»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல்ஹாசனை விட்டுப் பிரிந்து இருக்கும் மாஜி நடிகை சரிகா "புன்னகை பூவே" என்ற தமிழ்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார்.

மிகவும் சந்தோஷமாகத்தான் கமலுடன் குடும்பம் நடத்தி வந்தார் சரிகா. அவர்களுக்குப் பிறந்தஇரண்டு மகள்களும் கூட தற்போது நன்கு வளர்ந்து விட்டனர். நடிகை சிம்ரனுடன் கமலுக்குக் காதல்ஏற்பட்ட பின்னர் அவருக்கும் சரிகாவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு சென்னையில் உள்ள தங்கள் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து சரிகா தவறிவிழுந்து பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து மும்பை சென்று சிகிச்சை பெற்ற சரிகா அங்குள்ளதன் தாய் வீட்டில்தான் தங்கியுள்ளார்.

அவருக்கும் கமலுக்கும் இடையே நிரந்தரமாகப் பிரிவு ஏற்பட்டு விட்டது. மும்பையில் மாடலிங்நிறுவனத்தை நடத்தி வரும் சரிகாவுடன் தான் மகள்களும் உள்ளனர்.

இரண்டு மகள்களும் சென்னைக்கும், மும்பைக்குமாகப் பறந்து அவ்வப்போது கமல்ஹாசனைசந்தித்துத் திரும்புகின்றனர். இந்நிலையில் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் வெள்ளித்திரையில் தலையைக் காண்பிக்கப் போகிறார் சரிகா, அதுவும் தமிழ்ப் படத்தில்.

கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் உருவாகும் "புன்னகை பூவே" படத்தில் சரிகா ஒரு கேரக்டரில்நடிக்கிறார். மேலும் அந்தப் படத்தில் ஒரு பாட்டுக்கும் டான்ஸ் ஆடப் போகிறாராம்.

இது குறித்து சென்னையில் நிருபர்களிடம் பேசிய சரிகா,

நான் 4 வயதிலேயே நடிக்க வந்தவள். ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ளேன். நடிப்புக்குமுழுக்குப் போட்டு சென்னைக்கு நான் வந்து 17 ஆண்டுகள் ஆகி விட்டன. புகழ்பெற்ற நடிகைஜெனிபர் தன் 60 வயதில் கூட கதாநாயகியாக நடித்தபோது நான் ஹீரோயினாக நடிக்கக் கூடாதா?

சினிமா எனக்குப் புதிதல்ல. இது தொடர்பான சில விஷங்களை நானும் அறிந்தவள்தான். கமல்நடித்த பல படங்களில் நான் காஸ்ட்யூம் டிசைனராகப் பணி புரிந்துள்ளேன்.

"புன்னகை பூவே" படத்தில் நல்ல ரோல் உள்ளதாகவும், அதில் நான்தான் நடிக்க வேண்டும் என்றும்தாணு கேட்டுக் கொண்டார். எனக்கும் அந்த கேரக்டர் பிடித்திருந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். மேலும் இந்தப் படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடனம் ஆடவுள்ளேன்.

நான் மீண்டும் நடிக்க வந்துள்ளதற்கு எந்தவிதமான நிர்ப்பந்தமும் இல்லை. எனக்குப் பிடிக்கும்வகையில் கேரக்டர்கள் வந்தால் தொடர்ந்து நடிப்பேன் என்றார் சரிகா.

பேட்டி துவங்கும் முன்பே, இந்தப் படம் சம்பந்தமாக மட்டுமே நான் பேச விரும்புகிறேன்.கமலுக்கும் எனக்கும் இடையே உள்ள பிரச்சனை எங்கள் சொந்த விவகாரம். அது குறித்து எதுவும்என்னிடம் கேட்காதீர்கள் என்று நிருபர்களிடம் கூறிவிட்டார்.

என் சொந்தப் பிரச்சனைகள் குறித்து மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.எங்கள் பிரச்சனைக்கும் நான் நடிக்க வந்ததற்கும் முடிச்சுப் போட்டு கண்டபடி பத்திரிக்கைகளில்எழுதி சங்கடப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

கமல் ஒருநாள் திடீரென என்னைவிட்டுப் பிரிந்தார். இதுவரை என்னைப் பார்க்க வரவில்லை.இதற்கு மேல் இதில் சொல்ல ஒன்றுமில்லை என்றார்.

"கமலுடன் நடிப்பீர்களா?" என்று அப்போது ஒரு நிருபர் கேட்டார். "ஏன் கூடாது?" என்று சட்டென்றுபதில் வந்தது சரிகாவிடமிருந்து. "தமிழகத்தில் மட்டுமல்ல. இந்தியாவிலேயே சிறந்த நடிகர் கமல்.அவருடன் நடிக்க வாய்ப்பு வந்தால் கட்டாயம் நடிப்பேன்" என்றார் லேசாக புன்னகைத்தவாறே.

"உங்கள் மூத்த மகள் நடிக்க வருவாரா?" என்று கேட்டபோது, "என்னுடைய மகள் நிச்சயம் நடிக்க வரமாட்டாள். அப்பா, அம்மா செய்யும் தொழிலையே குழந்தைகளும் பின்பற்ற வேண்டியஅவசியமில்லை. இது மாதிரி ஏன் வெட்டிக் கேள்வி கேட்கிறீர்கள். உங்கள் மகளை நடிக்கவைப்பீர்களா என்று பட்டென பதில் வந்தது.

தனிப்பட்ட முறையில், சொந்தப் பிரச்சனைகள் குறித்து கேள்விகள் கேட்க வேண்டாம் என்றுபேட்டியின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை பல முறை நிருபர்களிடம் கூறிக் கொண்டே இருந்தார்சரிகா.

உங்களுக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லையாமே என்று ஒரு நிருபர் கேட்க, கடுப்பானார் சரிகா.உங்களிடம் என்ன வாகனம் இருக்கு... சைக்கிள் இருக்கா... அது அவரவர் வசதியைப் பொறுத்தது.தனிப்பட்ட விஷயத்தை ஏன் கிளறி எடுக்கிறீர்கள் என்று கோபத்துடன் பதில் தந்துவிட்டு பேட்டியைமுடித்துக் கொண்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil