Exclusive Interview: வித்யூத் ஜமால் எல்லாம் மனுஷனே இல்லை.. மதராஸி வில்லன் ஷபீர் கல்லரக்கல் பேட்டி!

சென்னை: நடிகர் ஷபீர் கல்லரக்கல் தமிழ் பிலிமிபீட்டுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 'மதராஸி’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, சண்டை காட்சிகளில் அவர் எந்தளவுக்கு அர்ப்பணிப்புடன் நடித்தார் என்பதை விவரித்தார்.

ஷபீர், தான் ஒரு "சினிமா பைத்தியம்" என்றும், சிறுவயதில் இருந்தே திரைப்படங்களின் மீது தீராத காதல் கொண்டவன் என்றும் கூறினார். அதுமட்டுமின்றி, நடனத்தின் மீது உள்ள ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார்.

Shabir Kallarakkal shares Madarasi Experience in an Exclusive Interview

'மதராஸி’ படத்தில் நடித்தது குறித்து பேசிய ஷபீர், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுடன் பணியாற்றிய அனுபவம் மிகவும் சிறப்பானதாக இருந்தது என்று குறிப்பிட்டார். முருகதாஸ் ஒரு சிறந்த மனிதர் என்பதையும், சக நடிகர்களிடம் நட்பாக பழகக்கூடியவர் என்பதையும் அவர் பாராட்டினார்.

Shabir Kallarakkal shares Madarasi Experience in an Exclusive Interview
Photo Credit:

வித்யூத் ஜமாலுடன் இணைந்து நடித்த அனுபவத்தையும் ஷபீர் பகிர்ந்துகொண்டார். வித்யூத் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த மனிதரும் கூட என்று அவர் கூறினார். மேலும், வித்யூத்தின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பைப் பார்த்து தான் வியந்ததாகவும் கூறினார். என்ன மனுஷன் டா என்றும் இவரெல்லாம் மனுஷனே இல்லை என்றும் கூட தோன்றியது என்று வியந்தார்.

சிராக் கதாபாத்திரத்திற்காக தன்னை தயார்படுத்தியது பற்றி ஷபீர் கூறுகையில், "அந்த கதாபாத்திரம் ஒரு மாதிரி ஹைப்பர் எனர்ஜியுடன் இருக்கும். எப்பவும் எதையாவது சாதிக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டே இருப்பான்" என்றார்.

தொடர்ந்து பேசிய ஷபீர், நடனத்தில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார், ஆனால் அது மிகவும் சவாலானதாக இருந்தது என்று கூறினார். 23 வருடங்களுக்கு பிறகு நடனம் ஆடியது சற்று சிரமமாக இருந்தது என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டார் நம்ம டான்ஸிங் ரோஸ்.

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற வெறியும் ஆர்வமும் இருந்தால், யார் வேண்டுமானாலும் உயரங்களை தொடலாம் என்பதை சிவகார்த்திகேயனை பார்த்து தான் கற்றுக்கொண்டேன். அந்த மனுஷன் தனக்கு கிடைத்திருக்கும் இடத்தை தக்க வைத்துக் கொள்ளவும் அதை தாண்டி முன்னேறி செல்லவும் கடுமையாக கஷ்டப்படுகிறார். சும்மா ஜாலியாக கேரவனில் இருந்தால் மட்டும் இப்படியொரு இடத்தை எந்த ஊரிலும் ரசிகர்கள் தந்து விட மாட்டார்கள் என்றும் ஷபீர் கல்லரக்கல் தன்னுடைய இன்ஸ்பிரேஷனாக சிவகார்த்திகேயனை பார்ப்பதாக அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X