Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
நான் தீவிர தல ரசிகன் … நடிகர் துருவா சர்ஜா சிறப்பு பேட்டி!
சென்னை: தமிழ் சினிமாவின் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் சகோதரியின் மகன் துருவா சர்ஜா நடிப்பில் வெளிவரவுள்ள படம் செம திமிரு.
இந்த படத்தில் துருவா சர்ஜாவுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார், நந்தகிஷோர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
செம திமிரு படத்தை குறித்தும், இன்னும் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்தும் க்ளோஸ் கால் நிகழ்ச்சியில் பேட்டியளித்துள்ளார் துருவா சர்ஜா.

8நாட்கள் படப்பிடிப்பு
செம திமிரு படத்தின் கிளைமாக்ஸ் காட்சி குறித்து பேசிய துருவா சர்ஜா இரண்டு நாள் ஒத்திகை, மீதமுள்ள 6 நாட்கள் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளை படமெடுத்ததாகவும், ஒரு சில சண்டை காட்சிகளில் உண்மையாகவே அடித்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

தீனா, மங்காத்தா
தமிழில் பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு ஆக்ஷன் கிங் அர்ஜுன் எனவும், அவருக்கு பிறகு தல அஜித்குமாரை மிகவும் பிடிக்கும் எனவும் கூறியுள்ளார். அஜித்தின் தீனா, மங்காத்தா ஆகிய படங்களை மிகவும் விரும்பி பார்த்ததாகவும் கூறியுள்ளார். அஜித்தின் தீவிர ரசிகன் நான் எனவும் கூறினார்.

திமிரான படங்கள்
தமிழில் விஷால் நடிப்பில் திமிரு, விஜய் ஆண்டனி நடிப்பில் திமிரு பிடிச்சவன் ஆகிய படங்கள் வரிசையில் செம திமிரு படம் வெளிவரவுள்ளது. மேலும், இந்த தருணத்தில் யாருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் என் நன்றி தெரிவித்துக்கொள்வாக கூறினார்.

பிப்ரவரி 19 வெளியீடு
தமிழ் ரசிகர்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறீங்க என்ற கேள்விக்கு, தமிழில் தன்னுடைய முதல் படமான செம திமிரு திரைப்படம் பிப்ரவரி 19 அன்று வெளியாகிறது, அனைவரும் குடும்பத்துடன் சென்று பார்த்து தன்னை ஆசீர்வதிக்க வேண்டும் என பேட்டியளித்துள்ளார் துருவா சர்ஜா.