»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

எனது வாழ்க்கையில் இதுவரை 3 முறை காதல் வயப்பட்டுள்ளேன். மூன்று முறையும் நான் தோல்வி கண்டுள்ளேன் என்று உண்யைைக்கூறியுள்ளார் இயக்குனர் செல்வராகவன் கூறியுள்ளார்.

மதுரை திருநகர் தேவி கலைவாணி திரையரங்கில், 7 ஜி ரெயின்போ காலனி படம் 50 நாட்களைத் தாண்டிய ஓடுவதைத் தொடர்ந்து வெற்றிவிழா நடந்தது. அதில் படத்தின் நாயகன் ரவி கிருஷ்ணா, நாயகி சோனியா அகர்வால், செல்வராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செல்வராகவன் பேசுகையில், மதுரை நான் பிறந்த மண். இதே மதுரையில் எனது கடந்த காலத்தை நான் நினைத்துப் பார்க்கிறேன். எனதுதாயாருடன் சேர்ந்து வைகை ஆற்றங்கரையில் துணிகளைத் துவைத்துள்ளேன். அதெல்லாம் எனது மனதில் நிழலாடுகிறது.

மற்றவர்கள் மீது அன்பு காட்டுவதில் மதுரை ரசிகர்களுக்கு நிகர் யாரும் இல்லை. யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை நீங்கள். அந்த அன்பில்நான் இன்று திக்குமுக்காடிப் போயுள்ளேன்.

மதுரைக்கு வந்தாலே நாம் தமிழர்கள் என்ற உணர்வு மேலோங்கிவிடும். தூய தமிழ் பேச்சை இங்கு தானே கேட்க முடியும்.

ரசிகர்களே, ஒரு விஷயத்தில் மட்டும் கவனமாக இருங்கள். காதலியுங்கள், ஆனால் காதலே வாழ்க்கை என நம்பி, ஏமாற்றம் வரும் போதுஉடைந்து போய் விடாதீர்கள்.

காதல் வரும், போகும், ஆனால் வாழ்க்கை?. எனக்கு வாழ்க்கையில் 3 முறை காதல் வந்தது, அதே வேகத்தில் போய் விட்டது.

காதல் கொண்டேன் படத்தில் வரும் வினீத் கதாபாத்திரம், 7ஜி படத்தில் வரும் கதிர் ஆகிய பாத்திரங்கள் வேறு யாரும் இல்லை, அதுநான்தான்.

இப்போதெல்லாம் தகுதியைப் பார்த்துதான் காதலே வருகிறது. யாரும் மனதைப் பார்ப்பதில்லை. காதலிக்கும் முன் நம்மைப் பற்றி அந்தபெண் ரொம்பவே யோசிக்கிறார். காதலன் கை நிறைய சம்பாதிக்கிறானா, வாழ்நாள் முழுவதும் வைத்துக் காப்பாற்றுவானா? என்றுதகுதியைப் பார்த்துதான் காதலே வருகிறது என்றார் செல்வராகவன்.

செல்வராகவனால் காதலிக்கப்படும் நடிகை சோனியா அகர்வால் மிகவும் சுருக்கமாக பேசி அமர்ந்தார்.

மதுரை ரசிகர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று 7 ஜி படத்தில் வரும் கண் பேசும் காதல் தெரிவதில்லை என்ற பாடலின் சில வரிகளைசோனியா அகர்வால் பாடினார். பாடினார் என்பதை விட பேசினார் என்பதே சரி. ஆனாலும் அதற்கும் கைதட்டலும் கிடைத்தது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil