»   »  பஸ்சில் கிடைத்த சகி

பஸ்சில் கிடைத்த சகி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாயவரத்திலிருந்து ஒரு பச்சைக் கிளி கோலிவுட்டுக்குப் பறந்து வந்துள்ளது. அவர் பெயர் சகி.

பாண்டியராஜன் மகன் பிருத்வி ஹீரோவாக நடிக்கும் 2வது படம் நாளைய பொழுதும் உன்னோடு. இதில் அவருக்கு ஜோடி போடுபவர் கார்த்திகா.

தூத்துக்குடி, பிறகு ஆகிய படங்களைத் தொடர்ந்து கார்த்திகா நடிக்கும் மூன்றாவது படம் இது. முதல் படத்தில் முத்திரை பதித்த கார்த்திகா, 2வது படத்தில் அதிகம் பேசப்படவில்லை.

இந்த நிலைலயில் அவரைத் தேடி வந்துள்ள இந்த மூன்றாவது வாய்ப்பின் மூலம் தனது முழுத் திறமைகளையும் கொட்டி கலக்க தயாராகி வருகிறார்.

இப்படத்தில் இன்னொரு நாயகியும் உண்டு. அவர்தான் சகி. மாயவரத்துக்காரர். ஆனால் வளர்ந்தது, படித்தது எல்லாம் மலேசியாவில்தானாம்.

இவரைப் பிடித்ததே ஒரு சுவாரஸ்யமான கதை. படத்தின் இயக்குநர் மூர்த்தி கண்ணன் மாயவரத்தைச் சேர்ந்தவர். சகியைப் பிடித்த கதை குறித்து அவர் கூறுகையில், மாயவரம் பக்கமாக நான் பேருந்தில் போய்க் கொண்டிருந்தபோதுதான் சகியைப் பார்த்தேன்.

நான் நினைத்திருந்த நாயகி, சகி ரூபத்தில் தெரியவே அவரை நடிக்க வைக்க முடிவு செய்தேன். ஆனால் நேரடியாக கேட்க எனக்குத் தயக்கமாக இருந்தது.

இதனால் எனது தந்தை கலியமூர்த்திக்கு மாயவரத்தில் தனி மரியாதை உண்டு. அவர் மூலமாக சகியை அணுகி அவரிடம் விருப்பத்தைச் சொல்லி நாயகியாக்கினேன் என்றார்.

சரி படத்தோட கதை என்ன என்று கேட்டபோது, இது காதலின் உணர்வுகளை சொல்லும் படம். காதல் என்பது உணர்வது, அனுபவிப்பது. அதையே எனது படத்தின் கருவாக வைத்துள்ளேன்.

16 வயது முதல் 21 வயதுக்குள்தான் உண்மையான காதல் வரும். அந்தப் பருவத்தில்தான் ஒருவருக்காக இன்னொருவர் உயிரைக் கூடக் கொடுக்கத் தயங்காத உணர்வும் வரும்.

இந்தப் படத்தின் கதை கற்பனை அல்ல. நான் சந்தித்த ஒரு சம்பவம்தான் படமாகிறது. கார்த்திகா, சகி தவிர மலையாள இயக்குநர் டி.வி.சந்திரன், அஜந்தா என்ற படத்தைக் கொடுத்த இயக்குநர் கதாக.திருமாவளவன், லிவிங்ஸ்டன் என பலரும் படத்தில் உள்ளனர்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். படப்பிடிபபுக்கு 2 வாரங்களுக்கு முன்பு, ஹீரோ, ஹீரோயின்கள் உள்ளிட்ட அனைத்துக் கலைஞர்களுக்கும் நடிப்புப் பயிற்சி கொடுத்தோம். எனவே படம் மிகப் பிரமாதமாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் மூர்த்தி கண்ணன்.

இவர் பி.வாசுவிடம் உதவியாளராக இருந்தவராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil