»   »  தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் நிலை பரிதாபத்துக்குரியது! - சீனியர் நடிகை லட்சுமி

தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் நிலை பரிதாபத்துக்குரியது! - சீனியர் நடிகை லட்சுமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் நிலைமை பரிதாபத்துக்குரியது என்கிறார் மூத்த நடிகை லட்சுமி.

தலைமுறைகள் தாண்டி தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை லட்சுமி.

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமலுடன் நடித்தவர், இப்போது எஸ்பி பாலசுப்பிரமணியத்துடன் மூணே மூணு வார்த்தை படத்தின் தமிழ், தெலுங்குப் பதிப்புகளில் நடித்து வருகிறார்.

எஸ்பிபியுடன்...

எஸ்பிபியுடன்...

இந்தப் படத்தில் நடித்தது குறித்து நடிகை லட்சுமி கூறுகையில், "இப்படத்தில் நடித்த அனைவருமே எனக்கு பரிச்சயம் இல்லாதவர்கள். இவர்களுடன் நடிப்பது எனக்கு புது அனுபவமாய் இருந்தது. நகைச்சுவை கலந்த காதல் படத்தை முழுக்க முழுக்க வித்தியசமான கதை களத்தில் தந்திருக்கிறார் இயக்குனர் மதுமிதா. எஸ்பிபி சாருடன் தெலுங்கில் நான் நடித்த ‘மிதுனம்' பெரிதும் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழில் நாங்கள் இணையும் முதல் திரைப்படம்' மூணே மூணு வார்த்தை'.

தாத்தா - பாட்டி

தாத்தா - பாட்டி

முதலில் எங்களை நாயகனின் அப்பா அம்மாவகத்தான் நடிக்க சொன்னார் மதுமிதா. நாங்கள் சற்று தயங்கியதைத் தெரிந்தவுடன் உடனே சில மாறுதல்களுடன் தாத்தா பாட்டி கதாப்பாத்திரங்களாக மாற்றியமைத்தார்.

எனக்கு பாட்டியாக நடிப்பதில் எந்த தயக்கமும் இல்லை. உண்மையில் நான் பாட்டிதானே!," என்கிறார்.

இயக்குநர் மதுமிதா

இயக்குநர் மதுமிதா

மதுமிதாவுடன் பணிபுரிந்த அனுபவங்களைப் பற்றிக் கேட்டபோது, "இன்றைய காலகட்டத்தில் பெண் இயக்குனர்கள் மிகுந்த அனுபவத்தோடும், சினிமாவை பற்றிய ஆழந்த சிந்தனையுடன் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். மதுமிதா தனக்கு என்ன வேண்டுமென்று நன்கு அறிந்தவர். அத்தகைய தெளிவு இல்லாமல் குறுகிய காலத்தில் இரு மொழிப் படத்தை இயக்குவது சாத்தியமன்று.

பரிதாப கதாநாயகிகள்

பரிதாப கதாநாயகிகள்

தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் நிலைமைதான் மிகவும் பரிதாபத்துக்கு உரியது. அவர்கள் இன்னும் வியாபாரத்துக்கான ஒரு பொம்மையாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்.

வாழ்த்துகள்

வாழ்த்துகள்

இப்படத்தில் நடித்த அர்ஜுன், வெங்கி, அதிதி மற்றும் இயக்குனர் மதுமிதா அவர்களுக்கு எனது மானமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்தை தயாரிக்கும் எஸ்பிபி சரண் அவர்களுக்கு எனது நன்றிகளை தெறித்து கொள்கிறேன். ‘மூணே மூணு வார்த்தை' திரைப்படம் குடும்பத்துடன் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஒரு திரைப்படம்," எனக் கூறி விடை பெற்றார் நடிகை லட்சுமி.

English summary
Senior actress Lakshmi says that the present day heroines used like puppets for cinema business.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil