ஜீ தமிழ் சீரியல்கள் 24 செப்டம்பர்: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!
கெட்டிமௌம்: நேற்றைய எபிசோடில், வெற்றி, துளசி இருவரும் சிவராமனை தேடிவந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். ஒரு குடோனில் வெற்றி. துளசி வர இங்கு மகேஷ் வந்து நிற்க அவனைப் பார்த்து இவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். அதன் பிறகு மூவரும் சேர்ந்து முகமூடி அணிந்து ஓரமாக உட்கார்ந்து இருக்கும் ஒருவரை முகத்தை விளக்கி பார்க்க அது சிவராமன் இல்லை என்பது தெரிய வருகிறது. மறுபக்கம் மகேஷ் வீட்டுக்கு வந்த இன்சூரன்ஸ் கம்பெனிக்காரர்கள் நாங்க தான் தப்பான ரிப்போர்ட் கொடுத்துவிட்டோம். இறந்தது சிவராமன் தான். அவருடைய இன்சூரன்ஸ் கிளைம் கூடிய விரைவில் உங்களுக்கு வந்து சேரும் என்று சொல்லிவிட்டு செல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
உடனே அஞ்சலி துளசிக்கு போன் போட்டு நடந்த விஷயத்தை சொல்ல துளசி, அம்மா அவங்க சொல்றது இங்க நடக்கிறது எல்லாம் வச்சு பார்த்தா அப்பா உயிரோடு இல்லன்னு தான் தோணுது என்று உடைந்து போகின்றனர். எல்லோரும் கண்கலங்க மகேஷ் நல்லவன் போல வேஷம் போட்டு அங்கிருந்து கிளம்பி ஒரு குடோனுக்கு வருகிறான். மகேஷ் நடந்து வர பிளாஷ்பேக் ஓபனாக அவன் உயிரோடு இருக்கும் சிவராமனை அங்கிருந்து தூக்கி அவருக்கு பதிலாக வேறொரு ஆளை மாற்றி வைத்தது தெரிய வருகிறது. முகமூடி அணிந்து உட்கார வைக்கப்பட்டிருக்கும் சிவராமனை பார்த்து மகேஷ் என்ன மாமா என்கிட்ட இருந்து இனிமே உங்களால தப்பிக்கவே முடியாது. அவங்கள மாதிரி இனி நீங்களும் இங்க தான் இருக்கணும் என்று சொல்ல முருகனின் அம்மாவும் கட்டி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வருகிறது.


பாரிஜாதம்: நேற்றைய எபிசோடில் ருக்குமணி சுப்ரஜா வீட்டில் கொடுத்த ஜாதகத்தை மாற்றி வைக்க முடிவெடுத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்பதை பார்க்கலாம். அதாவது, ருக்குமணி மங்கா இருவரும் இசையை அழைத்து சென்று ஜாதகத்தை மாற்றி வைக்க சொல்லி திட்டம் போடுகிறாள். இதனை தொடர்ந்து இசை, நடந்து செல்லும் போது மங்கா அவளை சந்தித்து ஆட்டோவில் ஏற்றி செல்கிறார். உன் தங்கச்சி வாழ்க்கைக்காக நீ கொஞ்சம் பொய் சொல்லணும் என்று சொல்லி சம்மதிக்க வைக்கிறாள்.
மறுபக்கம் சுப்ரஜா ஜோசியரை பார்க்க வருகிறாள், இன்னொரு பக்கம் விஷால், ஸ்ரீஜாவுடன் அவளது வீட்டிற்கு வர அது ஒரு பெரிய மியூசிக் டைரக்டரின் வீடு எனவும் ஸ்ரீஜா அவளுடைய மகள் என தெரியவர அவன் ஷாக் ஆகிறான். அடுத்து இசை வந்து ஜாதகத்தில் கோவிலில் கொடுத்த பூவை வைக்க வேண்டும். அப்படி வைத்து கொடுத்தால் எல்லாம் நல்லதாக நடக்கும் என்று சொல்லி ஜாதகத்தை வாங்க மங்கா நேரம் பார்த்து ஜாதகத்தை மாற்றி வைக்க சொல்கிறாள். இசையும் மாற்றி வைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











