தர், சூதாட்டம் என விமர்சனம் செய்திருப்பது அவரது காழ்ப்புணர்ச்சி காரணமாக இருக்கலாம். இது வருந்தத்தக்கது. அப்படிப் பார்த்தால், கிரிக்கெட், பட்டிமன்றம் போன்றவற்றைக் கூட சூதாட்டம் என்று தான் கூற வேண்டும்.

ஜெயா டி.வியில் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை கேலி செய்யும் வகையில், பிச்சாதிபதி என்ற நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இதுஆரோக்கியமானது அல்ல என்றார் சரத்குமார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil