For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  'வேற வாய்ப்பு வந்தா அம்போனு விட்டுட்டு போய்றாதீங்க..' - 'சரவணன் மீனாட்சி' ரச்சிதா பேட்டி #Exclusive

  By Vignesh Selvaraj
  |

  சென்னை : 'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் பலருக்கும் விருப்பமான நடிகையாக இருந்து வருபவர் ரச்சிதா மஹாலட்சுமி. கர்நாடகாவைச் சேர்ந்த ரச்சிதா படித்தது ஜர்னலிசம். கன்னட தொலைக்காட்சிகளில் ஆங்கராக பணியாற்றிய ரச்சிதா அதன்பிறகு சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார்.

  'சரவணன் மீனாட்சி' தொடர் மூலம் பெரும் ரசிகர்களைப் பெற்ற ரச்சிதா 'உப்புக் கருவாடு' படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமாகி இருக்கிறார். 'பிரிவோம் சந்திப்போம்' சீரியலில் நடித்தபோது உடன் நடித்த தினேஷை திருமணம் செய்துகொண்டார்.

  இந்த முறை விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸில் '6 years of dedication' எனும் சிறப்பு விருது பெற்ற மகிழ்ச்சியில் இருந்த ரச்சிதாவிடம் பேசினோம்...

  விஜய் டெலி அவார்ட்ஸ்ல இந்த முறை உங்களுக்கு என்ன விருது?

  விஜய் டெலி அவார்ட்ஸ்ல இந்த முறை உங்களுக்கு என்ன விருது?

  "மீனாட்சி - 1000 ஸ்பெஷலாக '6 இயர்ஸ் ஆஃப் டெடிகேஷன்' அவார்ட் கொடுத்தாங்க. ஆயிரம் எபிஸோட்ஸ் கடந்து வந்த நாயகி. இப்போ 1400 எபிஸோட்ஸ் போய்க்கிட்ருக்கு. எனக்கு ஒரு செண்ட் ஆஃப் கொடுத்தமாதிரி ஃபீல் இருந்துச்சு. வேற கேட்டகிரில அவார்டு கொடுத்திருந்தா ஹேப்பியா ஃபீல் பண்ணியிருப்பேன். இந்த கேட்டகிரில கொடுத்தது.. நல்லாப் பண்ணியிருக்கீங்க.. நல்லாயிருங்க அப்படிங்கிற மாதிரி இருந்தது. அதான் கொஞ்சம் ஃபீல். ஹரீஷ் கல்யாண் கிட்ட அவார்டு வாங்குனேன். அவங்களையும் விட்டு வைக்காம ஏலேலோ சாங் போட்டு டான்ஸ் ஆட வெச்சு.. மறக்க முடியாத தருணம்."

  சினிமா சான்ஸ் வருதா?

  சினிமா சான்ஸ் வருதா?

  "ஏகப்பட்ட சினிமா சான்ஸ் வருது. அவற்றை ஏத்துக்கிற நிலைமைல இல்ல. இப்போதைக்கு ஐடியாவும் இல்ல. லைன் அப்ல சீரியல் ப்ராஜெக்ட்ஸ் இருக்கு. எடுக்குறதுக்கு கொஞ்சம் யோசனையா இருக்கு. சரவணன் மீனாட்சி ஒரு பெரிய ப்ராஜெக்ட். மாசத்துல 15 - 20 நாட்கள் பிஸியா இருக்கும். அப்படி இருக்கும்போது இன்னொரு ப்ராஜெக்ட்னு வந்தலே டேட் க்ளாஷ் ஆகும். அதனால் சினிமா பண்ற ஐடியாவே இல்ல. அந்தப் பக்கம் திரும்பிக் கூட பார்க்கல."

  சீரியலில் நடிக்கிறதே போதுமா?

  சீரியலில் நடிக்கிறதே போதுமா?

  "சீரியல் இப்போ பெரிய பிளாட்ஃபார்ம். இந்த மாதிரி அம்மன் ரோலா இருக்கட்டும், ஒரு பவர்ஃபுல்லான கேரக்டரா இருக்கட்டும் படத்துல பண்ணணும்னு ஆசைப்பட்டேன் தான். ஆனா, அது எனக்கு சீரியல்லயே நிறைவேறும்போது அப்புறம் என்ன வேணும்? சீரியல் வாய்ப்பு வந்துட்டு இருக்கு. விஜய் டி.வி-ல ஒரு ஷோவுக்கு ஜட்ஜா கூப்பிட்டுட்டு இருக்காங்க. ஆனா, டைம் செட் ஆகுமானு பார்க்கணும். சரவணன் மீனாட்சி முடியணும்னு தான் எல்லோரும் வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க. விஜய் டி.வி-லயே வேற நிகழ்ச்சினா எடுக்கிறதுல பயம் இல்ல. வேற சேனல்ல கூப்பிட்டாத்தான் சிக்கல் வரும்."

  சீரியல் பெர்ஃபார்மன்ஸுக்கு வரவேற்பு எப்படி இருக்கு?

  சீரியல் பெர்ஃபார்மன்ஸுக்கு வரவேற்பு எப்படி இருக்கு?

  "என்னை நேர்ல எங்கேயாவது பார்க்கிறவங்க ரொம்ப பாராட்டுவாங்க. என்னோட ஆக்டிங் சரவுண்டிங்ல என்னோட கோ-ஆர்டிஸ்ட்ஸ், அப்புறம் வேற சீரியல்கள்ல நடிக்கிறவங்க 'சீரியல் இன்டஸ்ட்ரியிலயே இந்த மாதிரி வரவேற்பு கிடைச்சு நாங்க பாத்ததில்ல'னு சொல்றவங்களும் இருக்காங்க. என்னையும் ரொம்ப இன்ஸ்பயரிங்கா எடுத்துக்கிட்டு இந்த மாதிரி ஒரு கேரக்டர் கிடைச்சது ரொம்ப பெரிய விஷயம். எங்களுக்கு கிடைக்கலையேனு சொல்வாங்க. என்னோட வீடியோவை காட்டி இந்த மாதிரி பண்ணுங்கனு சொல்றவங்களும் இங்க இருக்காங்க. இந்த மாதிரி எல்லாம் சொல்லும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்."

  நெகட்டிவ் விமர்சனங்கள்.. ட்ரோல்?

  நெகட்டிவ் விமர்சனங்கள்.. ட்ரோல்?

  "பாஸிட்டிவ் தவிர்த்து ஏகப்பட்ட விஷயங்கள் விமர்சனங்களா ட்ரோலா நமக்கு வரும். அதை எதுக்கு நாம எடுத்துக்கிட்டு. அதையெல்லாம் அப்படியே விட்றணும். தேவையில்லாத விமர்சனங்கள் சீரியல் தொடங்கின காலத்தில் இருந்து இப்போவரைக்கும் இருக்கு. அது என்னிக்குமே மாறாது. சோஷியல் மீடியா இருக்கிறவரைக்கும் இந்த மாதிரி விமர்சனங்கள் வந்துக்கிட்டே தான் இருக்கும். அவங்க அப்படித்தான் பண்ணுவாங்க. அதை யாரும் ஒண்ணும் பண்ண முடியாது."

  உங்களை பற்றிய ட்ரோல்ஸை எப்படி எடுத்துக்குவீங்க?

  உங்களை பற்றிய ட்ரோல்ஸை எப்படி எடுத்துக்குவீங்க?

  "எப்படி எடுத்துக்கிறதுங்கிறது அடுத்த விஷயம். அவற்றை விமர்சனமாவே எடுத்துக்கக் கூடாது. அவற்றையெல்லாம் விமர்சன கேட்டகிரியிலயே சேர்க்கக்கூடாது. அது ஒரு குப்பைத்தொட்டி மாதிரி. அதுல குப்பை மட்டும்தான் போட முடியும். அதுல போடுற குப்பையை எடுத்து நாம நடு வீட்டுல வெச்சுக்க முடியுமா? வேலை இல்லாதவங்க போடுற குப்பை அது. எதுக்கு அதை எடுத்துக்கிட்டு? அதை அப்படியே விட்டுட்டா போச்சு."

  உங்கள் கணவர் தினேஷ் உங்களுக்கு எந்தளவுக்கு உதவிகரமா இருக்கிறார்?

  உங்கள் கணவர் தினேஷ் உங்களுக்கு எந்தளவுக்கு உதவிகரமா இருக்கிறார்?

  "ரெண்டு பேரும் ஒரே இன்டஸ்ட்ரியில இருக்கிறது பெரிய ப்ளஸ்ஸிங். சீரியல்ல இந்தமாதிரி ஒரு கஷ்டம் வருதுனு சொல்றதுக்கு முன்னாடியே புரிஞ்சிக்கிற ஒரு மனப்பக்குவம் அவங்களுக்கு இருக்கு. லேட் நைட் ஷூட்டிங்கா இருக்கட்டும்.. இல்ல அவுட்டோர் ஷூட்டிங்கா இருக்கட்டும்.. இந்தமாதிரி ஒரு கேரக்டர் பண்றேன்னா அதுக்கு நிச்சயம் டைம் எடுக்கும்.. ஒரு காட்சியையே ஒரு நாள் முழுக்க பண்றதால மறுபடியும் நைட் ஷூட்டிங் நடக்கும். இது எல்லாத்தையும் புரிஞ்சிக்கிட்டு எப்பவுமே சப்போர்ட்டிவ்வா இருப்பாங்க."

  ஃபீல்டுக்கு புதுசா வர்றவங்களை பற்றி என்ன நினைக்கிறீங்க?

  ஃபீல்டுக்கு புதுசா வர்றவங்களை பற்றி என்ன நினைக்கிறீங்க?

  "இந்த விஷயத்தை நான் அவார்டு வாங்கின மேடையிலயே சொல்லிருக்கணும். அப்போ எமோஷனல் ப்ளாக் ஆகிடுச்சு. சிலபேர் இப்போலாம் ஃபேம்-காக வரமாதிரி எனக்குத் தெரியுது. எனக்கு நல்ல சம்பளம் கொடுக்குறாங்க. ஏதோ ஒண்ணு நடிச்சிக்கிட்டு ஜாலியா இருக்கலாம் அப்படிங்கிற மாதிரி வர்றவங்களை நிறைய பார்க்குறோம். இந்தத் துறை பிடிச்சு, நடிச்சு, கிடைக்கிற வாய்ப்புகளை ஒரு கிஃப்டா எடுத்துக்க மாட்டாங்க. அப்படி நிறைய பேரை நான் பார்த்திருக்கேன். சும்மா இஷ்டத்துக்கு வந்து நடிக்கிறாங்க. மூஞ்சி மேலேயே இதை சொல்லியும் இருக்கேன். இப்படி இருக்கிறதுக்கு எதுக்கு நீங்க நடிக்கிறீங்கனு கேட்டிருக்கேன்."

  நடிப்புத் துறைக்கு வர்றவங்க எப்படி இருக்கணும்?

  நடிப்புத் துறைக்கு வர்றவங்க எப்படி இருக்கணும்?

  "அவங்க பண்ற கேரக்டருக்கு உண்மையா நடிக்கணும். அது என்ன கேரக்டரா வேணும்னாலும் இருக்கலாம். வேலைக்காரி கேரக்டரா இருக்கட்டும். ஒரு நாள் வந்துட்டு போற மாதிரி இருக்கட்டும். அது பேசப்படணும். அந்த எபிஸோட்ல ஒரு பொண்ணு வந்து நடிச்சதுப்பா செம்மையா இருந்தது அப்படிங்கிற மாதிரி பேசப்படணும். அப்படி பேசப்படணும்னா நீங்க உள்வாங்கி பண்ணனும். இப்போ வெறும் 100, 200 எபிஸோட்ஸ் வந்தவுடனே ஒரு சின்ன பிரச்னை வந்தா கூட இதுக்கு மேல பண்ணமாட்டோம். எங்களுக்கு சினிமா ஆஃபர் வந்துடுச்சுனு சொல்லிட்டு போறவங்கள எனக்கு சுத்தமா புடிக்காது. அது எங்க சீரியல்லயே நிறைய நடந்திருக்கு. ஒரு வேலையை நமக்கு அசைன் பண்ணிருக்காங்கனா அதை எப்பாடுபட்டாவது கம்ப்ளீட் பண்ணிடணும். அதுக்காகத்தான் எனக்கு 6 years dedication award கிடைச்சிருக்கு. வேலைக்கு நான் கொடுத்த மரியாதைக்குத்தான் இந்த விருது. உங்க வேலைக்கான மரியாதையை நீங்க கொடுங்க. கடவுள் உங்கள் உழைப்புக்கான பெருமையைக் கொடுப்பார். அப்படித்தான் எனக்கு நடந்துக்கிட்டு இருக்கு. இதை புதுசா வர்றவங்களும் ஃபாலோ பண்ணினா நல்லா இருக்கும்."

  நிறைய புது நடிகர் நடிகைகள் வர்றாங்க. அவங்ககிட்ட குறைகளா நீங்க பார்க்கிறது?

  நிறைய புது நடிகர் நடிகைகள் வர்றாங்க. அவங்ககிட்ட குறைகளா நீங்க பார்க்கிறது?

  "படம் வந்துடுச்சு.. வேற வாய்ப்பு வந்துடுச்சுனு கிளம்புறது ஏகப்பட்டது நடக்கும். சும்மா ஒரு விளம்பரம் வந்துச்சுனாலும் அதுக்கு ஃபர்ஸ்ட் டேட் கொடுத்துட்டு சீரியலை மறந்துடுறது. அப்படி நான் பண்ணிருந்தேன்னா இன்னிக்கு நான் எத்தனையோ விளம்பரப் படங்கள் பண்ணியிருப்பேன். எப்பவுமோ சரவணன் மீனாட்சி தான் எனக்கு முன்னாடி வந்து நிக்கும். எத்தனையோ பட வாய்ப்புகளை நான் தவிர்த்ததற்கான காரணம் சரவணன் மீனாட்சி தான். இது தான் ஃபர்ஸ்ட். அதுக்கு அப்புறம் தான் எல்லாமே. எல்லோரும் இப்படி யோசிச்சா நல்லாருக்கும். அதை அப்படியே விடுங்கனு சொல்லல. ரெண்டையும் பேலன்ஸ் பண்ணுங்கனு சொல்றேன்."

  சின்னத்திரையில் ரொமான்ஸை பிரபலமாக்கின சீரியல்ல நடிப்பது பற்றி?

  சின்னத்திரையில் ரொமான்ஸை பிரபலமாக்கின சீரியல்ல நடிப்பது பற்றி?

  "கோ - ஆர்டிஸ்ட் கம்ஃபர்டபிளா இருந்தாங்கனா வேற எதுவுமே எங்களுக்குத் தடையா தோணாது. எல்லா சிச்சுவேஷனும் கூலா இருக்கும்போது ஜாலியா நடிச்சிட்டு சிரிச்சிக்கிட்டே நடிச்சிட்டுப் போய்டுவோம். அது இல்லாத பட்சத்துலதான் எங்களுக்கு ரொம்ப அசௌகரியமா இருக்கும். அச்சோ இது பண்ணணுமானு உட்கார்ந்து டைரக்டர் சார் கிட்ட டிஸ்கஸ் பண்ணுவோம். அவர் கண்டிப்பா வேணும்னு அடம்பிடிப்பார். அதுக்கு அப்புறம் இதைப் பண்ணியே ஆகணும் என்ன பண்றதுன்னு பிளாஸ்டிக்கா நடிச்சிட்டு போய்டவேண்டியதுதான்."

  சரவணனாக நடிக்கும் ரியோ பற்றி?

  சரவணனாக நடிக்கும் ரியோ பற்றி?

  "அவர் ஒரு ப்ரொஃபஷனல் ஆர்டிஸ்ட். எங்களுக்குள்ள எந்தவொரு பேச்சுவார்த்தையும் அந்தளவுக்கு இருக்காது. வர்றோம் நடிக்கிறோம் போறோம். அதைத் தாண்டி ஒண்ணுமே இல்ல. அவர் கூட ரொமான்டிக்கா நடிக்கிறது என்னைப் பொறுத்தவரைக்கும் செயற்கையா நடிக்கிற மாதிரிதான் ஃபீல் ஆகும்.

  அவார்டு வாங்கும்போது எப்படி ஃபீல் பண்ணீங்க?

  அவார்டு வாங்கும்போது எப்படி ஃபீல் பண்ணீங்க?

  "ஒவ்வொரு வாட்டி விஜய் டி.வி அவார்ட்ஸ் ஸ்டேஜ்ல ஏறும்போது அடுத்து என்னனுதான் தோணும். இந்த வருஷம் இந்த அவார்டு வாங்கிட்டேன். அடுத்து என்னங்கிற கேள்விதான் இருக்கும். இந்த வருஷம் நான் எதிர்பார்க்கவே இல்லை. அடுத்து புதுசா வர்ற திறமைசாலிகளை ஊக்குவிக்கணும். அவங்களுக்கு இந்த மாதிரி எதுக்காகவும் சீரியலை விட்டுட்டு போகாம டெடிகேட்டிவா இருங்கனு சொல்லணும்னு நினைச்சிக்கிட்டிருந்த ஒருத்திக்கு டெடிகேஷன் அவார்ட்னே ஒண்ணு கொடுத்தாங்கனா எப்படி இருக்கும். ரொம்ப எமோஷனலா ஃபீல் பண்ணேன்."

  இந்த ஸ்பெஷல் விருது உங்களுக்கு உத்வேகம் கொடுத்திருக்கா?

  இந்த ஸ்பெஷல் விருது உங்களுக்கு உத்வேகம் கொடுத்திருக்கா?

  "சரவணன் மீனாட்சி சீரியல் பண்ணும்போது எனக்கு சந்தோஷமும் கிடைச்சிருக்கு. அவமானமும் கிடைச்சிருக்கு. இது எல்லாத்துக்குமான ஆறுதலா எனக்கு ஒவ்வொரு வருஷமும் அவார்டு கொடுக்கிறமாதிரி இருக்கும். சரிம்மா சரிம்மா, பரவால்லம்மா.. அழாதனு என்னோட கஷ்டங்களுக்கெல்லாம் ஆறுதல் படுத்துறமாதிரி இருக்கும். அது ஒரு மிக்ஸ்டு ஃபீலிங். இந்த ஆயிரம் மட்டும் இல்ல. இன்னும் நல்லா தொடர்ந்து பண்ணினாங்கனா 2000 எபிஸோட் கூட கொண்டு போகலாம்."

  தமிழ் இவ்ளோ அழகா பேசுறீங்களே?

  தமிழ் இவ்ளோ அழகா பேசுறீங்களே?

  "தமிழ் நல்லா பேசுறது மட்டும் இல்ல நல்லா வாசிக்கவும் செய்வேன். எழுதுறதுக்குத்தான் கொஞ்சம் லேட் ஆகும். என்னோட ஆர்டிகள்ஸ் பப்ளிஷ் ஆகும்போது யாராவது படிச்சுக் காட்டுங்களேன்னு ஏங்குவேன். நான் தமிழ் படிக்க ஆரம்பிச்சதுக்கான காரணமே அதுதான்." நிறைவாகப் பேசி முடிக்கிறார் தமிழ் சீரியல் உலகின் அர்ப்பணிப்பு மிகுந்த நடிகை ரச்சிதா மஹாலட்சுமி.

  English summary
  Rachitha Mahalakshmi is the favorite actress of many Tamil fans through 'Saravanan Meenatchi' serial. She was married to Dinesh, starring in the serial 'Pirivom santhippom'. Rachitha got '6 years of dedication' award at the Vijay television Awards. Here is an interview with Rachitha..
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X